பெருமளவு பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களும்
தீவிரமான நோய்களும்
சிறுநீரக நோய்களை இருவகையாகப் பிரிப்பார்கள்.
- மருத்துவத்தில் குணப்படுத்தப்படக்கூடியவை. இதை சிறுநீரக மருத்துவர்கள் nephrologists குணப்படுத்தி விடுவார்கள். வழக்கமாக சிறுநீரகங்கள் செயலிழப்பு சிறுநீரகப் பாதை பழுதாகி விடுதல், மற்றும் இது சம்பந்தமான நோய் விளைவுகளை மருத்துவர்கள் குணப்படுத்தி விடுவார்கள். நெடுநாட்களாக முன்பிருந்தே இந்த நோயாளிகளுக்கு டயாலிசிஸ் (செயற்கை முறையில் இரத்தத்தைச் சுத்திகரித்தல்) போன்ற சிகிச்சையும் மாற்று சிறுநீரகங்கள் பொருத்துவதையும் நடத்த வேண்டும்.
- சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களின் சிகிச்சைகள் செய்யப்பட வேண்டிய நிலைகள். சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்தாலோ, புரோஸ்டேட் பிரச்சினைகளையோ, சிறுநீரகப் பாதையில் புற்றுநோய் கண்டாலோ அவற்றை இந்த urologists மருத்துவர்கள் குணப்படுத்துவர். அதை endoscopy and lithotripsy போன்ற சிகிச்சைகளால் குணப்படுத்துவர்.
மேற்கண்ட இரு வகை மருத்துவர்கள் / நிபுணர்கள் எப்படி வேறுபடுகின்றனர்?
முதலாமவர் மருத்துவத்திலேயே குணப்படுத்தக்கூடியவர்கள். இரண்டாமவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியவர்கள்.
| மிக மோசமான நோய் நிலைகள் |
| மருத்துவநிபுணர் |
அறுவைசிகிச்சை நிபுணர் |
| மிக மோசமாக பாதிப்பு |
கற்கள் இருப்பவை, புரோஸ்டேட் |
| ஏற்பட்டு தொடர்ந்து |
பிரச்சினைகள் சிறுநீரகப் |
| சிறுநீரக பாதிப்பு |
பாதை அடைப்பு |
| சிறுநீரகங்களைத் தாக்கும் |
பிறப்பிலிருந்தே சிறுநீரகப் |
| நோய் வரிசை |
பிரச்சினைகள் புற்றுநோய் |
சிறுநீரகங்கள் செயலற்றுப் போதல்
சிறுநீரகங்களின் திறன் படிப்படியாகக் குறைந்து வடிகட்டிக் கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் போதல்.
அப்படிச் செய்து மின்சாரம் பாயும் திரவ உட்கூறுகளின் சமநிலையைப் பேணுவதாகும். சீரம் கிரியேட்டினைனின் இரத்தத்தில் இருப்பு அதிகமாவதும் இரத்தத்தில் யூரியா அதிகமாவதும் சிறுநீரகம் செயலற்று வருகின்றது என்பதைக் காண்பிக்கிறது.
மிக மோசமான வகையில் சிறுநீரகச் செயலிழத்தல்
திடீரென்று காரணம் தெரியாமல் சிறுநீரகச் செயல்பாட்டுக் குறைந்து போதல் உண்டு. அல்லது இது மோசமான சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதாக பொருள். சிறுநீரின் அளவு குறைந்துவரும். இது பெரும்பாலோருக்கு நிகழும் அனுபவம்; சிறுநீரகங்கள் மிக மோசமாக திறன் இழக்கும். டயாரியா, வாந்தி ஏற்படுதல் மற்றும் falciparum malaria, hypertension, sepsis, ஒரு சில மருந்துகள் போன்றவை இந்த நிலையைக் கொண்டு வரும். சரியான மருத்துவ சிகிச்சையாலும், டயாலிசிஸ் மூலமும் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரகங்கள் சாதாரண நிலைமைக்குத் திரும்பிவிடுகின்றன.
நீண்ட நாட்கள் தொடர்ந்து
இருக்கும் மோசமான நிலை
மெதுவாகவும், மெல்ல மெல்லவும் குணப்படுத்த முடியாத வகையில் சிறுநீரகங்கள் பழுதாவது - பல மாதக்கணக்கில் தொடர்வது - உண்டு. இவற்றை CKD - chronic renal failure என்று சொல்வதுண்டு. சிறுநீரகங்கள் அநேகமாக முழுவதும் செயலற்று நின்றுவிடும். இந்த முடிவான நிலைக்குத் தள்ளப்படுவதை End stage kidney (renal) disease (ESKD) என்று சொல்வார்கள்.
