சிறுநீரில் கற்கள் உருவாகும் நோய்
இந்த நோய் அதாவது சிறுநீர்ப் பையில் கற்கள் உருவாதல் வெகு பொதுவாகவே காணப்படும் நோய். இக்கற்கள் சொல்ல முடியாத வலியைக் கொண்டு வரும். ஒரு சில சமயங்களில் இந்தக் கற்கள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து நீடித்து வரக்கூடும். இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையில் தொற்றைக் கொண்டுவந்து சிறுநீரகங்களைப் பாழாக்கும். ஒரு சிலருக்கே இப்படி ஏற்படும். அதை முறையாகவும் விரைவாகக் கவனித்துச் செய்யாவிட்டால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். ஒரு முறை, கற்கள் தோன்றி விட்டால் பிறகு அவை தொடர்ந்து நீடிக்கும். ஆகவே நோயைப் புரிந்து கொள்வதும், தடுப்பதும் நோயைப் பற்றிய கவனமும் கொள்வதும் மிக அவசியம்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது என்றால் என்ன?
கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் உருவாகும். அந்தப் படிகங்களின் திண்மை அதிகமாக இருந்தாலோ, அல்லது கால்சியம், ஆக்சலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில் இருந்தால் கற்கள் உருவாகி இருக்கின்றன என்று அறிகிறோம். இம்மாதிரியான படிகங்கள் லட்சக்கணக்கில் உருவாகிச் சேர்ந்தவுடன், அளவில் பெரிதாகி நீண்ட நாட்கள் தங்கி விட்டால் அவையே கற்களாகின்றன.
வழக்கமாக சிறுநீரின் அமைப்பு எப்படியென்றால் இயற்கையாகவே இக்கற்கள் உருவாவதை அது தடுக்கும். இந்தத் தடுப்புத் திறன்கள் சிறுநீரில் குறையும்போது, கற்கள் உருவாகி விடுகின்றன. urolithiasis எனும் சொல், இந்த கற்களைக் குறிக்கும் சொல்லாகும். ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுதல் அவசியம் – பித்தப்பையில் உருவாகும் கற்கள் வேறு, சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கற்கள் வேறு.
அந்தக் கற்களின் அளவு, உருவம் மற்றும்
உருவாகும் இடம் எவை?
இந்தக் கற்கள் அளவிலும் உருவத்திலும் மாறுபடும். ஒரு சிறு மணல்துண்டை விடப் பெரியதாக இருக்கலாம். அல்லது ஒரு மேசைப் பந்து போலப் பெரிதாக இருக்கலாம். அது உருண்டையாகவும் அல்லது நீள வட்ட வடிவத்திலும் இருக்கலாம். அதன் மேற்பரப்பு மென்மையாக இருக்கும். இவ்வகைக் கற்கள் அவ்வளவு வலியைக் கொண்டு வருவதில்லை. இயற்கையிலேயே அவை வெளிவருவது மிகவும் சாத்தியமே. அல்லது எந்த முறையான வடிவமும் இல்லாமல் மேற்பரப்பு சொரசொரப்பாகவும் இருக்கக்கூடும்.
சிறுநீரகங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம். ஆனால் அவை சிறுநீரகங்களில்தான் பெரும்பாலும் உருவாகும்.
சிறுநீரகத்தில் வளரும் கற்களின் வகை என்னென்ன?
சிறுநீரகத்தில் வளரும் கற்களில் நான்கு வகைகள் உண்டு.
- கால்சியம் கல்: இதுவே மிகப் பரவலாகக் காணப்படுபவை. பெரும்பாலும் 70 முதல் 80 விழுக்காடு வரை காணப்படுவது இதுவே. இவை அநேகமாகக் கால்சியம் ஆக்சலேட்டாகக் காணப்படும். சற்றே குறைவான அளவில் கால்சியம் பாஸ்பேட்டாகக் காணப்படும். சிறுநீர் அமிலத் தன்மையைக் கொண்டிருந்தால் உருவாவதே கால்சியம் ஆக்சலேட் போன்ற கற்களாகும்.
- Struvite stones. மெக்னீஷியம் அம்மோனியம் பாஸ்பேட் கற்களுக்கே இப்பெயரிட்டு அழைப்பர். இவை கொஞ்சம் அவ்வளவு அதிகமாக உருவாவதில்லை. 10 லிருந்து 15 சதவீதமே காணப்படுபவை. இவை சிறுநீரகங்களில் ஏற்படும் தொற்றுகளாலேயே ஏற்படுபவை. இந்தக் கற்கள் பெரும்பாலும் பெண்களையே தாக்குகின்றன.
- யூரிக் அமிலக் கற்கள்: இந்தக் கற்கள் அவ்வளவு பொதுவாகக் காணப்படுவதில்லை. சுமார் 5 முதல் 10 சதவீதமே இவை காணப்படுகின்றன. யூரிக் அமிலம் சிறுநீரில் மிகுந்தாலே இவை உருவாகும். அதுவும் சிறுநீர் தொடர்ச்சியாக அமிலத்தன்மையுடன் காணப்பட்டாலே இவை உருவாகும். எவருக்கெல்லாம் மூட்டு வலி வருகிறதோ அவர்களுக்கு இந்தக் கற்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அல்லது கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள மாமிசத்தை உண்பவர்களுக்கும் அல்லது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வரும். அல்லது கீமோதெரபி சிகிச்சைக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கும் வரும். யூரிக் அமிலக் கற்களை எக்ஸ்-ரே கதிர்கள் கொண்டு அறிய முடியாது. அதாவது அடி வயிற்றை எக்ஸ்-ரே படம் பிடித்தால் அதில் இவை அகப்படாது.
