Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

4: சிறுநீரகங்களின் நோய்களை கண்டறியுதல்

சிறுநீரக நோய்களின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது?

'காலத்திலேயே கிழிந்த துணியைத் தைத்துவிட்டால், துணி மேலும் கிழியாது' என்ற பழமொழி ஆங்கிலத்தில் சொல்லப்படும். மிக மோசமான சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த முடியாது. இதன் மிக மோசமான நிலைகளில் குணப்படுத்துவது என்பது மிக மிகச் செலவு மிக்க ஒன்றாகும். இவ்வகை மோசமான நோயை உடையவருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படத் தெரியாது. அப்படி ஒருவருக்கு ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்பட்டுவிட்டால், அதை மருத்துவத்தால் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே சிறுநீரகக் கோளாறுகள் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது. விரைவிலேயே அடையாளம் காண்பது நல்லது.

எவருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். ஆனால் அதிகமான அபாயத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள் யார்?

  • எவருக்குச் சிறுநீரக நோயின் அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றனவோ
  • ஏற்கனவே அவர் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவராக இருந்தால்
  • அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்தால் அல்லது இரத்த அழுத்தம் இருந்தால்
  • அவர் புகை பிடிப்பவராக இருந்தால், உடல் பருமனாக இருந்தால் அல்லது மேலும் 60 வயதைக் கடந்தவராக இருந்தால்
  • வெகு பல வருடங்களாகவே வலி நிவாரணி மருந்துகளை உபயோகிப்பவராக இருந்தால்
  • சிறுநீர்ப்பாதையில் பிறப்பு முதலே தோன்றிவிட்ட சங்கடங்களைக் கொண்டவராக இருந்தால்

ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகளைக் கண்டுகொள்வது இம்மாதிரியான நபர்களுக்குச் சிகிச்சை தொடங்குவது நன்மை பயக்கும்.

சிறுநீரகப் பிரச்சினைகளை எப்படிச் சோதித்து அறிவது?

பெரும்பாலும் நடத்தப்படும் சோதனைகள் யாவை?

விதவிதமான பிரச்சினைகளைக் கண்டுகொள்ள மருத்துவர் பெரும்பாலும் வெகு நீண்ட நாட்களைக் கொண்டு நோயாளியின் வரலாற்றை எடுத்துக்கொள்வார். அச்சோதனைகள் முழுமையாக இருக்க வேண்டும். இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு அதைத் தவிர மேலும் பல சோதனைகளைச் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் காலம் தவறாமல் அடிக்கடி செய்து வர வேண்டும். அடிக்கடி செய்யப்படும் மிகவும் உபயோகமான சோதனைகளில் சிறுநீர் சோதனைகள், இரத்தச் சோதனைகள் மற்றும் கதிரியக்கச் சோதனைகள் அடங்கும்.

1. சிறுநீர்ப் பரிசோதனைகள்

வெவ்வேறு வகையான சிறுநீர்ப் பரிசோதனைகள் வெவ்வேறு வகையான சிறுநீரகப் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லும்.

வழக்கமாக எடுக்கப்படும் சிறுநீர்ப் பரிசோதனை

  • இது எளிதானது. செலவு குறைவானது. இதனால் தெரியவரும் முடிவுகள் மிக முக்கியமான தடயங்களைக் காட்டுகின்றன. சாதாரண சிறுநீர்ப் பரிசோதனை. அடிப்படையில், இருக்கும் சிறுநீரக நோய்களை இல்லை என்று தீர்மானிக்க முடியாது.
  • சிறுநீரில் புரதம் (Protein) இருப்பது அநேக சமயங்களில் தெரிய வரும். அதை உதாசீனம் செய்யக் கூடாது. அதுவே சம்பந்தப்பட்ட நோயாளிக்கு முதல் தடவையாக இருக்கலாம். அல்லது மிக ஆரம்ப நிலையாக இருக்கலாம். அல்லது மிக மோசமான நிலையின் ஒரு எச்சரிக்கை அம்சமாகக்கூட இருக்கலாம். ஏன், இதயக் கோளாறின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.

சிறுநீரில் சீழ் அணுக்கள் இருப்பது சிறுநீர்ப் பாதை தொற்றின் (UTI) இருப்பைக் குறிக்கலாம்.

சிறுநீரில் புரோட்டீன் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) இருப்பது, வீக்கமடைந்த சிறுநீரக நோய்க்கான (அதாவது குளோமருலோநெஃப்ரைட்டிஸ்) கண்டறிய உதவும் குறிப்புகளை வழங்குகிறது.

