Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

3: சிறுநீரகங்களின் நோய்களின் அறிகுறிகள்

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

கீழ்க்கண்ட அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும். அவற்றுக்கு அடிப்படையில் இருக்கும் மிகை நோய்களும் அவற்றின் தீவிரங்களும் இந்த மாற்றங்களைக் கொண்டு வரும்.
பொதுவான அறிகுறிகள்:

முகம் வீங்குதல்

முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் கை விரலும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண்ணிமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும் நிலைகளாகும்.

சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கப்படும் செய்தி.

ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே பொதுவான அறிகுறிகள் அல்ல. ஒரு சில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். (உதாரணத்திற்கு நெஃப்ராடிக் சிண்ட்ரோம் போன்ற நோய் வகைகள்). அதைப் போன்றே ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாதிப்பு இருக்கும்.

பசியின்மை, வாந்தி எடுத்தல் போன்றவை

பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இது மெல்ல மெல்லப் பழுதாகும்போது, நச்சுப்பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும்போது சம்பந்தப்பட்ட நோயாளிக்கு வாந்தி எடுக்கும் மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும்.

உயர் இரத்த அழுத்தம் - ஹைபர் டென்ஷன்

சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது இயல்பு. இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால், மருத்துவர் ஆலோசனை அவசியம். சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் முடிவுக்கு வருவது நல்லது.

கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடுநாட்களாகவே கூட நீடித்துக்கொண்டிருக்கலாம். வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம்.சோதிக்கும்போது அப்படிக் கண்டால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இரத்த சோகையும் உடல் நலிவாதலும்

பொதுவாக ஏற்படும் உடல்நலிவு, ஆரம்ப வலிகள், வேலையில் அவ்வளவு கவனக்குறைவு இவற்றுடன் இரத்த சோகை ஏற்படக்கூடும் (ஹீமோகுளோபின் அளவு குறைவு). இது போன்ற சமயங்களில் மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும்போது ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகளுக்கு இரத்த சோகை குணப்படுத்த இயலவில்லை என்றால், சிறுநீரக நோய் தாக்கியது என்று அர்த்தம்.

எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள்

கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் துடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பாகும். வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து போதல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்போது வரக்கூடிய அறிகுறிகள்.

சிறுநீரைப் பொறுத்த சில கோளாறுகள்.

பொதுவாக ஏற்கக்கூடிய இவ்வகை கோளாறுகள்.

  1. குறைந்துவிடும் சிறுநீரின் கன அளவு. இது வீக்கத்தைக் கொண்டு வரும். அதே சிறுநீரக நோய்களினால் இது மிகவும் பொதுவாகக் காணப்படும் அறிகுறி.
  2. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழிதலும், சிறுநீர் கழிக்கும்போது இரத்தமும் சேர்ந்து போதல் அல்லது சீழும் சேர்ந்து வருதல் என்பவை சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
  3. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்பு வலியை ஏற்படுத்தும். அல்லது அளவு மிகவும் குறைந்து துளித்துளியாக வெளிவரும். மிகவும் மோசமான நிலைகளில், சிறுநீர் கழிப்பதே மிகவும் சிரமமாகிவிடும். இது ஒரு அசாதாரண நிலை அல்ல.

ஒருவருக்கு மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் அவற்றுக்கு சிறுநீரக நோய் கண்டிருக்கிறது என்று முடிவு கட்டி விடக் கூடாது. இருந்தாலும், இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது உடனுக்குடன் செய்ய வேண்டியது அவசியம். சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் முடிவுக்கு வருவது நல்லது.

கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடுநாட்களாகவே கூட நீடித்துக் கொண்டு இருக்கலாம். வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம்.