உடல் உறுப்புகளிலேயே மிக மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், பழுதடையும்போது உடலுக்குத் தீராத தீங்கு ஏற்பட்டு மரணம் கூட விளையலாம். அதன் அமைப்போ மிகவும் சிக்கல் வாய்ந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடும் மிகவும் ஆழமான சிக்கல்கள் கொண்டது.
அவற்றின் செயல்பாடுகள் மிக முக்கியமான செயல்பாடுகள் ஆகும். விஷத்தன்மை கொண்டதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான திரவங்களை அகற்றி நீரின் சமநிலையைப் பாதுகாத்து, தாது உப்புகள் மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் பாதுகாத்து வருகின்றன.
சிறுநீரகங்களின் அமைப்பு:
விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்களை நீக்கிச் சிறுநீரகங்கள் சிறுநீரை உருவாக்குகின்றன. அப்படி சிறுநீரகத்தில் உருவான சிறுநீரானது யுரேட்டர் (Ureter) எனும் சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்ப்பைக்குச் செல்கிறது. இறுதியில் யூரித்ரா எனும் குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
- மிகப் பெரும்பான்மையோர் (ஆணோ அல்லது பெண்ணோ) இரு சிறுநீரகங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
- அடிவயிற்றுக்குச் சற்று மேலும் முதுகெலும்பின் இரு பக்கங்களுக்கும் ஒன்றாக இவை இருக்கின்றன (படத்தைப் பார்க்கவும்). அவற்றின் கீழ் இருக்கும் விலா எலும்புகளால் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- சிறுநீரகங்களே அடிவயிற்றின் ஆழப் பகுதியில் உள்ளே அமைக்கப்பட்டிருப்பதால், சாதாரணமாக அவை இருப்பதை உணர முடியாது.
- சிறுநீரகங்கள் ஒரு ஜோடி அவரை விதை போல இருக்கும். பெரியவர்களுக்கு, ஒரு சிறுநீரகம் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். 6 செ.மீ. அகலம் இருக்கும் மற்றும் 4 செ.மீ. கனம் இருக்கும். சுமார் 150 முதல் 170 கிராம் எடை கொண்டது.
- சிறுநீரகங்களில் உருவான சிறுநீர், சிறுநீர்ப்பையைச் சிறுநீர்க்குழாய்கள் மூலம் சென்று அடைகிறது. அந்தக் குழாய் சுமார் 25 செ.மீ. நீளமுடையது; அதன் வழியாகவே சிறுநீர் செல்கிறது. தனிச் சிறப்பு வாய்ந்த தசைகளால் அவை உருவானவை.
- சிறுநீர்ப் பையானது ஒரு வெற்றிடமாக இருக்கும் உறுப்பு; அது தசைகளால் ஆனது.
அடி வயிற்றுக்குக் கீழும் பின்புறமும் அமைந்திருக்கின்றன.

- வயதானவர்களுக்கு இந்த சிறுநீர்ப் பையானது சுமார் 400லிருந்து 500 மி.லி. வரை சிறுநீரை சேகரித்து வைக்கும். அந்தப் பை நிரம்பியவுடன், சம்பந்தப்பட்டவருக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
- சிறுநீர் யூரித்ரா எனும் குழாய்கள் வழியே வெளிவருகிறது. பெண்களுக்கு இந்த குழாய் சற்று சிறியதாக இருக்கும். ஆண்களுக்கு அதை விட நீளமாக இருக்கும்.
- தொடர்ச்சியாக இடைவிடாது உணவுப் பொருட்கள் சக்தியாக மாற்றும் பணியானது விஷத்தன்மை கொண்ட பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன.
- இந்த செயல்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து, உடலில் இருக்கும் திரவத்தின் அளவையும், மின்பகு பொருட்களின் (Electrolytes) அளவையும் அமிலங்களின் அளவையும் மாற்றிக் கொண்டே இருக்கிறது. தேவையற்ற கழிவுப் பொருட்கள் கொண்டுவரும் விஷத்தன்மை சில சமயங்களில் எல்லையற்றுப் போகலாம்.
- சிறுநீரகங்கள் உடலிலிருந்து விஷம் தங்கியுள்ள அமிலங்களையும் தீய திரவங்களையும் அகற்றுகின்றன. அவை செய்யும் மிக மிக முக்கியமான சுத்திகரிப்புத் தொழிலாகும். அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதே சமயத்தில் மின்சாரம் பாயும் திரவங்களையும், அமிலங்களின் அளவையும் சமநிலைப்படுத்திக் கொண்டே செல்கிறது.