மைக்ரொஆள்புமீனுறியா எனப்படும் நிலை மிகச் சிறிய அளவு புரோட்டீன் சிறுநீரில் இருப்பதைக் காட்டும். இந்த சோதனையே நீரிழிவு நோயில் சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை, முதலாவதும் மிக விரைவானதுமான சோதனையாகும். இந்த நிலையில் நோயைத் தடுத்து திருப்பிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் முறையானதும் மிகச் சரியானதுமான சிகிச்சை அவசியம். இந்த புரதம் வழக்கமான சோதனை வரிசையில் தெரியவருவதில்லை.

சிறுநீரை வைத்து நடத்தப்படும் இதர சோதனைகள்

  • 24 மணி நேரச் சேகரிப்பு சிறுநீரை வைத்து ஆல்புமினைக் கண்டறிதல். புரோட்டீன் சிறுநீரில் இருப்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை அவசியம். 24 மணி நேரத்தில் உடலிலிருந்து நீக்கி வெளிவரும் புரோட்டீனை அளக்க இந்தப் பரிசோதனை மிகவும் அவசியம். நோயின் வீரியத்தை அறிவதையும் புரோட்டீன் இழப்புக்கு எடுத்துக்கொள்ளும் மருத்துவத்தின் பயனையும் அறியவைக்கிறது.
  • கல்ச்சர் மற்றும் மருந்து விளைவுகளைப் பற்றிய சோதனை: இந்த சோதனை 48 முதல் 72 மணி நேரத்திற்குள் ஏற்படும் விளைவுகளைச் சோதிக்கிறது. சிறுநீரில் உள்ள பாக்டீரியாவின் தன்மையை அறியவைக்கிறது. அந்தப் பாக்டீரியாதான் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றைப் பற்றிச் சொல்கிறது. தொற்றினுடைய வீரியத்தைப் பற்றிச் சொல்கிறது. மருத்துவத்தில் உபயோகப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) மருந்தைப் பற்றியும் இது கூறும்.
  • அமிலம் தாங்கும் பாக்டீரியாவுக்கான சிறுநீர் சோதனை: இந்த சோதனை சிறுநீர்ப் பாதையில் டி.பி. நோய் இருந்தால் எடுத்துக் காட்டும்.

2. இரத்தப் பரிசோதனைகள்:

வகை வகையான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவை யாவும் வித விதமான சிறுநீரகப் பிரச்சினைகளை எடுத்துக் காட்டும்.

  • கிரியேட்டினைன் மற்றும் யூரியாவைக் காட்டும் பரிசோதனைகள்: சிறுநீரகங்கள் செயல்படும் விதத்தை எடுத்துக் காட்டும். மேற்கண்ட இரண்டும் கழிவுப் பொருட்கள். சிறுநீரகங்கள் அவற்றை இரத்தத்திலிருந்து நீக்குகின்றன. எப்பொழுது சிறுநீரகங்களின் வலிமை குன்றுகிறதோ அப்போது இரத்தத்தில் இருக்கும் மேற்கண்ட பொருட்களின் அளவுகள் உயரும். பொதுவாக சீரம் கிரியேட்டினைன் எனும் பொருள் 0.9 முதல் 1.4 மி.கி./டெ.லி. ஆக இருக்கும். இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவு 20 முதல் 40 வரை மி.கி./டெ.லி. இருக்கும். அதைவிட உயர்ந்து நிற்கும் அளவுகள் சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையைக் காட்டும். கிரியேட்டினைனின் அளவு யூரியாவின் அளவை விட ஒப்புக்கொள்ளக்கூடிய வழிகாட்டியாகும்.
  • ஹீமோகுளோபின்: ஆரோக்கியமாக உள்ள சிறுநீரகங்கள், இரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அவற்றில்தான் ஹீமோகுளோபின் இருக்கிறது. இரத்தப் பரிசோதனையில் இதன் அளவு குறைவாகக் காணப்பட்டால், அதற்கு இரத்தச் சோகை நோய் என்று பெயர். மிக மோசமான சிறுநீரக நோய்களில் வழக்கமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று இந்த இரத்தச் சோகையாகும்.
  • இருந்தாலும் இரத்தச் சோகை அடிக்கடி பிற நோய்களினால் கூட ஏற்படலாம். ஆகவே இரத்த சோகைக்காக செய்யப்படும் பரிசோதனைகள் யாவும் சிறுநீரகக் கோளாறுகளை எடுத்துக் காட்டும் அறுதிச் சோதனைகள் அல்ல.
  • இதர இரத்தப் பரிசோதனை: இவற்றைத் தவிர இன்னும் எத்தனையோ இரத்தப் பரிசோதனைகள் இந்நோயாளிகளுக்கு என்று நடத்தப்படுகின்றன. அவை இரத்தத்தில் சர்க்கரை, சீரம் புரோட்டீன், கால்சியம், மின்பகுபொருள்கள் (சோடியம், பொட்டாசியம், மற்றும் குளோரைடுகள்) இருப்பதைக் காட்டும், கால்சியம், பாஸ்பரஸ், பைகார்பனேட், ஏ. எஸ்.ஓ. டைட்டர் மற்றும் காம்ப்ளிமெண்ட் முதலியன ஆகும்.