- Cystine stones. இவை கொஞ்சம் அரிதாகவே உருவாகக் கூடியவை. இவற்றை வம்ச வழியாகப் பெற்ற நிலையில் தெரியும். அதற்குப் பெயர் சிஸ்டினூரியா. சிறுநீரில் அதிகமாக காணப்படும் சிஸ்டினால் அந்தப் பெயர் பெறுகிறது.
Staghorn stone என்றால் என்ன?
இது ஒரு பெரிய ஸ்டுருவைட் கல்லாகும். சிறுநீரகத்தில் ஒரு பெரும் இடத்தை இது அடைத்துக் கொள்ளும். ஒரு மானின் கொம்புகளைப் போல இது இருக்கும். அதனாலேயே அந்தப் பெயர். இவை மிகக் குறைந்த அளவே வலியைக் கொண்டு வரும். அல்லது வலியையே கொடுக்காது. இதைக் கண்டறிவது பெரும்பாலும் கடினமான முயற்சியே. கண்டறிய முடிவதில்லை. முடிவாக, சிறுநீரகம் கடுமையாகத் தாக்கப்படுவதே.
சிறுநீரகக் கற்களை கொண்டு வரும் காரணிகள் எவை?
- இந்தக் கற்கள் உருவாவதற்கு யார் என்ற பாகுபாடின்றி எவருக்குமே இந்தக் கற்கள் உருவாகலாம். அவற்றுக்கான காரணிகள் இவை.
- பருகும் குடிநீர் குறைவாக இருந்து, நீர்ச்சத்து வற்றிப் போனால் வரும்.
- இதற்கு குடும்ப வரலாற்றில் இடம் பெற்றிருந்தால் வரும் வாய்ப்பு வம்சாவழியாக வரலாம்.
- உணவு. மாமிசத்தில் புரதச் சத்து அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஆக்சலேட் அதிகமாகவும், நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது பொட்டாசியம் அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களை உண்ணாமல் இருந்தாலோ வரும்.
- ஆண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் 75 சதவீதமும், சிறுநீர்ப்பையில் 95 சதவீதமும் உருவாகலாம். ஆண்களுக்கு 20 வயது முதல் 70 வயது வரையிலும், பருமனாக இருப்பவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் கற்கள் உருவாகலாம்.
- நெடு நாட்களுக்கு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தால் கற்கள் உருவாகலாம்.
- மிக வெப்பத்தோடு அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இது வரும்.
- அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் வந்தால் கற்கள் உருவாகும். அல்லது சிறுநீர்ப்பாதை தடைப்பட்டால் கற்கள் உருவாகும்.
- உணவை சக்தியாக மாற்றும்போது வரக் கூடியவை – உதாரணத்திற்கு ஹைப்பர் பாராதைராய்டிசம் (hyperparathyroidism), சிஸ்டினுரியா (cystinuria), கவுட் (gout) போன்ற நோய்கள் இவற்றிற்கு காரணமாக அமையலாம்.
- ஒரு சில மருந்துகளான டையூரிடிக்ஸ் மற்றும் ஆன்டாசிட் (diuretics and antacids) உபயோகிப்பதால் கற்கள் உருவாகலாம்.
ஒரு சிறுநீரகக் கல்லுக்கு என்னென்ன அடையாளங்கள் இருக்கும்?
இந்த அடையாளங்கள், உருவம், அளவு, வளரும் இடம் பொறுத்து மாறலாம். பொதுவாக இந்த அடையாளங்கள் ஆவன:
- அடிவயிற்றில் வலி.
- எந்தவித அடையாளமும் இல்லாமல் இருக்கலாம். வழக்கமாக உடலைப் பரிசோதிக்கும்போது தற்செயலாகக் கண்டறியப்படலாம். அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக சோதிக்கும்போது காணப்படலாம். இப்படி எந்தவித அறிகுறியும் இல்லாமலும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் கற்களுக்கு, அமைதியான கற்கள் என்று பெயர்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் எப்போதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருப்பதாகும்.
- அடிக்கடி வாந்தி எடுத்தல்
- சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் (ஹீமேச்சூரியா)
- சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல்
- யூரித்ராவில் கற்கள் தடையாக உருவாகிவிட்டாலோ அல்லது சிறுநீர் வெளியேறி கொண்டிருக்கும்போதே திடீரென்று நின்றுவிட்டாலோ இது ஏற்படும்.
- கற்கள் ஒரு சில சமயங்களில் அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் தோன்றவைக்கும். அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் தடைகள் ஏற்படுவதால் பாதிப்பு உருவாகும். இதனால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீரகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
கற்களால் வரும் அடி வயிற்று வலி எப்படி இருக்கும்?
- வலியின் வீரியமும் வலிக்கும் இடமும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கக் கூடும். இது கல்லின் அளவையும் உருவத்தையும் கல் இருக்கும் இடத்தையும் பொறுத்தது. அது சிறுநீரகப் பாதையில் எங்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. வலிக்கும் கல்லின் உருவத்திற்கும் - பெரியது அல்லது சிறியது - என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சிறு கற்களினால் அதிக வலி ஏற்படலாம். பெரிய கற்களை விட அவை மேலும் அதிக வலியைக் கொடுக்கும்.
