Read Online in tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

7: சிறுநீரகங்களின் நோய்களை எப்படி தடுப்பது

சிறுநீரக நோய்கள் அமைதியாக நின்று கொல்லக்கூடிய தன்மை பெற்றவை. அவை மெல்ல மெல்ல நடந்து கொண்டே போய் சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்து, இறுதியில் செயற்கையாகச் சிறுநீரை வெளியேற்றும் டயாலிசிஸ் சிகிச்சை செய்யத் தள்ளும்; அல்லது உயிர் பிழைக்க வேண்டுமானால் மாற்று சிறுநீரகங்களைப் பொருத்தச் செய்யும். ஒத்துப்போகக் கூடிய சிறுநீரகங்கள் கிடைப்பது அரிதாகையினாலும், அதற்காகக் கொடுக்க வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாலும், முன்னேறிய நாடுகளில் கூட, 5-லிருந்து 10 சதவீத நோயாளிகளுக்கே டயாலிசிஸ் சிகிச்சையோ அல்லது மாற்று சிறுநீரகங்கள் பொருத்துவதோ நடக்கிறது. மற்றவர்கள் அந்த வசதி இல்லாமல் போய் இறக்கவே செய்கிறார்கள். அதற்கு மாற்று மருத்துவமும் அறுவை சிகிச்சையும் கிடையாது. மிக மோசமான நிலையை அடைந்து விடும் சிறுநீரக பாதிப்பு நோய் என்பது மிகவும் சாதாரணமாகவும் பரவலாகவும் தாக்கக் கூடிய நோயே. அதற்கு எந்தவித குணப்படுத்தும் முறையும் கிடையாது. ஆகவே தடுப்பது ஒன்றே வழி. விரைவாக நோயை அடையாளம் கண்டுகொள்வதும், முறையான சிகிச்சையும் சரியான வழி மற்றும் நோயை முற்றவிடாமல் செய்யும். டயாலிசிஸ் செய்ய வேண்டிய தேவையை ஒத்திப்போடும். அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்த வேண்டிய நாளை ஒத்திப்போடும்.

சிறுநீரக நோய்களை எப்படித் தடுப்பது?

உங்கள் சிறுநீரகங்களை என்றைக்கும் உதாசீனப்படுத்தாதீர்கள். இந்த நோய்களைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அந்த நோய்களுக்கு செலுத்த வேண்டிய கவனம் பற்றியும் இரு வகைகளாகப் பிரித்து இந்தப் புத்தகத்தில் ஆராயப்படுகிறது.

  1. ஆரோக்கியமான நபர் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.
  2. நோய் வந்து விட்டால் அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

ஆரோக்கியமானவர் அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

மொத்தம் ஏழு வழிகள் - சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள.

1. எப்போதும் உடல்நலத்தை உச்ச கட்டத்திலேயே வைத்துக் காத்து வாருங்கள்.

முறையான உடற்பயிற்சியும் அன்றாடம் உடல் உழைப்பு மிக்க வேலைகளும் செய்தால் இரத்த அழுத்தம் சரியான நிலையில் வைக்கப்படும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு முறையான எல்லைக்குள் இருக்கும்.

2. சமச்சீரான உணவு.

ஆரோக்கியமான உணவையே சாப்பிட்டு வாருங்கள். உணவில் புதிய பச்சைப் பசுமையான காய்கறிகளும், பழங்களும் சேரட்டும். சுத்திகரிக்கப்பட்டு அல்லது உணவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாமிசம் கலந்த உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். 40 வயதிற்கு மேல் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தம் மிகாமல் பாதுகாக்கும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாது.

3. உடல் எடையை என்றைக்கும் குறித்து வாருங்கள்! உடல் எடையை, சமச்சீரான உணவு மூலமும், உடற்பயிற்சி மூலம் சரிவரப் பேணிவாருங்கள். இது நீரிழிவு நோயை வராமல் தடுக்கிறது. இதய நோய்களை வராமல் தடுக்கிறது. இன்னும் மிக மோசமாகத் தாக்கும் சிறுநீரக நோய்களிலிருந்து காக்கும்.

