சிறுநீரகங்கள் செயலிழப்பது என்றால் என்ன?
பிரதானமாக சிறுநீரகங்கள், கழிவுப் பொருட்களை வடிகட்டி இரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியே தள்ளுகிறது. உப்புத் தன்மையுள்ள திரவங்களையும் அது வெளியேற்றுகிறது. மின் கடத்தும் திரவங்களின் நிலையையும் சமநிலையாக்கி, அமிலங்களின் அளவையும் சரியான அளவில் வைக்கிறது. இந்தச் வேலையை அது சரிவரச் செய்ய முடியாத நிலைக்குத்தான் சிறுநீரகங்கள் செயலிழப்பது என்கிறோம்.
சிறுநீரகங்களின் செயலிழப்பை எப்படிக் கண்டுபிடிப்பது?
இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினைனின் அளவும், யூரியாவின் அளவும் சிறுநீரகத்தின் செயல்திறனை பிரதிபலிக்கின்றன. அவற்றின் அளவுகள் கூடினால், சிறுநீரகங்களின் செயல்பாடு போதுமான திறன்மிக்கதாக இல்லை. மேற்கண்ட கிரியேட்டினைனின் அளவில் வெகு குறைவான அதிகமே தென்பட்டால் கூட, சிறுநீரகத்தின் செயல்பாட்டில் திறன் குறைந்து விட்டது என்று அர்த்தம். மேற்கண்ட இரசாயனப் பொருளின் அளவு 1.6 மி.கி. / டெ.லி. ஆக இருந்தால் கூட, சிறுநீரகங்களின் செயல்திறனில் 50 சதவீதம் குறைந்து விட்டது என்று அர்த்தம்.
ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும் செயலிழந்த நிலையில் முழுமையாகச் சிறுநீரகம் பழுதாகி விட்டது என்று சொல்ல முடியுமா?
இல்லை. ஒன்றே ஒன்று மட்டும் செயலிழப்பது ஒட்டுமொத்தமாக சிறுநீரக செயல்பாட்டை பாதித்துவிடாது. ஏனென்றால் மற்றொரு ஒன்று ஆரோக்கியத்துடன் இருப்பதால் அது முழு வேலையை ஏற்றுச் செய்கிறது. இரண்டு சிறுநீரகங்களின் வேலையையும் அது ஒன்றே செய்கிறது.
சிறுநீரகங்களின் செயலிழப்பில் இரு பெரும் வகையானவை.
மிக மோசமாகச் செயலிழப்பதும் நீண்ட நெடுங்காலத்திற்கு தொடரும் சிறுநீரக செயலிழப்பும் அவை ஆகும். இதைப் ஆங்கிலத்தில் Acute kidney failure and chronic kidney disease என்று இரண்டையும் சொல்லுவர்.
Acute kidney failure முற்காலங்களில் இதை Acute renal failure ARF என்று கூறுவர். சமீபத்தில் இதற்கு Acute kidney injury என்று சொல்லி வருகிறார்கள்.
சிறுநீரகங்களின் செயல் மிகக் குறைந்த காலத்திலேயே இழக்கப்படுகிறது. இது பலவேறு காரணங்களாலும், உடலுக்கு ஏற்படும் பலவித தாக்கங்களினாலும் ஏற்படுகிறது. இவ்வகை செயலிழப்பு பெரும்பாலும் தற்காலிகமானதாக இருக்கிறது. முறையான சிகிச்சையால், சிறுநீரகங்கள் வெகு சீக்கிரத்தில் சாதாரண நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்ட பெரும்பாலோருக்கு இப்படியே நடக்கிறது.
நீண்ட நெடுநாட்களாகத் தொடர்ந்து
தாக்கி வரும் சிறுநீரக நோய்கள்
பல மாதங்களுக்கு, மெதுவாகவும், தொடர்ந்து மோசமாகிக் கொண்டும், திரும்பவும் சாதாரண நிலைக்குத் திருப்பமுடியாத வகையிலும் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு இந்தப் பெயர் அதாவது ஆங்கிலத்தில் chronic kidney failure என்று பெயர். CRF என்று சொல்லுவர். குணப்படுத்தக் முடியாத இந்த நோயின் தாக்குதலால் சிறுநீரகத்தின் செயல்பாடு மெல்ல மெல்லக் குறைந்து வரும். மற்றும் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வரும்; வெகு நாட்களுக்குப் பிறகு சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழக்கும் நிலைக்கு இது தள்ளி விடும். இந்த மிக முற்றிய நிலையை அதாவது உயிருக்கே சவால் விடும் நிலையைக், முடிவு நிலை சிறுநீரக நோய் என்று kidney disease ESKD என்று சொல்லுவர். அல்லது End stage renal disease என்று சொல்லுவர்.