- வலி வெறும் ஊமை வலி போல இருக்கலாம். அல்லது திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தினாலும் வாகனங்களில் போகும்பொழுது ஏற்படும் தீவிர அசைவுகளினாலும் ஏற்படலாம். வலி, ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும். அதன்பின் வலி நின்று விடலாம். சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் மிக அதிகமாகவும் பின்பு குறைவதுமாக வலியைத் தோற்றுவிக்கும்.
- எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றி வலி இருக்கும். பெரும் பாலும் வாந்தி எடுப்பதும் அத்துடன் சேர்ந்து வரும்.
- சிறுநீர்ப்பையில் இருக்கும் கல், கீழ் அடி வயிற்றில் வலியைக் கொடுக்கும். சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்படும். பெரும் பாலும், இது ஆண்குறியின் நுனியில் ஏற்படும்.
- திடீரென்று மிக அசாதாரண அடி வயிற்று வலியை அனுபவிப்பவர்கள், உடனடியாக மருத்துவ உதவியை நாடிப் போவார்கள்.
இந்தக் கற்கள் சிறுநீரகங்களை தாக்கக் கூடுமா?
ஆமாம், தாக்கக் கூடும். சிறுநீரகத்தில் இருக்கும் கற்களோ அல்லது யூரீட்டரில் இருக்கும் தடுப்புகளோ சிறுநீர் வெளியேறுவதற்குத் தடங்கலைக் கொண்டு வரும். இந்தத் தடுப்புகள் சிறுநீரகங்களை பாதிக்கும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால் பாதிப்பு நீண்ட காலத் தாக்கத்திற்கு உள்ளாகலாம்.
இந்தக் கற்களை எப்படிக் கண்டறிவது?
சோதனைகளும் இவை இருப்பதைக் கண்டுபிடிக்க மட்டும் நடத்தப்படுவதில்லை. ஆனால் சிக்கல்களைக் கண்டுபிடிக்கவும் பயன்படுகின்றன. இந்தக் கற்கள் உருவாக்கும் காரணங்கள் ஆராயப்படுகின்றன.
எக்ஸ்ரே படங்கள் முதலியவற்றால் ஆராய்ச்சி
அல்ட்ராசவுண்டு. இது எளிதாகவும் செலவு குறைவாகவும் இருக்கும் சோதனை. இது பெரும்பாலும் கற்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
எக்ஸ்ரே மூலம் அளவு, உருவம் மற்றும் கற்கள் இருக்கும் இடம் எக்ஸ்ரே படங்கள் மூலம் அறியலாம். இதை சிறுநீர்ப்பையை எக்ஸ்-ரே படம் எடுத்து அறியலாம். ஆகவே இதுவே மிகவும் உபயோகமான வழியாகும். சிகிச்சைக்கு முன்பும் பின்பும் இதுவே ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
CT Scan இந்தச் சோதனையே மிக மிகத் துல்லியமாகக் கண்டு பிடித்துச் சொல்லக் கூடிய ஒரு சோதனை ஆகும். இந்த வழியையே பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் எல்லாவிதமான உறுப்புகளிலும் இருக்கும் கற்களைக் கண்டறியலாம். அவை எங்கிருக்கின்றன என்பதையும் துல்லியமாகக் கண்டறியலாம்.
Intravenous urography (IVU) இந்தச் சோதனை அவ்வளவாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இதன் மூலம் வெகு துல்லியமாகக் கற்கள் இருக்குமிடத்தை அறியலாம். சிறுநீரகங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை இந்தச் சோதனை துல்லியமாகத் தெரிய வைக்கும். சிறுநீரகத்தின் அளவையும், மற்றும் இதர சில அம்சங்களையும் இந்தச் சோதனை மிக நன்றாக அறிய வைக்கிறது.
சோதனைச் சாலையில் சில சோதனைகள்.
சிறுநீர் பரிசோதனைகள்: இவற்றின் மூலம் தொற்றையும் சிறுநீரின் pH மதிப்பையும் கண்டுகொள்ளலாம் 24 மணி நேரத்திற்கு சிறுநீரைப் பிடித்து வைத்து அளவிட்டால் எவ்வளவு கழிக்கப்படுகிறது என்ற கண அளவைக் கண்டுகொள்ளலாம். மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், யூரிக் அமிலம் மற்றும் மக்னீசியம் ஆக்ஸலேட், சிட்ரேட், சோடியம், கிரியேட்டினின் இவற்றின் அளவையும் காணலாம்.
இரத்தப் பரிசோதனை. அடிப்படை சோதனைகள் – இரத்தத்தின் கவுண்ட், கிரியேட்டினின், மின் கடத்தும் திரவங்களின் அளவு மற்றும் சர்க்கரை இவற்றை அளந்து காணலாம். சிறப்பான சில சோதனைகள் மூலம் கற்கள் உருவாக வைக்கும் இரசாயனப் பொருட்களைக் கண்டு கொள்ளலாம்.
கற்களைப் பற்றிய ஒரு ஆய்வு: தன் வழியிலேயே வெளியே உதறித் தள்ளப்படும் கல்லோ அல்லது மனித முயற்சியால் வெளியே எடுக்கப்பட்டதோ அவை உடனே பரிசோதிக்கப்படுகின்றன. அவற்றின் இரசாயன அமைப்பும் சோதிக்கப்பட்டு தடுப்பு வழிகள் உருவாக்கப்படுகின்றன.