இது மூச்சும் பேச்சும் இன்றி அமைதியாகவே கொல்லும் நோய். பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே தொடரக் கூடியது. இதன் ஆரம்ப கால அறிகுறிகள் நலிவு, பசியின்மை, வாந்தி ஏற்படுதல், வீக்கங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவையாகும். மேலும் இவற்றிற்கு இரு முக்கிய காரணங்கள் நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமுமாகும்.
சிறுநீரகத்தைப் பரிசோதிக்கும்போது அதில் புரதம் இருப்பது தெரியவந்தால், இரத்தப் பரிசோதனையில் அதிக தன்மையில் கிரியேட்டினைன் இருப்பது தெரியவந்தால், அல்லது சோனோகிராஃப் (ultrasonography) சோதனையில் சுருங்கிய நிலையில் சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்தால், தீவிரமான வகையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். சீரம் கிரியேட்டினைனின் அளவு சிறுநீரகத்தின் நலிவடைந்த தன்மைக்குப் போதுமான சாட்சி. நோய் முற்ற முற்ற இந்த அளவு அதிகமாகிக் கொண்டே செல்லும்.
மேலே சொல்லப்பட்ட முற்றிய நோயின் ஆரம்ப காலங்களில், நோயாளிக்கு தகுந்த முறையான மருத்துவ சிகிச்சை அவசியம். உணவுப் பழக்க வழக்கங்களிலும் கடுமையான மாற்றங்கள் தேவை. இந்த நோயை வேறு குணப்படுத்தக் கூடிய சிகிச்சையே கிடையாது. ஆனால் கொடுக்கப்படும் சிகிச்சையின் நோக்கம் நோய் முற்றாமல் தடுக்க வைப்பதாகும். அப்படிச் செய்து நெடுநாட்களுக்கு நோயாளியை நலமாக வைப்பதே இதன் நோக்கமாகும்.
மிக மோசமான நிலைக்கு நோய் முற்றி விட்டால், (முடிவு நிலை சிறுநீரகக் கோளாறு நோய்) சிறுநீரகத்தின் செயல்பாட்டில் 90 சதவீதத்திற்கு மேல் திறன் இழந்திருக்கும். (சீரம் கிரியேட்டினின் அளவு 8 முதல் 10 மி.கி. / டெசிலிட்டர் அளவைத் தாண்டி இருக்கும்.) அப்போது சாத்தியப்படக்கூடிய ஒரே சிகிச்சை டயாலிசிஸ் ஆகும். (hemodialysis and peritoneal dialysis) போன்ற சிகிச்சைகளோ அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவதாகும்.
டயாலிசிஸ் என்பது கழிவுப் பொருட்களை உடலில் இருந்து அகற்றுவதாகும்; அத்துடன் உடலில் உபரியாக இருக்கும் திரவத்தை வெளியேற்றுவதுமே அதன் நோக்கமாகும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது, அந்த திரவத்தின் அளவு அதிகரித்திருக்கும். மிக மோசமான அளவுக்கு பாதித்திருக்கும் இந்த நோய்க்கு டயாலிசிஸ் குணப்படுத்தப் போவதில்லை. அதாவது ESKD என்று சொல்லப்படும் நிலைக்கு நோய் சென்று விடும்போது, நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மாற்று சிறுநீரகங்கள் பொருத்தப்படாவிட்டால் இப்படிச் செய்யவே தேவை. அவற்றில் இருக்கும் இரு வகைகள், hemodialysis மற்றும் peritoneal dialysis ஆகும்.
டயாலிசில் முறையில் வெகுவாகப் பயன்படுத்தப்படுவது ஹீமோடயாலிசிஸ் ஆகும். மேலே சொன்னபடி இந்த முறையில் உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும், உபரியான திரவங்களையும் வெளியேற்றுவதே ஆகும். இதற்கு ஒரு தனி முறையோடு செயல்படக் கூடிய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றொரு முறைக்கு continuous ambulatory peritoneal dialysis என்று பெயர். இதை வீடுகளிலேயே நோயாளியே இருக்கச் செய்து இயக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் வேலை செய்யும் இடத்திலும் வைத்து இயக்கிக் கொள்ளலாம். இதற்கு எந்த இயந்திரமும் தேவையில்லை.