3. ரேடியோ கதிர்வீச்சுப் பரிசோதனைகள்

சிறுநீரகத்தை ஒலிக்கு அப்பால் உள்ள அலைகள் வைத்து சோதித்தல் (ultrasonography)

இந்தச் சோதனை வெகு விரைவில் கண்டறிவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ஒன்றாகும். இது சிறுநீரகத்தின் அளவு மற்றும் சிஸ்ட் போன்ற வளர்ச்சிகள் இருந்தால் அவற்றின் அளவு

கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காண்பிக்கும். சிறுநீர்ப் போக்குக்கு தடையிருந்தாலும் காண்பிக்கும். மற்றும் புண்கள் சிறுநீர்ப் பையில் இருந்தால் எடுத்துக் காண்பிக்கும். இரு சிறுநீரகங்களும் அளவில் சிறியவையாக இருந்தால் அவை பழுதாகிவிட்டனவென்று பொருள்.

  • அடி வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தல்: சிறுநீரகங்களில் "கற்கள்" இருந்தால் அவற்றை இந்தச் சோதனை எடுத்துக் காட்டும்.
  • இன்ட்ரா வீனஸ் யூரோகிராம்: IVU ஒரு தனிச் சிறப்புடைய எக்ஸ்-ரே சோதனையாகும். இதில் ஒரு தனித் தன்மையுடைய நிறமுள்ள மருந்து கையில் இருக்கும் ஒரு இரத்தக் குழாயில் இது செலுத்தப்படுகிறது. இரத்தம் சிறுநீரகத்திற்குள் சென்று விடுவதால், சிறுநீரோடு கலந்து வெளி வருகிறது. இதனால் சிறுநீர் செல்லும் வழி தெளிவாகத் தெரிகிறது. அதாவது சிறுநீரகங்கள், யூரேட்டர், மற்றும் சிறுநீர்ப்பை போன்றவை தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து பல புகைப்படங்கள் எக்ஸ்-ரே படங்களாகப் பிடிக்கப்படுகின்றன. இது சிறுநீர் உருவாவதிலிருந்து வெளியேறும் வரை தெளிவாக அதன் போக்கைக் காட்டுகிறது. எந்த ஒரு பிரச்சினையும் - புண்கள், தொற்றுக்கள், அசாதாரண நிலைமைகள் யாவும் வெளிப்படுத்தப்பட்டு விடும்.

சிறுநீரகங்கள் வேலை செய்வது நின்றுவிடும்போது, மேற்கண்ட IVU சோதனையை வழக்கமாக பரிந்துரைக்க மாட்டார்கள். ஏனென்றால் உடலுக்குள் செலுத்தப்படும் அந்த நிறமுள்ள திரவம் (அது செல்லும் வழியைக் காட்டக் கூடியது) ஏற்கனவே பழுதுபட்டிருக்கும் சிறுநீரகங்களை மேலும் பழுதாக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த சமயங்களில் மேற்கண்ட நிறமுள்ள திரவம் போதுமான அளவு அடையாளம் காண்பிக்க முடியாது. இந்தச் சோதனை நோயாளியின் பிரசவ காலத்திலும் தவிர்க்கப்படுகிறது. ஒலிக்கு அப்பால் எடுக்கப்படும் சோதனையும் CT Scan போன்ற சோதனைகளும் இருப்பதால், இக்காலங்களில் இந்தச் சோதனை வெகு குறைந்த அளவே மேற்கொள்ளப்படுகிறது.