கற்களைத் தடுப்பது எப்படி: பெரும்பாலும் இப்படிச் சொல்வதுண்டு. ஒரு முறை கல் தோன்றி விட்டால் என்றென்றைக்கும் அப்படியே உடல் தோன்ற வைக்கும் என்று சொல்வார்கள். 50 லிருந்து 70 சதவீத நோயாளிகளுக்குக் கற்கள் உருவாவது மீண்டும் ஏற்படுகிறது. அல்லது முறையான மருத்துவத்தால் அல்லது முன்னெச்சரிக்கைகளால் மீண்டும் வரும் விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக்கப்படுகிறது. ஆகவே ஒரு முறை தாக்கப்பட்டவர் தடுப்பு முறைகளை அவசியம் அனுசரிக்க வேண்டும்.
பொதுவான சில வழிமுறைகள்.
உணவு என்பது ஒரு மிக முக்கியமான அம்சம் உணவே சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கலாம். அல்லது கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பொதுவாகவே கற்கள் சிறுநீரகத்தில் உருவாகி அவதியுறும் நோயாளிகளுக்கு எல்லாம் பொதுவான சில வழிமுறைகளாவன:
1. ஏராளமாகத் தண்ணீர் பருகவும்.
- ஒரு எளிய மற்றும் மிக முக்கியமான வழி நிறைய குடிநீரைப் பருகுவதாகும். இதுவே கற்கள் உருவாவதைத் தடுக்கும். நிரம்ப நீர் பருகவும். நிரம்ப நீர் பருகவும். ஒரு நாளைக்கு 12 லிருந்து 14 டம்ளர்கள் நீர் பருகவும். (இது 3 லிட்டர்களுக்கும் மேல்) . கையில் ஒரு பாட்டில் குடிநீரை எடுத்துக் கொண்டே செல்லவும்.
- எல்லா நோயாளிகளுக்கும் எந்த நீரைப் பருகுவது என்பதில் ஒரு சந்தேகம் எப்பொழுதும் இருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் - எந்த நீரைப் பருக வேண்டும் என்பதை விட எவ்வளவு நீர் பருகுகிறீர்கள் என்பதே மிக முக்கியம்.
- கற்கள் உருவாகாமல் தடுக்க, போதுமான அளவு சிறுநீரகத்தில் ஒவ்வொரு நாளும் சுரக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இது எடுத்துக் கொள்ளும் அளவை விட மேலும் முக்கியம். நீங்கள் சரியான அளவு பருகும் நீரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கணக்கிட, ஒவ்வொரு நாளும் வெளிவரும் சிறுநீரின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். அது 2 லிருந்து5 லிட்டர்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
- சிறுநீரின் நிறத்தைப் பார்த்தாலே நீங்கள் எவ்வளவு ஒழுங்குடன் நீரைப் பருகி வருகிறீர்கள் என்பதைக் காட்டும். நாள் முழுவதும் போதுமான அளவு பருகி வந்தால், சிறுநீர் நீர்த்து இருக்கும். தெளிவாக நிறமின்றி அநேகமாக நீரைப் போலவே இருக்கும். நீர்த்த சிறுநீர் என்பது தாது உப்புக்களின் அளவு குறைந்தே இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இருந்தாலே கற்கள் உருவாவது தடுக்கப்படும். கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்துடன், திண்மை அதிகமாக இருக்கும் சிறுநீர் வெளிவந்தால், போதுமான அளவு குடிநீரைப் பருகாமல் இருக்கிறீர்களென்று அர்த்தம்.
- கற்கள் உருவாகாமல் இருக்க, உணவுக்குப் பின், இரண்டு கிளாஸ்கள் நீரைப் பருகும் வழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.
- அதே போல் படுக்கப் போகும் முன்பும் இரண்டு கிளாஸ்கள் குடிநீர் பருகவும். ஒவ்வொரு முறையும் இரவில் விழித்து எழ நேர்ந்தால் கண்டிப்பாக ஒரு கிளாஸ் நீர் பருகவும். நடு இரவில் அப்படி நீரைக் குடிப்பது தடுப்புக்கு மிக முக்கியமான வழியாகும். ஏன், ஒரு அலாரம் கடிகாரத்தின் உதவியால் குறித்த நேரத்திற்கு இரவில் எழுந்து நீரைக் குடிப்பது நிச்சயம் நல்ல பயன் தரும்.
- உடல் உழைப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு அவசியமாக அதிகமாக திரவங்களைப் பருகுதல் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு வியர்வை மூலம் நிறைய நீர் வெளியே சென்று விடுகிறது.
- இளநீரைக் குடிப்பது, பாலி அல்லது அரிசி கழுவிய நீரைக் குடிப்பது, எலுமிச்சை சாறு, அல்லது வெள்ளரிச் சாறு போன்றவை உள்ளே செல்லும் நீரின் அளவைக் கூட்டி கற்கள் சிறுநீரகத்தில் உருவாவதைத் தடுக்கின்றன.
என்னென்ன வகையான திரவங்கள் கற்கள் உருவாவதைத் தடுக்கும்?
மேற்சொன்ன திரவங்கள் யாவும் அதற்கு நல்லது. ஆனால் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குடி நீரே இருக்க வேண்டும்.
எவ்வகையான திரவங்களை, கற்கள் உள்ள நோயாளி தவிர்க்க வேண்டும்?
திராட்சை பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், கிரான்பெர்ரி ஜூஸ், ஸ்ட்ராங் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் சர்க்கரை போட்ட குளிர் பானங்கள் - கோலா போன்றவை - மற்றும் மது கலந்த குடிபானங்கள், பீர் உட்பட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
2. உப்பைக் குறைத்தல்.
