Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

10: மிக மோசமாக செயலிழத்தல் காரணங்கள்

நீண்ட நாட்களுக்குத் தொடரும் சிறுநீரக நோய்கள்

நீண்ட நாட்களுக்குத் தொடரும் சிறுநீரக நோய்கள் CKD என்பதும் இந்த வகை, மிகவும் பயப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மருத்துவத்தில் குணப்படுத்தும் வழியே கிடையாது. உலகெங்கிலும் இந்த நோயின் தாக்கம் கூடியே வருகிறது. 10 மனிதர்களில் ஒருவருக்கு இந்த நோயால் தாக்கம் ஏற்படுகிறது. மென்மேலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகி வருவதும், உயர் இரத்த அழுத்தத்தின் தாக்கம் கூடி வருவதும், உடல் பருமன் கூடுவதும், புகைக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதும், காலஸ்ட்ரால் அதிகமாகிக் கொண்டு போகும் நிலையும் இந்த வகை சிறுநீரக நோய்களை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றன.

நீண்ட நாட்களுக்குத் தாக்கும் சிறுநீரக நோய் Chronic Kidney Disease என்றால் என்ன?

பல மாதங்களுக்குத் தொடர்ந்து மெல்ல மெல்ல வளர்ந்து, நிரந்தரமான செயலிழப்பைக் கொண்டு வருவதைத் தான் இந்த பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இரத்த பரிசோதனைகளின் போது, சீரம் கிரியேட்டினின் மதிப்பு உயர்ந்து வருவதும், இரு சிறுநீரகங்களுக்கும் தோற்றத்தைப் பார்க்க வைக்கும் சோனா கிராஃப் பரிசோதனைகளில் சிறியவையாகவும் சுருங்கியும் காணப் படுவதும் இந்த நோயை முழுவதுமாகக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

முந்தைய காலங்களில் இதற்கு Chronic renal failure CRF என்று சொல்லி வந்தார்கள். இது அலேகமாக CKD எனும் அடை மொழியுடன் ஒத்து வருகிறது. பின்னான பெயர் மேலும் பொருத்தமானது. எனின்றால் சிறுநீரகங்கள் முழுவதுமாக செயலிழக்காமல், நோயாகவே தொடர்கிறது என்பதை இது காட்டுகிறது. பெரும்பாலும் நோயின் தாக்கம் அப்படி இருப்பதில்லை. அலேகருக்கு நிலைமை சற்று மிதமாகவும் குறைவாகவுமே சிறுநீரக பாதிப்புக் காணப்படுகிறது. சிறுநீரகங்கள், நிச்சயமாக முற்றிலுமாக செயலிழந்து விடுவதில்லை. அப்படிச் சொல்வதற்கு இல்லை.

முடிவான நிலைக்குத் தள்ளப் பட்ட நோய் என்றால் என்ன?

End stage kidney disease. (எண்ட் ஸ்டேஜ் கிட்னி டிசீஸ்)

நிலை 5 எனும் மிக மோசமான நிலையை இந்த நோய் தொடும் போது, சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று சொல் வார்கள். அல்லது முடிவான நிலைக்கு ESKD என்பார்கள். இந்த நிலையில் அலேகமாக முழுமையாக சிறுநீரகங்கள் செயலிழந்து விடுகின்றன. நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து தாக்கி வந்த நோய், வழக்கமாக இந்த முடிவு நிலையை நோக்கியே நகர்கிறது. இந்த நிலையில் சிறுநீரகங்கள், சாதாரண நிலையில் இருப்பதைப் போல 10 சதவீதமே செயல்படுகிறது. இந்த நிலையை அலேகமாக திருப்ப சாதாரண நிலைக்குத் திருப்பவே முடியாது. இதை வழக்கமான வழிமுறைகளில் குணப்படுத்தவே முடியாது டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரகங்களைப் பொருத்துதல் போன்ற வழிமுறைகளில்தான் செய்ய முடியும்.

இந்த நீண்ட நாள் நிலை எப்படி ஏற்படுகிறது?

இதற்கு பல காரணங்கள் சொல்லலாம் நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இரு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். மொத்தமாக நோயாளிகளில் 2/3 பங்கு இவ்வகை காரணங்களால் தாக்கப் படுகிறார்கள் மேலும் சில முக்கிய காரணங்களாவன.

  1. நீரிழிவு நோய். இது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணம். ஏற்படும் தாக்கங்களில் 35-40 சதவீதம் இந்தக் காரணத்தாலேயே ஏற்படுகிறது. சராசரியாக மூன்றில் ஒரு நோயாளிக்கு நீரிழிவினாலேயே ஏற்பட்டு விடுகிறது.
  2. உயர் இரத்த அழுத்தம். சரியாக அல்லது முறையாக இரத்த அழுத்தம் கவனிக்கப் படாமல் விட்டு விட்டால், இந்த நோய் வரும். இவ்வகையில் மொத்த நோயாளிகளில் 30 சதவீதம் இப்படி தாக்கப் பட்டிருப்பது தெரிய வருகிறது. நீண்ட நாள் தாக்கத்திற்கு ஏது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம், நிச்சயமாக சிறுநீரக செயல்பாடுகளை மேலும் முடக்கும்.
  3. Glomerulonephritis (கிளாமருலோநெஃப்ரைட்டிஸ்) இவ்வகை கோளாறுகள் இந்த வகையில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.
  4. Polycystic kidney disease (பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்) இது மிகவும் பொதுவாக வரும் தாக்கம். இது பாரம்பரிய வழிகளில் ஏற்படுவது. இரு சிறுநீரகங்களிலும் வேண்டாத சதை வளர்ச்சியை பலவாகக் காணப்படும்.
  5. இதர காரணங்கள். வயது மூப்படைவதால் வருவது, renal artery Stenosis (narrowing), (ரீனல் ஆர்ட்டரி ஸ்டெனோசிஸ் குறுகல்) கர்கள் சிறு நீர் பாதையில் இருந்து தடுப்பது, அல்லது பராஸ்டேட் சுரப்பி பெரிதாகி விடுவது, மருந்துகளோ அல்லது விஷப் பொருட்களால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுவது, மீண்டும் மீண்டும் தொற்று வருவது (குழந்தைகளுக்கு) மற்றும் reflux nephropathy (ரிஃப்ளக்ஸ் நெஃப்ரோபதி) எனும் நோயால் தாக்கப் படுவது.