Read Online in tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

13: டையாலிஸிஸ்

சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழந்து போய்விடும்போது, டயாலிசிஸை நிச்சயம் கையாளத்தான் வேண்டும். அதன் மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றலாம். உடலிலிருந்து தேவையற்ற திரவங்களையும் அகற்றலாம். இந்த முறை உயிரைக் காப்பாற்றுகிறது. அதுவும் சிறுநீரகங்கள் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும்போது இதுவே சிறந்த வழியாகும்.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது?

டயாலிசிஸ் கீழ்க்கண்ட செயல்பாடுகளை, (சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்போது) கவனித்து நோயாளிகளைக் காப்பாற்றுகிறது.

  • கழிவுப் பொருட்களை இரத்தத்திலிருந்து அகற்றி அதை சுத்தம் செய்கிறது. கிரியேட்டினின், யூரியா போன்ற பொருட்கள் நீக்கப்படுகின்றன.
  • உபரியாக உடலில் தங்கி விட்ட கழிவு திரவங்கள் அகற்றப்படுகின்றன. திரவங்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • இதர இரசாயனப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அவை சரிசெய்யப்படுகின்றன. சோடியம், பொட்டாசியம் மற்றும் லை கார்பனேட் போன்றவை அத்தகு பொருட்களாகும்.

இருந்தாலும், செயல்பாட்டை இழக்காத சிறுநீரகங்களைப் போன்று டயாலிசிஸ் உதவாது. அது ஹோர்மோன்களின் அளவை சாதாரண நிலையில் வைக்காது. எரித்ரோபோயெட்டினை உற்பத்தி செய்து அப்படி சமநிலையில் ஹோர்மோன்களை வைக்க உதவாது. அப்படிச் செய்வதினாலேயே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

டயாலிசிஸ் தேவைப் படும் நேரம் எது?

சிறுநீரகங்களின் செயல்பாடு 85 இலிருந்து 90 சதவீதம் குறைந்து விடும்போது, (end stage kidney disease ESKD) ஒரு முடிவான நிலையைத் தொடும்போது டயாலிசிஸையே நாடி ஆக வேண்டும். இந்த நிலை வாந்தி ஏற்படுத்தும், உடல் அசதியையும் கொண்டு வந்து வீக்கத்தையும் கொடுக்கும் மூச்சுத் திணறலையும் உருவாக்கும். இந்த நிலையில் நோய் முடிவை நோக்கி நோய் குறிப்பிட்ட நோயாளியைத் தன்னிய பின் அனுசரிக்கப்படும் வழி. ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு டயாலைசைக் கொண்டு கழிவுப் பொருட்களை உடலிலிருந்து இது அகற்றும் வழி. வெறும் மருத்துவத்திற்கு சொன்னபடி கேட்பது. அப்படி கேட்டாலும் அது போதுமான அளவுக்கு இருக்காது. நோயாளிக்கு அவசியம் டயாலிசிஸ் தேவைப் படும். இரத்த பரிசோதனைகள் சீரம் கிரியேட்டினின் அளவை 8 மி.கி./டெ.லி.க்கும் அதிகமாகக் காண்பித்தால், டயாலிசிஸ் தேவைப் படும்.

டயாலிசிஸ் மூலம் மிக மோசமாக அல்லது நீண்ட நாள் பழுது பட்ட சிறுநீரகங்களைச் சரி செய்ய முடியுமா?

இல்லை. நீண்ட நாள் பழுது பட்ட சிறுநீரகங்கள், குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து விடுகின்றன. அதே போல் ஒரு முடிவை நோக்கிச் சென்று விட்ட இந்த நோயையும் குணப்படுத்த முடியாது நோயாளிக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் பட்டாலொழியே வேறு கதியே இல்லை. இருந்தாலும் மிக மோசமாக பாதிக்கப் பட்ட ஒருவருக்குக் கொஞ்ச காலத்திற்கு டயாலிசிஸ் உதவும். சிறுநீரகங்கள் சாதாரண நிலைக்குத் திரும்பும் வரை உதவும்.

டயாலிசிஸில் எத்தனை வகைகள் உண்டு?

அவை பிரதானமாக இரு வகைப்படும். haemodialysis and peritoneal dialysis (பெரிடோனியல் டயாலிசிஸ்) என்பனவாகும் அவை.

Hemodialysis இதுவே மிகவும் பொதுவாக உபயோகிக்கப் படும் முறையும் வழியுமாகும். இதுவே முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நோய்க்கு சிகிச்சை தரும். இதன் மூலம் முடிவான நிலையில் ஏற்படும் கழிவுப் பொருட்கள் நீக்கப் படும். உபரியான திரவங்களும் உடலிலிருந்து அகற்றப் படும். இதை ஒரு செயற்கை சிறுநீரகத்தை டயாலிசிஸ் இயந்திரத்தில் பொருத்திச் செய்பவர்.