அதிக உப்பு கலந்த உணவை நிச்சயம் தவிர்க்கவும். ஊறுகாய், அப்பளம், உப்பு நிறைந்த நொறுக்குத் தீனி, முதலியவற்றை அறவே நீக்கவும். இதனால் சிறுநீருடன் கால்சியம் நிறைய கலந்து விட வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் கற்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு 100 mEq அல்லது 6 கிராம் டேபிள் உப்புக்கு மேல் எடுத்துக் கொள்வதைத் தடுத்து கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
3. மாமிசத்தில் அதிகம் புரோட்டீன் கலக்காமல் உண்ணவும்.
மாமிச உணவு - மட்டன், சிக்கன், மீன் மற்றும் முட்டை - இவற்றை எடுத்துக் கொள்ளுதல் வேண்டாம். இவற்றில் யூரிக் அமிலம் நிறைய இருக்கிறது. அதுவே யூரிக் அமில கற்கள் உருவாவதை ஊக்குவிக்கும். கால்சியம் கற்கள் உருவாவதும் துரிதப்படுத்தப்படும்.
4. சமச் சீரான உணவு.
நிரம்ப காய்கறிகளும் பழங்களும் கொண்ட சமச்சீரான உணவை உண்ணவும். இது சிறுநீரகத்தின் மீது நாம் உருவாக்கும் அமிலத்தின் கனத்தை குறைக்கிறது. வாழைப் பழம், பைனாப்பிள், ப்ளூபெர்ரிக்கள், செர்ரிக்கள் மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் போன்றவற்றை நிரம்ப எடுத்துக் கொள்ளவும். காரட், பாவக்காய், ஸ்குவாஷ் மற்றும் வால் மிளகு போன்றவற்றை நிரம்ப உணவில் கலக்கவும். பார்லி, பீன்ஸ், ஓட்ஸ் மற்றும் சிலியம் விதைகள் போன்றவற்றை அதிகமாகக் கலந்து கொள்ளுங்கள்.
5. இதர வழி முறைகள்.
சி விட்டமின் எடுத்துக் கொள்வதை ஒரு நாளைக்கு 1000 மி.கி.க்கும் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் நெடு நேரம் கழித்து மிக அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள். கற்கள் உருவாவதற்கு உடல் பருமன் ஒரு தனி காரணமாகிறது. ஒரு தனியான சாத்தியக்கூறுகளை அது கொண்டு வரும். உடல் பருமனைக் குறைத்தும் சமச்சீரான உணவை உண்ணுதலையும் ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள்.
தனிச் சிறப்பு வாய்ந்த வழி முறைகள்.
1. கால்சியம் உள்ள கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?
- உணவு: சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி அவதியுறும் நோயாளிகளுக்கு கால்சியமே கூடாது என்று சொல்வது தவறு. கால்சியம் கூடிய சத்தான உணவையே உண்டு வரவும். பால் பொருட்களும் அதில் சேரலாம். அதனால் கற்கள் உருவாவது தடுக்கப்படலாம். உணவில் கால்சியம் குறைந்து விடும்போது, ஆக்ஸலேட் சிறு குடலில் செரிக்கப்பட்டு ஆக்ஸலேட் கற்கள் உருவாவது சாத்தியமாகிறது.
- கால்சியம் கூடிய உபரி உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். கால்சியம் குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும். இரண்டுமே கற்கள் உருவாவதற்குக் காரணமாகின்றன. அப்படி அந்த உபரிப் பொருட்கள் அவசியமாக இருந்தால், உணவுடன் அவற்றைக் கலந்து சாப்பிட்டு, அபாய சாத்தியக் கூறுகளைக் குறையுங்கள்.
- மருந்து வகைகள் Thiazide diuretics போன்ற மருந்துகள் கால்சியம் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
2. ஆக்ஸலேட் கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?
- ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவை தவிர்த்தால், இவ்வகை கற்கள் உருவாக மாட்டா. அப்படி ஆக்ஸலேட் அதிகம் உள்ளவை
- காய்கறிகள்: பசலைக் கீரை, வெண்டைக்காய், பீட்ரூட், மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை.
- பழங்களும் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு ராஸ்பெர்ரிகள், சிக்கு, அம்லா, திராட்சைப் பழங்கள், முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, பாதாம் பருப்பு மற்றும் அத்திப் பழங்கள் உள்ளன.
- இதர உணவு வகை. பச்சைமிளகு, பழம் சேர்ந்த கேக்குகள், கருத்தசாக்லேட், மற்றும்
3. யூரிக் அமிலக் கற்களைத் தவிர்ப்பது எப்படி? மது கலந்த எந்த பானத்தையும் தவிர்க்கவும்.
- மிருக மாமிச புரோட்டீனை தவிர்க்கவும். அதாவது ஒரு குறிப்பட்ட மிருக அங்கத்தின் மாமிசம் - மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற - அங்க மாமிசத்தைத் தவிர்க்கவும். போர்க், சிக்கன், மற்றும் மாட்டிறைச்சி, முட்டை இவற்றைத் தவிர்க்கவும்.
- பருப்பு வகைகளைத் தவிர்க்கவும். பீன்ஸ், பசலைக் கீரை, காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- சரிவரப் புரியவில்லை, வறுக்கப்பட்ட தானியங்கள் - இவற்றைத் தவிர்க்கவும்.