Voiding cystourethrogram (VCUG) Micturating cystourethrogram வாய்டிங் சிஸ்டோயூரித்ரோகிராம் மிக்சூரேட்டிங் சிஸ்டோயூரித்ரோகிராம்) என்றும் அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முக்கியமாக சிறுவர்களின் சிறுநீர்ப் பாதையை சோதிப்பதற்காகச் செய்யப்படுவதாகும். இது ஒரு சிறப்பு வாய்ந்த எக்ஸ்-ரே பரிசோதனை ஆகும். சிறுநீர்ப்பை நிறைந்தவுடன், வெளிப்புறத்திலிருந்து கதிர் வழியாக மாறுபட்ட உடல் திரவம் ஒன்றை உட்செலுத்துகிறார்கள். இதைக் கொஞ்சம் எச்சரிக்கைகள் மிகுந்த வழிகளில் செய்கிறார்கள். சிறுநீர்ப் பை நிறைந்தவுடன், கதிரை வெளியே எடுப்பார்கள். எடுத்து விட்டு நோயாளியை சிறுநீர் கழிக்கச் சொல்வார்கள். இடையிடையே இடைவெளிகள் விட்டு, எக்ஸ்-ரே படம் எடுப்பார்கள். அதன்மூலம் சிறுநீர்ப் பையின் சுற்று வரைபடம் தெரிகிறது. இந்தச் சோதனை மூலம் யுரேட்டர்களுக்குள் சிறுநீர் பின்னோக்கிச் செல்வது சோதிக்கப்படுகிறது. அத்துடன் சிறுநீரகங்களுக்குள் செல்வதும் கணிக்கப்படுகிறது. பின்னரான செயல்பாட்டை vesicoureteric reflux என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். சிறுநீர்ப்பையில் அல்லது யூரேட்டரில் ஏதாவது அசாதாரணமான வேறுபாடுகள் தோன்றினால் அவை வெளிப்பட்டுவிடும். இன்னும் சில பிற சோதனைகள் கதிர்வீச்சு முறைகளில் எடுக்கப்படும்.

ஒரு சில சிறுநீரகப் பரிசோதனைகள் தனி முக்கியத்துவம் வாய்ந்த சில சோதனைகள் சிடி ஸ்கேன் சோதனைகள், சிறுநீரகங்களையும், சிறுநீர்ப்பாதையையும் சோதிக்கும். இதைத் தவிர renal Doppler, radio nuclear study, renal angiography, ante grade, and retrograde pyelography போன்றவை மிக உபயோகமானவை.

வேறு சில முக்கியமான சோதனைகள்.

Kidney biopsy (கிட்னி பையாப்சி), cystoscopy and urodynamics போன்றவை மேலும் பரிந்துரைக்கப்படக்கூடிய முக்கியமான சோதனைகள். இவை சரியானதும் முழுமையானதுமான சிறுநீரக நோயைப் பற்றிய விவரங்களை அறிய மிகத் தேவையானவை.

Kidney biopsy

மேற்கண்ட சோதனை மூலம் ஒரு சில சிறுநீரக நோய்களால் ஏற்படும் விளைவுகளை எளிதாகக் கண்டறியலாம்.

Kidney biopsy என்றால் என்ன?

இந்தச் சோதனையில் சிறுநீரகத்தின் ஒரு மிகச்சிறு திசுத்துண்டு வெட்டி எடுக்கப்படுகிறது. அதை ஒரு ஊசி மூலம் செய்வார்கள். எடுத்து ஒரு நுண்ணோக்கி (Microscope) (உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கருவி) கருவியின் கீழ் ஆராய்வர். வந்திருக்கும் நோயின் துல்லியமான கணிப்பை இந்தச் சோதனை மூலம் செய்தறிய முடியும்.

மேற்கண்ட சோதனையை எப்பொழுது பரிந்துரைப்பார்கள்?

ஒரு சில பரிசோதனைகளினால் நோயின் துல்லியமான கணிப்பு செய்ய முடியாமல் போகும். அச்சமயங்களில் மேற்கண்ட சோதனை ஒன்றே இருக்கும் வழியாகும்.

மேற்கண்ட சோதனை எப்படி உதவுகிறது?

அது ஒரு சில விளக்க முடியாத நோய் நிலைகளை விவரமாக எடுத்துக் காட்ட உதவுகிறது. இந்த விவரங்களைக் கொண்டு சிறுநீரக நோயைக் கண்டறியும் சிறப்பு மருத்துவர்கள் (Nephrologists) நோயைக் குணப்படுத்தும் முறைகளை சீராக வரையறுக்க முடியும். அப்படிச் செய்து, நோயாளிகளை வழிநடத்த முடியும். அந்த நோயாளி குணமடைவதைப் பற்றியும் அவருடைய உறவினர்களுக்கும் நோயின் தீவிரத்தையும் அது தாக்கும் வீரியத்தையும் எடுத்துச் சொல்ல முடியும்.

எந்த வழியில் மேற்கண்ட சோதனை மேற்கொள்ளப்படுகிறது?