எல்லாவற்றையும் விட சிறுநீரகங்களை மாற்றி விடுவதே சாலச் சிறந்த முறையாகும். இது அந்த முற்றிய நிலைக்கு நோய் சென்று விட்ட நிலையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையாகும். இதுவே மிகவும் திறன்மிக்க முறையும் மற்றும் நோயை அதன் மிக மோசமான நிலையில் நோயாளி இருக்கும்போது காப்பாற்றும் முறையாகும்.
சிறுநீரகப் பாதையில் வரும் தொற்று
எரிச்சலுடன் அடிக்கடி கழிக்கப்படும் சிறுநீரும், அடிவயிற்றில் வலியும், காய்ச்சலும், சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. சிறுநீர் பரிசோதனையின் போது, அதில் சீழ் துளிகள் காணப்பட்டாலும் மேற்கண்ட தொற்று உள்ளது என்பது அர்த்தம்.
இந்த தொற்று இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் உயிரெதிரி (Antibiotic) மருந்து கொடுக்கப்பட்டால் அந்த சிகிச்சைக்கு நல்ல பயன் கிடைக்கின்றது. இந்த சிகிச்சையை காலத்தாமதத்துடன் செய்தாலோ அல்லது போதுமான அளவு இல்லாமல், முக்கியமாகக் குழந்தைகளுக்குச் செய்தால், திரும்பவும் சாதாரண நிலைக்குத் திரும்ப முடியாத நிலைக்கு அவர்களுடைய வளர்ந்து வரும் சிறுநீரகங்கள் தள்ளப்பட்டு விடும்.
அடிக்கடி வரும் இந்த தொற்று உடைய நோயாளிகளுக்கு சிறுநீர் எங்கும் தடைப்பட்டுப் போவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
அல்லது கற்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். அல்லது சிறுநீர்ப் பாதையில் ஏதாவது அசாதாரண நிலை ஏற்பட்டால் உடனுக்குடன் அதை அகற்ற வேண்டும். Genito urinary tuberculosis நோய் கூட தாக்கி இருக்கலாம். இதை கவனித்து குணப்படுத்துதல் வேண்டும்.
குழந்தைகளுக்கு வரும் இந்த தொற்றின் அடிப்படை காரணம் vesicoureteric reflux என்பது அடிக்கடி அவர்களை பாதிப்பது ஆகும். இது ஒரு பிறவிக் கோளாறு ஆகும். இதனால் சிறுநீர் முறையான வழியில் இல்லாமல் மேலோங்கிப் பாய்வதாகும். அப்போது சிறுநீர்ப்பையிலிருந்து மீண்டோங்கி (பின்னோக்கி) ஒன்றோ அல்லது இரண்டு யூரிட்டர்களுக்கும் பாய்ந்து சிறுநீரகத்தையே மீண்டும் சென்றடைவதாகும்.
நெஃப்ராடிக் சின்ட்ரோம்
சிறுநீரகத்தைத் தாக்கும் ஒரு நோய் விளைவு
மேற்கண்ட நோய் குழந்தைகளிடம் அடிக்கடி காணப்படுகிறது. அது பெரியோர்களை விட குழந்தைகளையே அடிக்கடி தாக்குகிறது. Oedema எனும் இந்த வீக்கம் அடிக்கடி வீக்கத்தைக் கொண்டு வரும். அதுவே பெரும்பாலும் காணப்படும் ஒரு அறிகுறியாகும். சிறுநீரில் அதிக அளவு புரதம் இருப்பது (3.5 கிராமுக்கும் அதிகமாக ஒரு நாளில் சேர்ந்து விடுதல்), இரத்தத்தில் ஆல்புமின் குறைவாக இருத்தல் (hypoalbuminemia) கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருத்தல், சரியான இரத்த அழுத்தம், சிறுநீரகங்கள் முறையாக வேலை செய்தல் போன்றவை இதன் வழக்கமான அடையாளங்களாகும்.
சிகிச்சைக்கு இந்த நோய் குணமாகும் வெளிப்பாடுகளைக் காண்பிக்கிறது. சிகிச்சையை நிறுத்திவிட்டாலும், நோயாளிகளிடம் எவ்வித நோய் அறிகுறியும் தென்படுவதில்லை. ஆனால் பெருவாரியான சமயங்களில், நோய் திரும்பவே செய்கிறது.
இந்த வழியில், குணமாகும் தன்மையும், சிகிச்சை நிறுத்தப்படுவதும் அடிக்கடி நோய் திரும்புவதும் வீக்கங்களைக் கொண்டு வருவதும் இந்த நோய் விளைவின் முக்கிய குணங்களாகும்.