- மருத்துவம்: Allopurinol எனும் மருந்து மேற்கண்ட கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீரில் யூரிக் அமிலம் சேர்வதைக் குறைக்கும். பொட்டாசியம் சிட்ரேட் கற்கள் கரைவதை ஊக்குவிக்கும்.
- இதர வழிகளில் உடல் எடையைக் குறைப்பது ஒன்று ஆகும்.
சிறுநீரக கற்களுக்கு ஏற்ற சிகிச்சை என்ன?
இது கற்களின் உருவத்தையும் அளவையும், இருக்கும் இடத்தையும் பொறுத்தது. சிறுநீரகத்தில் வேறு எந்தவித தொற்றும் இருக்கக் கூடாது. சிறுநீர்ப் பாதையில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது. இரண்டு பிரதான வழிகள் சிகிச்சைக்கு உண்டு.
A. தொன்றுதொட்டு அனுசரிக்கப்படும் சிகிச்சை.
B. அறுவை சிகிச்சை
அ. தொன்று தொட்டு அனுசரிக்கப்படும் சிகிச்சை
பெருவாரியான கற்கள் பெரும்பாலும் மிகச் சிறியவை (5 மி.மி.க்கும் குறைவான அளவு விட்டத்தை உடையவை.) அறிகுறிகள் கண்டு சுமார் 3 முதல் 6 வாரங்களுக்குள் வெளியேறி விடும். அறிகுறிகளைக் களைவதே சிகிச்சையின் நோக்கம். மேலும் மேலும் அறுவை இல்லாமல் குணப்படுத்துவதே இதன் நோக்கம்.
உடனடியாக கற்களுக்கு சிகிச்சை தருவது.
பொறுக்க முடியாத வலிக்கு எதிரான சிகிச்சைகள் NSAIDS OR opioids ஊசிகளை நரம்பு ஊசிகள் மூலம் ஏற்றுதல். கொஞ்சம் வலி குறைவாக இருந்தால், வாய் மூலம் மாத்திரைகள் சாப்பிடலாம். பெரும்பாலும் அவை திறன் மிக்கதாக இருக்கும்.
நிரம்ப பானங்களைப் பருகுதல்
பொறுக்க முடியாத வலியை உடையவர்களுக்கு நிரம்ப பானங்களை எடுத்துக்கொள்வது சற்று மிதமாக இருத்தல் வேண்டும். அதிகம் கூடாது. ஏனென்றால் அதுவே வலியைக் கூட்டி விடும். வலி இல்லாத பொழுது திரவங்களைப் பருகலாம். ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 லிட்டர்கள் குடிநீரைப் பருகுவது அறுவை சிகிச்சை இல்லாமல் கற்களை வெளியே எடுக்க உதவும். பீர் பானம் மருத்துவத்தில் ஒன்று இல்லை. அதுவும் கற்கள் உடையவர்களுக்கு அது மருந்தாகாது. வாந்தியும் காய்ச்சலும் உடன் வந்தால், இரத்த நாளம் வழியாக சலைன் கரைசலை ஏற்றுவது ஒன்றே வழி. சிறுநீரில் வெளி வரும் கற்களை நோயாளி குறிப்பாக எடுத்துக் காண்பிக்க வேண்டும். இதற்காக ஒரு சல்லடை வழியாக சிறுநீரைப் பாய்ச்சி கல்லை வெளியே எடுக்கலாம்.
இதர வழி முறைகள்
சிறுநீரின் pH மதிப்பை சரியான நிலையில் வைக்க வேண்டும். கால்சியம் சேனல் தடுப்பு மருந்துகள், ஆல்ஃபா தடுப்பு மருந்துகள் கற்களை யூரீத்தரிலேயே விட்டு விடும்படி செய்கின்றன. வாந்தி மற்றும் இதர உபத்திரவங்களை தனியாக சிகிச்சைகள் மூலம் தீர்க்கவும். எல்லா பொதுவான தடுப்பு முறைகளையும் அனுசரித்து குணம் காணவும்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைகள் பல உண்டு. இவற்றை மேற் சொன்ன பாரம்பரிய வழிகளோடு சேர்த்து செய்யக் கூடாது. Extracorporeal shock wave லிதோட்ரிப்சி (ESWL) என்பது ஒரு வழியாகும். இன்னும் சில வழிகள் உண்டு. சில அபூர்வ நிலைமைகளில் அங்கத்தை திறந்தவாறு செய்யப்படும் அறுவையும் உண்டு. இவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்து திறன்மிக்கது அல்லது இல்லை என்று சொல்ல முடியாதவை ஒரு நோயாளிக்கு எது உகந்தது என்பதை சிறுநீரக மருத்துவ நிபுணரே தீர்மானிப்பார்.
எவரெவருக்கு அறுவை சிகிச்சை தேவை?
சிறு அளவு கல்லே இருப்பவர்களுக்கு பாரம்பரிய வழிகளிலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை எப்பொழுது அவசியம் என்று தோன்றும் என்றால்-
மீண்டும் மீண்டும் அசாத்திய வலி தோன்றினாலோ அல்லது குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் போகாமல் நீடித்தாலோ அறுவையே செய்ய வேண்டும்.
- கல் இயல்பாகவே வெளியேறுவதற்குத் தடையாக அதன் உருவம் பெரிதாக இருக்கும்.
- சிறுநீர் வெளியாவதையே பெருமளவு தடை செய்யும். சிறுநீரகத்தையே தாக்கிக் கொண்டிருக்கும்.