4. சிகரெட் புகைப்பதையும் புகையிலை பொருட்களையும் தவிருங்கள். சிகரெட் புகைப்பது, Atherosclerosis எனும் நோயைக் கொண்டு வரும். இது சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தத்தைக் குறைக்கிறது; ஆகவே சிறுநீரகங்கள் திறன் மிக்க நிலையில் வேலை செய்ய முடியாது.

5. OTC Pain Killers - கடை கவுண்டரில் விற்கப்படும் வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். இதை அதுவும் வெகு முறையாகவே வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்டெராய்டாக இல்லாமல் வீக்கத்தைக் குறைக்கும் ibuprofen போன்ற மருந்துகள் - காலம் தவறாமல் எடுத்துக் கொண்டால் - சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது வலி நிவாரணத்திற்கு என்றால் உங்கள் மருத்துவரைக் கண்டு ஆலோசித்து மருந்து வாங்கிச் சாப்பிடுங்கள். சிறுநீரகங்களை அதற்கு பணயம் வைக்காதீர்கள்.

6. ஏராளமாக குடிநீர் பருகுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் நீராவது பருகுங்கள். இது சிறுநீரை மேலும் நீர்க்க வைக்கும். அப்படிச் செய்து உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரக நோய்களை வராமல் தடுக்கும்.

7. வருடத்திற்கு ஒரு முறை, சோதித்துக் கொள்ளவும். சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் வெகு அமைதியாகவே நின்று பாதிக்கும் குணமுடையவை. மிக மோசமான நிலைக்கு முற்றினால் ஒழிய இந்த நோய்கள் எந்தவித அறிகுறிகளையும் காட்டுவதில்லை. சிறுநீரகங்களை அவ்வப்போது முறையாக சோதித்து அறிய வேண்டும். ஆனால் அடிக்கடி அல்லது பெரும்பாலும் இந்த வழிமுறை உதாசீனப்படுத்தப்படுகிறது. அதுவும் அபாயச் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ள நபர்களுக்கு அதாவது நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அல்லது குடும்பத்தில் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். உங்கள் சிறுநீரகங்களை நீங்கள் உண்மையிலேயே நேசித்தால், அதைவிட உங்கள் உயிரையே நீங்கள் நேசித்தால், அவசியம் அடிக்கடி சிறுநீரகங்களை சோதித்து வரவும். அதுவும் 40 வயதிற்கு மேல் அவசியம் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளவும். வெகு எளிதான சோதனை ஒன்று உண்டென்றால் அது வருடத்திற்கு ஒரு முறை உங்கள் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொண்டால் போதும். அதனுடன் சிறுநீரைப் பரிசோதித்துக் கொள்ளவும். மற்றும் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவைச் சோதித்துக் கொள்ளவும்.

நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கைகள்

1. சிறுநீரக நோய்களைப் பற்றிக் கற்றுத் தெரிந்து வைத்திருங்கள். அவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். மிகப் பொதுவாகச் சொன்னால் சிறுநீரக நோய்கள் முகத்தில் வீக்கம், பாதங்களில் வீக்கம், பசியின்மை, வாந்தி எடுத்தல், முகம் வெளிறிப் போதல், நலிவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம், அல்லது சிறுநீரில் புரோட்டீன் போன்ற இம்மாதிரியான விளைவுகளைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகி சிறுநீரக நோய்களுக்கு உண்டான சோதனைகளை மேற்கொள்ளவும்.

2. நீரிழிவு நோய் வராமல் சில முன்னெச்சரிக்கைகள். நீரிழிவு நோய் உடைய ஒவ்வொரு நோயாளியும் சிறுநீரக நோய் வராமல் தடுத்துக் கொள்ள, நீரிழிவு ஒன்றே மிக மோசமாக கடைசியில் உருவாகும் சிறுநீரக நோய்களுக்கு எல்லாம் முதற்காரணம். இதுவே உலகம் முழுவதும் காணப்படும் ஒரு நிலை இதில் 45 சதவீத நோயாளிகள் யாவரும் நீரிழிவு சம்பந்தப்பட்ட சிறுநீரக நோயை உடையவர்களாக இருக்கிறார்கள். விரைவாக ஆரம்ப நிலையிலேயே நீரிழிவு நோயை கண்டறிவதற்கு எளிய சோதனைகள் இருக்கின்றன. ஒரு மாதத்திற்கு மூன்று முறை இரத்த அழுத்த நிலையை சோதிக்கவும். சிறுநீரையும் அதே வரிசையில் சோதிக்கவும். சிறுநீரில் புரோட்டீன் இருக்கிறதா என்பதை ஒரு டிப் குச்சியால் சோதிக்கவும். இது மேக்ரோ ஆல்புமினூரியாவைச் சோதிக்கும். மிக விரைவாக நிலையை அறிய அதுவும் நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோயைக் கண்டறிய சிறுநீர்ப் பரிசோதனையாகும். இது வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறனைக் கண்டறிய இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் (and eGFR) ஐயும் சோதிக்கவும். வருடத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யவும்.

உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன், வீக்கங்கள், அடிக்கடி இரத்தத்தில் சர்க்கரை குறைந்து போதல், இன்சுலினின் தேவை குறைதல் மற்றும் நீரிழிவுடன் கூடிய கண் நோய்கள், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான அறிகுறிகளாகும்.

இவ்வகை அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனுக்குடன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

நீரிழிவோடு சம்பந்தப்பட்ட நோய்களை விரட்ட எல்லா நீரிழிவு நோயாளிகளும், அந்த நோயை மிகக் கடுமையான ஒழுங்குடன் இரத்த அழுத்தத்தை 130/80 மி.மீ.க்குள் வைத்தாக வேண்டும். உடல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை உட்கொள்ளுதல் வேண்டும். அவர்கள் உணவில் புரோட்டீனைக் குறைக்க வேண்டும். லிபிட் திரவத்தை அதிகமாகாமல் குறையச் செய்ய வேண்டும்.

3. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

இரண்டாவதாக வரும் மோசமான நிலை உயர் இரத்த அழுத்தமாகும். இதுவே சிறுநீரகங்களை மிக மோசமாக பாதிக்கக்கூடியது. இது தவிர்க்கப்படக்கூடியதே. உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய நோயாளிகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரியாததினால், அவர்கள் பெரும்பாலும் முறைகள் தவிர்த்து ஒழுங்கற்ற இடைவெளிகளில் மருந்து உட்கொள்ளுகிறார்கள். அல்லது சிகிச்சையை தவிர்த்தும் கூட விடுகிறார்கள்.

ஒரு சிலர் மருந்து ஒரு தொந்தரவு என்று நினைத்து சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. கட்டுக்குள் வைக்கப்படாத உயர் இரத்த அழுத்தத்தை நீண்ட நாட்கள் இருக்கும்படி விட்டு விட்டால், சிறுநீரகங்களை மிக மோசமாக பாதிக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதயம் தாக்கப்பட்டு பக்கவாத நோயும் தாக்கலாம்.

சிறுநீரக நோய்களைத் தடுக்க, எல்லா உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், மருத்துவத்தை ஒழுங்கு நிறைந்த இடைவெளி கொடுத்து கடைப்பிடிக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டும். சரியான உணவு உண்ண வேண்டும். உப்பை உணவில் குறைத்தே ஆக வேண்டும். மருத்துவத்தின் எல்லை இரத்த அழுத்தத்தை 130/80 க்கும் கீழே வைப்பதாகும். விரைவாக சிறுநீரக பாதிப்பைக் கண்டறிய எல்லா இரத்த அழுத்த நோயாளிகளும் சிறுநீரையும் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவை வருடத்திற்கு ஒரு முறையாவது சோதித்துக் கொள்ள வேண்டும்.

4. மிக மோசமாக பாதிக்கப்படும் சிறுநீரக நோய்களுக்கு எதிராக சில முன்னெச்சரிக்கைகள். மிக மோசமாக பாதிக்கும் சிறுநீரக நோய் (CKD) குணப்படுத்த முடியாதது ஆகும். ஆனால் விரைவிலேயே அதன் தாக்கத்தைக் கண்டுகொண்டால் அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும், முறையாக தொடர்வது மூலமும், சரியான சிகிச்சைகள் நோயின் தொடர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். டயாலிசிஸ் செய்ய வேண்டிய நாளை மேலும் ஒத்திப் போடக் கொண்டு வரும். அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவதைத் தள்ளிப் போட வைக்கும்.