இந்த நிலை தொடர்ந்தால், குழந்தைக்கும் சரி, பெரியோர்களுக்கும் சரி இது மிகவும் தொந்தரவான நிலையாகும் ஆனால் பொதுவாக இரு பாதிப்புகளுக்கு இடையில் நீண்ட இடைவெளியே பெரும்பாலும் காணப்படுகிறது. முக்கியமாக இந்த விளைவு நோயால் அவதிப்படும் குழந்தைகளிடம் அப்படியே காணப்படுகிறது. அவர்களுக்கு இயல்பான திரவுடன் சேர்ந்து சிறுநீரகங்களுடன் ஆரோக்கியமாகவே காணப்படுகிறார்கள்.
சிறுநீர்ப் பையில் கற்கள்
இது மிகப் பொதுவாகக் காணப்படும் பிரச்சனை. பெரும்பாலும், சிறுநீரகக் குழாயும் சிறுநீர்ப்பையும் இந்த நோய் தாக்கும் இடங்களாகும். இதன் பொதுவான குணங்களாவன - பொறுக்க முடியாத அளவு வலி, வாந்தி ஏற்படுதல், சிறுநீரில் இரத்தம் போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும். இருந்தாலும், நெடுநாட்களுக்கு கற்கள் உருவாகி இருப்பவர்களிடம் எந்தவித அறிகுறிகளும் காணப்படுவதில்லை.
சிறுநீரகங்களில் கற்கள் சேர்ந்து விடுவதை எக்ஸ்ரே படங்களும் ultrasonography யும் எடுத்துக் காட்டும். இவையே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் முக்கியமான பரிசோதனை வழிகளாகும்.
சிறு சிறு கற்கள் பெரும்பாலும் சிறுநீருடன் கலந்து வெளியேறி விடும். நிறைய நீர் பருகுவதால் இந்த நல்விளைவு ஏற்படும். அப்படி இல்லாமல், அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டாலோ, தொடர்ந்து தொற்றுநோய் ஏற்பட்டாலோ, சிறுநீர்ப்பாதை தடைபட்டாலோ, அல்லது சிறுநீரகங்கள் பழுதுபட்டாலோ, அவற்றை நீக்குவது அவசியமாகிறது. கற்களை அகற்றுவதற்கு மிகவும் சிறந்த வழி - அதன் அளவு, இருக்கும் இடம், மற்றும் தன்மை இவற்றைப் பொறுத்தே செய்ய வேண்டியதாகும். பெரும்பாலான வழிகள் lithotripsy, endoscopy PCNL, cystoscopy and ureteroscopy) போன்றவற்றுடன் அறுவை சிகிச்சையும் ஆகும்.
இந்த கற்கள் உருவாகும் நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் (50-80%) ஆகும். போதுமானதிலிருந்து அதிகமான அளவு திரவங்களை எடுத்துக் கொண்டு உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு அதிகம் வேண்டும் அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
பினைன் (Benign) ப்ராஸ்டேடிக் அதிவளர்ச்சி
புரோஸ்டேட் சுரப்பிகள் என்பன வயதானவர்களிடம்தான் காணப்படும். சிறுநீர்ப்பைக்கு உடனே கீழே இவை இருக்கின்றன. யூரித்ராவின் ஆரம்ப நிலைக்கு அருகே சுற்றி இருக்கின்றன. இது ஒருவருடைய 50 வயதிற்கு அப்பால் பெரிதாக ஆரம்பிக்கிறது.
பெரிதான ப்ரோஸ்டேடிக் யூரிட்ராவை அழுத்துகிறது. வயதானவர்களுக்கு இந்த காரணத்தாலேயே சிறுநீர் கழிப்பது பிரச்சனையாக ஆகிறது.
இதன் முக்கியமான அறிகுறி, முக்கியமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாகும். சிறுநீர் கழித்தவுடன் சொட்டு சொட்டாக வெளிப்படுவதும் ஆகும். மலக்குடலில் விரல் விட்டு பரிசோதிப்பதும், ஒவ்வொரு அளவுகளை உருவாக்கிச் சோதிப்பதும் இரண்டு முக்கியமான சோதனைகளாகும்.
பெருவாரியான நோயாளிகள், மிகச் சிறிய அல்லது நடுத்தரமான அளவில் அறிகுறிகள் தென்பட்டாலும், திறன்மிக்க வகையில் சிகிச்சையில் குணப்படுத்தப்படலாம். கடுமையான அறிகுறி கொண்ட நோயாளிகள் காணப்பட்டால், மற்றும் மிகப் பெரிய அளவில் ப்ராஸ்டேட் சுரப்பிகள் வளர்ந்து விட்டால், அதை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே ஒரு வழி.