- மீண்டும் மீண்டும் சிறுநீர் செல்லும் பாதையில் தொற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும். அல்லது இரத்தப் போக்கை உண்டாக்கிக் கொண்டிருக்கும்.
கல் ஒன்றின் தடுப்பினாலேயே சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். அது ஒரே ஒரு சிறுநீரகத்தை பாதித்திருக்கலாம் அல்லது இரு சிறுநீரகங்களையும் பாதித்திருக்கலாம்.
1. ESWL - Extra Corporeal shockwave lithotripsy
மேலே சொல்லப்பட்ட மருத்துவமே மருத்துவ உலகில் மிக மிக அண்மையில் அறிமுகமானது. திறன்மிக்க ஒன்றாகும். இதை சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்ற அடிக்கடி உபயோகிக்கப்படும் சிகிச்சை. 1.5 செ.மி.க்கும் குறைவான அளவுள்ள கற்களை அகற்ற இதுவே சிறந்த சிகிச்சை. அல்லது யூரீட்டரின் மேல் பகுதியில் இருக்கும் கற்களை இந்த சிகிச்சை மூலம் அகற்றலாம்.
இந்த முறையில் மிக அதிக அமுத்தமான அதிர்ச்சி அலைகளை அல்லது ஒலிக்கு அப்பால் வேலை செய்யும் அலைகளை இயந்திரத்தின் மூலம் உருவாக்கி அவற்றின் உதவியால் கற்கள் உடைக்கப்படும். கற்கள் சிறு சிறு துண்டுகளாக ஆகின்றன. சிறியதாக ஆனவுடன் அவை எளிதாக சிறு நீர்பாதையில் சென்று விடுகின்றன. இந்த சிகிச்சைக்குப் பின் நோயாளி நிரம்ப நிரம்ப குடிநீர் பருகுமாறு அறிவுறுத்தப்படுகிறார். அதற்குப் பின் சிறுநீரகத்தில் இருக்கும் சிறு சிறு கல் துண்டுகள் வெளியே வந்து விடும். சிகிச்சைக்குப்பின் யூரீட்டர் தடுப்பு ஏற்படும் பொழுது வெளிப்புறத்திலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் குழாய் ஒன்றை யூரீட்டரில் இணைத்து தடுப்பால் அவதியுறாமல் செய்வார்கள்.
லித்தோட்ரிப்சி எனும் மேற்கண்ட சிகிச்சை பொதுவாக பாதுகாப்பானது. சிறுநீரோடு இரத்தம் கலந்து போவது சிறுநீரகத்தில் சிறு நீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது, முழுவதுமாக கற்கள் எடுக்கப்படாமல் விட்டு விடுதல், - மேலும் அதிக முறைகள் முயற்சியைத் தூண்டி நிற்கும் - போன்றவை சிறுநீர் வெளியாவதற்குத் தடையாக இருக்கும். சிறுநீரகங்களையும் பாதிக்கும். மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக ஆக ஆரம்பிக்கும்.
இந்த சிகிச்சையினால் வரும் நன்மைகளில் ஒன்று இதற்கு ஆஸ்பத்திரிக்குச் சென்று அட்மிட் ஆக வேண்டாம். மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையைத் துவங்க வேண்டாம். அறுவை ஒன்றும் இல்லை. கத்தியால் உடலின் அடி வயிற்றில் கீற வேண்டாம். வலி மிகமிகக் குறைவு. எல்லா வயதுக் காரர்களுக்கும் இது ஒத்து வரக் கூடிய சிகிச்சை.
கற்கள் பெரிதாக இருந்தால், இந்த சிகிச்சை பயன்படாது. அதே போல் பருமனாக இருப்பவர்களுக்கும் இது பயன்படாது. பெண்களுக்கு காப்பு காலத்தில் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது. கடுமையான தொற்றுதல் உடைய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், சிறுநீர்ப்பாதையில் தடங்கல் இருப்பவர் களுக்கும் இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும் இது பயன்படாது.
இந்த சிகிச்சைக்குப் பின் முறையாக, சோதித்து வருதல் வேண்டும். தடுப்பு முறைகளை கடுமையாக அனுசரித்து வருதல் வேண்டும். அப்படிச் செய்தாலே மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகாது. அந்த முறைகளை அனுசரிப்பது ஒரு விதியைப் போல அனுசரித்து வருதல் வேண்டும்.
2. Percutaneous Nephrolithotomy(PCNL)
மேற்கண்ட சிகிச்சை ஒரு திறன் மிக்க ஒன்றாகும். நடுத்தர அளவுள்ள கற்களை அல்லது பெரிய கற்களை இந்த சிகிச்சை அகற்றும். (1.5 செ.மீ.க்கும் அதிக அளவில் இருக்கும் கற்கள்) அல்லது யூரீட்டரில் தோன்றும் கற்களை அகற்றும். இதர வழிமுறைகள் பயனளிக்காத போழுது இந்த சிகிச்சையைப் பெரும்பாலும் அனுசித்தே வருகிறார்கள்.
பெரும்பாலும் இந்த வழிமுறை பாதுகாப்பானதே. ஆனால் ஒரு சில அபாய சாத்தியக் கூறுகள் இருக்கத் தான் செய்கின்றன. சிக்கல்கள் தோன்றலாம். இது எல்லா அறுவை சிகிச்சைகளுக்குமே பொருந்தும் இதர சிறுநீரக உறுப்புக்களுக்கு அபாயம் வரலாம்.