ஒவ்வொரு நாளும் அவசியம் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அதுவே மேலே சொல்லப்பட்ட மோசமான சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தை 130/80 அல்லது அதற்குக் கீழே வைக்கப் பட வேண்டும். வீட்டிலேயே அடிக்கடி அளந்து பார்த்து ஒரு வரைபடத்தில் குறித்து வர வேண்டும். அந்த வரைபடமே மருத்துவர்கள் சிகிச்சை செய்யப் பெரிதும் உதவும்.

மிக மோசமாக சிறுநீரகங்கள் தாக்கப்படும் நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், நீர் வற்றிப் போதல், சிறுநீர்ப் பாதையில் தடுப்புகள், செப்லிஸ், கொடுக்கப்பட்ட மருந்துகளினால் வரும் விஷ விளைவுகள், இவற்றை சோதித்து அறியவும். இந்த பாதிப்புகளை முறையாக அகற்ற முயற்சி செய்தாலே சிறுநீரகங்களின் மிக மோசமான பாதிப்புக்கள் குறையும்.

5. Polycystic Kidney disease இருப்பதை வெகு விரைவாகவே கண்டு கொண்டு விட்டு மருத்துவத்தில் இறங்குவது எப்படி?

Autosomal dominant polycystic kidney disease (ADPKD) என்பது மிகவும் பொதுவாகவே வரக் கூடியதும் தீவிரமான வகையில் குடும்பப் பாரம்பரியத்தால் வரக் கூடியது. டயாலிசிஸிற்கு வரக் கூடிய நோயாளிகளில் 6 இலிருந்து 8 சதவீதம் இத்தகைய நோயாளிகளாக இருக்கிறார்கள். இந்த நோய் குடும்பத்திலேயே இருக்கக் கூடிய நோயாளி ஒருவருக்கு பெற்ற அபாய சாத்தியக் கூறுக்கு தன்னை ஆளாக்கிக் கொள்கிறார். ஒலிக்கு அப்பால் எழும் அலைகளைக் கொண்டு செய்யப்படும் சோதனைக்கு அவரை உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்தாலே மிக விரைவில் இந்த நோயைக் கண்டறிய முடியும். இந்த நோய்க்கு குணப்படுத்துவது என்ற நிலையே கிடையாது. ஆனால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, சிறுநீரகப் பாதையை தொற்றுக்களிலிருந்து குணப்படுத்துவது உணவில் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை கவனிக்க முடியும். அதனுடன் இவற்றிற்கு ஆதரவாக மருந்தும் வேலை செய்யும். நோய் சிக்கலான நிலைக்குச் செல்லாமல் தடுக்கும். சிறுநீரகம் பழுதாவதை நிதானப்படுத்தும்.

6. குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதையில் வரும் தொற்றுக்களை விரைவாகக் கண்டு கொள்ளுதல்

எளிதில் விளக்க முடியாத காய்ச்சலினால் ஒரு குழந்தை தவிக்க ஆரம்பிக்குமானால், உடனே மேற்கண்ட தொற்று இருக்கிறதா என்பதை சந்தேகப் பட்டு சோதியுங்கள். அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் காணுதல், பசியின்மை, அல்லது எடை மிக மெதுவாகக் கூடுதல் போன்றவை அறிகுறிகள்.

இந்த தொற்று நோய் சிறுநீரகங்களை தாக்கும். அதுவும் காய்ச்சலுடன் கூடிய நிலையில் சிறுநீரகங்கள் மோசமாகவே பாதிக்கப் படுவையாகும். அதிலும் இந்த நோய் இருப்பதை முறையாக கண்டுகொள்ளப்படாவிட்டால் அப்படியே நேரும். அல்லது மிகத் தாமதமாக சிகிச்சை செய்தாலோ அல்லது முழுமையாக இல்லாத சிகிச்சையைக் கையாண்டாலோ சிறுநீரகங்கள் மோசமாகவே பாதிப்புக்கு உள்ளாகும் சிறுநீரகங்களில் உள்ளே ஒரு வெட்டுக் கோடு, சிறுநீரகங்களின் குறைவான வளர்ச்சி, உயர் இரத்த அழுத்தம், மற்றும் சிறுநீரகங்கள் செயலிழத்தல் (வயது முதிர்ந்த நிலையில் வரும்) போன்றவை மேற் சொன்ன அபாயங்களில் அடங்கும்