மிகவும் சாதாரணமாக மேற்கொள்ளப்படும் வழி Percutaneous needle biopsy என்பதாகும். அதில் உள்ளே வெற்று வழியாக இருக்கும் ஒரு ஊசி எடுத்துக் கொள்ளப்பட்டு உடலின் தோல் வழியாக உள்ளே செலுத்தப்பட்டு சிறுநீரகத்திற்குள் செல்ல வைக்கப்படுகிறது. இன்னொரு வழி Open biopsy என்பதாகும். இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

மேற்கண்ட சோதனை எப்படி நடத்தப்படுகிறது?

  • நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து விடச் சொல்லி, அவரிடம் அனுமதிப்பத்திரத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.
  • சோதனைக்கு முன் அவருடைய இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துக் கொள்வார்கள். அத்துடன் இரத்தப் பரிசோதனை மூலம் வெளி வரும் இரத்தம் முறையான விளைவுகளுக்குள் உறைகிறதா என்று சோதிக்கிறார்கள். அஸ்பிரின் (Aspirin) போன்ற மருந்துகள் இந்த உறைதலைத் தடுக்கும். அவற்றை முதலில் நிறுத்துகிறார்கள். அதை பயாப்சி செய்வதற்கு 1 முதல் 2 வாரங்களுக்கு நிறுத்துகிறார்கள்.
  • ஒலிக்கு அப்பால் உருவாக்கப்படும் அலைகளைக் கொண்டு நடத்தப்படும் பரிசோதனையைச் செய்து, சிறுநீரகங்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாக எங்கு பயாப்சி செய்ய வேண்டும் என்பதைக் கண்டுகொள்கிறார்கள். முதுகுப் பக்கம், விலா எலும்புக்குக் கீழே இது இருக்கிறது. அது இடப்புற மேற்புறம் உள்ளது.
  • முகத்தைக் கீழ் நோக்கி வைத்து நோயாளி படுக்க வைக்கப்படுகிறார். அடிவயிற்றின் கீழ் ஒரு தலையணை வைக்கப்படும். சோதனையின் பொழுது முழுக்க முழுக்க நோயாளி கண்களைத் திறந்து நடப்பன எல்லாவற்றையும் பார்க்க முடியும். குழந்தைகளுக்கு இந்தச் சோதனை மயக்க மருந்து கொடுத்தே செய்யப்படும்.
  • உடல் தோல்புறம் சரியாக சுத்தம் செய்யப்பட்டபின், பயாப்சி செய்யப்படும் இடத்தில் மரத்துப் போகச் செய்யப்படுபவர். (அல்லது) அவ்விடம் மரத்துப் போகச் செய்யப்படுகிறது. அந்தச் சிறு இடத்திற்கு என்று உபயோகிக்கப்படும் மரத்துப் போகச்செய்யும் மருந்தை உபயோகித்துச் செய்வார்கள்.
  • வெற்றுக் குழாய்ப்பகுதி உள்ள ஒரு ஊசி மூலம் 2 அல்லது 3 சிறு சிறு நுழைவுகள் போன்ற துண்டுகள் சிறுநீரகத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்தச் சோதனைத் துண்டுகள் மருத்துவ நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்படுகின்றன.
  • பயாப்சி சோதனைக்குப் பிறகு ஊசி போட்ட இடத்தின் மீது சற்று அழுத்தப்படுகிறது. இதன் மூலம் இரத்தக் கசிவு ஏற்படாமல் செய்யப்படுகிறது. அதற்குப் பிறகு 6 முதல் 12 மணி நேரங்கள் நோயாளி ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லப்படுகிறார். வழக்கமாக மறுநாளே அவரை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.
  • நோயாளி எந்தக் கடினமான உழைப்பையும் பயாப்சி முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குத் தள்ளிப் போடுவது உத்தமம்.

பயாப்சி செய்து கொள்வதினால் ஏதாவது அபாய சாத்தியக் கூறுகள் உண்டா?

எந்த ஒரு அறுவைச் சிகிச்சையிலும் இதர சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கின்றன. கொஞ்சம் வலியும் சிறுநீர் சிவப்பாக ஒரு முறை கழிக்கப்படுவதும் வெகு சாதாரணமாகக் காணப்படுபவையே எப்பொழுதாவது இரத்தம் கசிவது நிற்கவில்லை என்றால், அவசர கால சிகிச்சையாக சிறுநீரகத்தையே நீக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஒரு சில சமயங்களில் கிடைத்த சிறு சதைத்துண்டு போதுமான அளவு சோதனைக்கு உபயோகமில்லாமல் போய்விடலாம் 20-ல் 1 என்ற விகிதத்தில் இந்தத் தடங்கல் நிகழலாம். இத்தகைய நிலைமைகளில் பயாப்சியை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டியது அவசியமாகிறது.