இந்த சிகிச்சையில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால், ஒரு மிகச்சிறிய வெட்டினால் மட்டுமே உள்ளே உபகரணங்களின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யலாம். எல்லா வித கற்களையும் வெளியே கொண்டு வந்து விடலாம். மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும் இந்த முறை மிகவும் திறன் வாய்ந்தது. இதை ஒரே முறை அறுவை மூலம் செய்து முடித்து விடலாம். இதற்காக ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய நேரம் மிகக் குறைவு. குணமாகிவிடுவதும் விரைவிலேயே நடக்கும்.
3. Ureteroscopy (URS)
மேற்கண்ட சிகிச்சை யூரீட்டரில் நடுவிலோ அல்லது கீழ் பாகத்திலோ இருக்கும் கற்களை அகற்ற பெரிதும் உதவும். இது ஒரு திறன் மிக்க சிகிச்சை. மயக்க மருந்து கொடுத்த பின், வெறு நுண்ணிய குழாயில் ஒளியைப் புகுத்தி, அந்த குழாயை ஒரு கேமராவுடன் இணைக்கிறார்கள். குழாயை சிறு நீர்ப் பைக்குள் செலுத்துகிறார்கள். அது யூரீட்டர் வரையில் போகும்.
கல்லை இந்த உபகரணத்தின் மூலம் பார்ப்பார்கள் கல்லின் அளவைப் பொறுத்து, கல் உடைக்கப்பட்டு அகற்றப் படுகிறது. கல் சிறியதாக இருந்தாலோ, குழாயில் பொருத்தப்பட்ட பிடிக்கும் முறையின் மூலம் அகற்றப்படுகிறது: கல் பெரிதாக இருந்தால், சிறு சிறு கற்களாக அது உடைக்கப்பயிருக்கிறது. இந்த சிறு சிறு கற்கள் பிறகு சிறுநீரோட்டத்துடன் கலந்து வெளியேறுகின்றன. நோயாளிகள் அனேகமாக அட்மிட் ஆன தினத்தன்றே வீட்டிற்கு திரும்ப முடியாமல் போகலாம். அதைத் தொடர்ந்து அன்றாட வழக்கமான வேலைகளில் அவர்கள் ஈடுபடலாம்.
இந்த முறையினால் பெரிய கற்கள் கூட அகற்றப்பட முடியும். அதற்கு அறுவை சிகிச்சை மூலம் கத்தியால் உடலை நறுக்கி உள்ளே புகுதல் வேண்டாம். காப்பு காலத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது பாதுகாப்பான முறையாகும். பருமனானவர்களுக்கும் இது உதவும். அதைத் தவிர இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும் உதவக் கூடியது இந்த சிகிச்சை.
இது பொதுவாக பாதுகாப்பானது. ஆனால் எந்த முறையிலம் இருக்கும் அபாய சாத்தியக்கூறுகள் இதிலும் உண்டு. ஒருவேளை ஏற்படக் கூடிய அபாயங்களாவன - சிறுநீரோட இரத்தம் கலந்து வருதல், சிறுநீர்ப்பதையில் தொற்று ஏற்படுதல், யூரீட்டரில் துளை உருவாதல் போன்ற அபாய சாத்தியக் கூறுகள் உண்டு. இவை யூரீட்டரன் குறுக்களவை மேலும் குறுக்கும்.
4. உடலுக்குள் திறந்து பார்த்து அறுவை சிகிச்சை.
இந்த சிகச்சை உடலை அறுத்துச் செய்வதாகும். இது வலி மிக்கது. 5 லிருந்து 7 நாட்கள் வர மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
மென்மேலும் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்நாட்களில் உடலை அறுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மிக மிக குறைந்துவிட்டன. இப்பொழுதெல்லாம் வெகு அரிய நேரங்களிலேயே அறுவை மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் மிகவும் சிக்கலான தருணங்களிலேய மேற்கொள்ளப் படுகிறது. கல்லின் அளவு மிகப் பெரிதாக இருந்தாலொழிய அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
பிரதானமாக அறுவை சிகிச்சையின் பயன் என்னவென்றால், கற்கள் முழுவதும் அறவே அகற்றப் பட்டு விடும். ஒரே முறை அறுவையில் இவை அகற்றப் பட்டு விடும். இது திறன் மிக்கதும் செலவு குறைவானதுமாகும். அதுவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது மிகவும் உதவும்.
ஒரு நோயாளி எப்பொழுது இந்த சிகிச்சைக்காக மருத்துவரை நாட வேண்டும்?
கீழ்க்கண்ட நிலைமைகளில் நோயாளி மருத்துவரை அணுகுதல் வேண்டும்.
- அடிவயிற்றில் கடுமையான வலி இருந்தாலோ மருத்துவத்தில் கட்டுப் படாமல் போனாலோ தொடர்பு கொள்ள வேண்டும்.
- கடுமையாக வாந்தி எடுத்தாலோ அல்லது உள்ளே எதுவும் பருக முடியாத நிலைக்கு தள்ளப் பட்டாலோ அல்லது மருந்துகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலோ -
- காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல் மற்றும் சிறுநீர் போகும்பழுது எரிச்சல் மற்றும் அட வயிற்றில் வலி ஏற்படுதல் போன்ற சமயங்களில் -
- சிறுநீரோடு இரத்தம் கலந்து போதல் -
- முழுக்க முழுக்க சிறுநீர் வருவது நின்றால் -
- மேற்கண்ட சமயங்களில் மருத்துவரை நாட வேண்டும்