மேலே சொல்லப் பட்ட காரணங்களுக்காக, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதையில் வரும் தொற்றுக்களை விரைவாகக் கண்டறிவது மட்டுமல்லாமல், முறையான சிகிச்சையும் அளிக்க வேண்டும். மிகக் கவனமாக நோயின் தீவிரத்தை விரைவாகக் கண்டறிய வேண்டும். நோயின் பின்னணியில் உள்ள அபாய சாத்தியக் கூறுகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும். Vesicoureteric reflux என்பது மிகப் பெரும்பாலும் காணப்படும் குறையாகும். இது நோய் தாக்கப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் காணப் படுகிறது. இந்த தொற்று இருக்கும் குழந்தைகளுக்கு இடைவிடாது தொடர்க் கூடிய மருத்துவம் மிக மிக அவசியம்.

7. வயதானவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரக் கூடிய சிறுநீரகப் பாதையில் தொற்று. மேற்கண்ட நோய் உடையவர்களை அது மீண்டும் மீண்டும் வந்து தாக்கும். அல்லது மருத்து வந்திற்கு எதிர்பார்க்கக் கூடிய அளவு அது பலன் அளிக்காது. அவர்களுக்கு நோயின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆராய வேண்டும். ஒரு சில அப்படிப் பட்டவை சிறுநீரகப் பாதையில் தடுப்பு அல்லது கற்கள் உருவாகும் நோய் போன்றவை சிகிச்சைதானிட்டால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே நோயைக் கண்டு கொள்ளுதல் விரைவாகவே செய்யப்படுதல் வேண்டும்

8. கற்கள் உருவாகும் நோய்களையும் UTI போன்ற நோய்களையும் எப்படி கட்டுப்படுத்துவது.

இவர்களில் பெரும்பாலோருக்கு வெளிப்புறத்தில் அறிகுறிகள் தென்படுவதே இல்லை. ஆகவே நோய் இருப்பதை அவர்கள் உடனுக்குடன் கண்டு கொள்வதே இல்லை. நோயைக் கண்டு பிடிப்பதில் பிசிரும் கோளாறும் ஊடுருவுகிறது. இதனால் சரியான சமயத்தில் எடுக்கப் பட்டிருக்க வேண்டிய சிகிச்சையும் தவறுகிறது. வயதான பலருக்கு UTI எனும் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் பெரும்பாலும் தவற விடப் படுகின்றன. சிகிச்சை தராமல் நின்று போகும். கற்கள் உருவாகும் நோய்களும் மேற்கண்ட UTI ம் சரி, சிறுநீரகங்களை வெகுவாகப் பாதிக்கும். முறையான மருத்துவ முயற்சிகளும் காலத்தே எடுக்கப் படும் சிகிச்சைகளும் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும்.

9. இள வயதில் உருவாகும் உயர் இரத்த அழுத்தத்தை உதாசீனம் செய்ய வேண்டாம்.

இளவயதில் வரக் கூடிய உயர் இரத்த அழுத்தம், கொஞ்சம் அசாதாரண விஷயமே. இதன் பின்னணியைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு ஆராய்ச்சியே செய்தாக வேண்டும். இளவயதில் கடுமையாகத் தாக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறுநீரக நோய்களே மிக முக்கிய காரணங்களாகும். ஆகவே ஒவ்வொரு நோயாளியும் முறையான சோதனை வரிசைகளுக்கு உட்படுத்தப்படுவது அனேகமாக ஒரு சட்ட விதியைப் போல அனுசரிக்கப் படுதல் வேண்டும். அப்படிச் செய்தாலே இந்த நோய்களை விரைவாகக் கண்டறிய முடியும். முறையான சிகிச்சையும் அளிக்க முடியும். சிறுநீரகங்கள் அதன் பின்னரே சரியாகப் பாதுகாக்க முடியும்.

10. மிகக் கடுமையாக பாதிக்கப் பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு விரைவில் சிகிச்சை அளிப்பது எப்படி?

சிறுநீரக செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணங்கள் (திடீரென்று அது செயலிழத்தல்) வயிற்றுப்போக்கு, வாந்தி எடுத்தல், Falciparum Malaria உயர் இரத்த அழுத்தம், செப்லிஸ், ஒரு சில மருந்து வகைகள் (Ace Inhibitor, NSAIDS) போன்றவை ஆகும். விரைவிலேயே கண்டு பிடிக்கப்பட்டு முறையான சிகிச்சை இவற்றிற்கு அளித்தால் சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கலாம்.

11. மருந்துகள் புழங்கும்போது ஒரு எச்சரிக்கை. என்றைக்குமே தனியாக எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். எத்தனை எத்தனையோ எளிதாக டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனே இல்லாமல் கேட்கும் குறிப்புக்கு உடனுக்குடன் மருந்து வியாபாரிகள் கொடுக்கும் வலியைப் போக்கும் மருந்துகள் வலியை உணரச் செய்யாமல் இருக்கச் செய்யும் மருந்துகள் முதலியவை இவற்றைக் கொண்டு வரும். இந்த மருந்துகளின் சேர்க்கையால் சிறுநீரகங்கள் பழுதடையும். இவை வெகுவாக விளம்பரம் செய்யப் படுபவை. ஆனால் அவற்றில் உள்ளார்ந்து நிற்கும் எதிர் விளைவுகள் மிக அதிகமாகவே அறியப் படுகின்றன. இத்தகைய மருந்துகளை, தலை வலிக்கும் உடல் வலிக்கும் குறையச் செய்ய உட்கொள்ளாதீர்கள். தனக்குத் தானே மருந்துகளை வரித்துக் கொண்டு வாங்குதலையும், தேவையற்ற மருந்துகளை வாங்கி எடுத்துக் கொள்வதையும் தவிருங்கள். மருத்துவ பரிந்துரையின் பேரிலேயும், அறிவுரைகள் பேரிலும் எடுத்துக் கொள்ளப் படும் மருந்துகளோ சாலச் சிறந்தவை. ஆயுர்வேத, சித்த மருந்துகள் மற்றும் சீன நாட்டு மூலிகைகளில் செய்யப் பட்ட மருந்துகள் போன்ற இயற்கையான மருந்துகள் யாவும் உண்மையிலேயே தீங்கற்றவை என்று நினைப்பது மிகத் தவறு. அதே போல் மாற்று மருத்துவங்கள் என்று சொல்லப்பட்டு விற்கப்படும் பண்டங்கள் யாவும் தீங்கற்றவை என்று நினைப்பது தவறு. ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளில் கனமுள்ள உலோகங்கள் காணப்பட்டால் சிறுநீரகங்களுக்கு அபாயம் விளைவிக்கும்.

12. ஒரே சிறுநீரகத்தில் வாழும்போது எடுத்துக் கொள்ளப் படவேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்க் கூடியவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அடிக்கடி உடன் சேர்ந்து வேலை செய்ய இன்னொரு சிறுநீரகம் இல்லாததால், அவர்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். நிரம்ப நீரோ திரவங்களோ பருக வேண்டும். என்றைக்கும் ஆரோக்கியமான உணவையே உட்கொள்ள வேண்டும். உப்பு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். புரோட்டீன் அதிகமுள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் ஒரே சிறுநீரகத்திற்கு எந்தக் கேடும் வராமல் பார்த்துக் கொள்ளவும். மிக முக்கியமான முன்னெச்சரிக்கை என்னவென்றால், அடிக்கடி முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும். வருடத்திற்கு ஒரு முறையாவது டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும். சிறுநீரகங்களின் செயல்பாட்டை அந்த சோதனைகளின் மூலம் அறிந்து கொள்ளவும். இரத்த அழுத்தத்தை சோதிக்கவும். சிறுநீரைப் பரிசோதிக்கவும். இரத்த பரிசோதனையும் செய்து கொள்ளவும். தேவைப் பட்டால், ஒலிக்கு அப்பால் உருவாக்கப்படும் அலைகளின் மூலம் சோதித்துக் கொள்ளவும்.