பெரிடோனியல் டயாலிசிஸ்:

இது ஒரு திரண் மிக்க வழியே நோய் ஒரு முடிவான நிலைக்கு நோயாளியைக் கொண்டு சென்ற பின் அனுசிக்கப் படும் வழியாகும். இந்த வழியில் கேட்டர் எனும் ஒருசிறிய குழாய் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப் படுகிறது. இதை அடி வயிற்றில் செலுத்துவார்கள். இதன் மூலம் கழிவுப் பொருட்களை அகற்றி விடுவார்கள். உபரியான வீண் திரவங்களும் அகற்றப் பட்டு விடும். இதை வீட்டிலுள்ளோமே வைத்துச் செய்துகொள்ளலாம். வழக்கமாக இதில் வேறு எந்த இயந்திரமும் உபயோகப் படுத்துவதில்லை.

ஒரு முடிவான நிலைக்கு இந்த நோய் நோயாளிகளைக் கொண்டு சென்று விட்ட நிலையில், எவ்வைக் காரணங்களால் டயாலிசிஸ் வழி முறை தேர்ந்தெடுக்கப்படும்?

மேலே சொல்லப் பட்ட இரு வகைகளும் சொல்லப் பட்ட இரு வகை நோயாளிகளுக்கும் பொருந்தும் திரண் மிக்க வழிகளே. எல்லோருக்குமே ஒரே ஒரு வழிதான் சிறந்தது என்பதில்லை. ஒவ்வொன்றின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பின், நோயாளி, அவர் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நோ.ப்ராலஜிஸ்ட் என்று மூவர் குழாமும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய அம்சம் இது. பிரதானமாக, இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவு, நோயாளியின் வயது, நோயாளியின் நிலை மற்றும் டயாலிசிஸ் இயங்கும் நிலையத்தின் தூரம் ஆகியவை. அத்துடன் மருத்துவரின் விருப்பு, வெறுப்புக்கள், நோயாளியின் கல்வி தகுதியம்சங்கள், அவருடைய விருப்பு வெறுப்புக்கள், மற்றும் வாழ்க்கை வழி முறை போன்றவையாகும். குறைந்த செலவினாலும் எளிதாக கிடைப்பதினாலும் பெரும்பாலான நோயாளிகள் டயாலிசிஸை விரும்புகிறார்கள்.

டயாலிசிஸ் செய்து கொண்டவர் உணவு முறைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டுமா?

ஆமாம். பொதுவாக இத்தகைய நோயாளிகள், சோடியம், பொட்டாசியம், ஃபாஸ்பரஸ் மற்றும் அதிக திரவங்களை எடுத்துக் கொள்வதை – இவற்றைக் குறைக்க வேண்டும். டயாலிசிஸில் ஆரம்பமான பிறகு கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளலாம். அனேகர் அதிக அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ளத் கோரப்படுகிறார்கள்.

Dry weight என்றால் என்ன?

இந்த சொல்லை அடிக்கடி டயாலிசிஸ் வழிமுறையைப் பின்பற்றுவோருக்கு மருத்துவர் பயன்படுத்துவர் எல்லா உபரியான திரவத்தையும் அகற்றியபின், இருக்கும் நோயாளியின் எடையையே இந்த சொல் குறிக்கிறது. இதை அடிக்கடி மாற்றிப் பொருத்திப் பார்க்க வேண்டும். நோயாளியின் உண்மையான எடை மாறும்போதெல்லாம் இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஹீமோடயாலிசிஸ்

Hemodialysis

இதுவே மக்களிடையே பரவலாக அனுசரிக்கப்படும் ஒரு வழியாகும். இது முடிவை நோக்கி நோய் குறிப்பட்ட நோயாளியை தள்ளிய பின் அனுசரிக்கப்படும் வழி. ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு டையாலைஸரைக் கொண்டு கழிவுப் பொருட்களை உடலிலிருந்து இது அகற்றும் வழி.

இதை எப்படிச் செய்கிறார்கள்?

  • இதை டயாலிசிஸ் நிலையங்களில் அதற்குரிய இயந்திரத்தை வைத்துச் செய்கிறார்கள். மருத்துவர்கள் முன்னிலையில், நர்ஸ்களின் உதவியால் இது செய்யப்படுகிறது. டெக்னீஷியன் கூடும் உதவிக்கு இருப்பார்கள்.
  • இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 300 மி.லி. இரத்தத்தை வெளியேற்றுகிறது. ஒரு வளைந்து கொடுக்கும் குழாய் மூலமாக இந்த வெளியேற்றுதல் நடக்கிறது. அடிக்கடி ஹெபாரின் எனும் மருந்தை உட்செலுத்தி இரத்தம் உறையாமல் பாதுகாக்கப் படுகிறது.
  • டயாலிசிஸ் செய்யும் இயந்திரம் (செயற்கையாக இயங்கும் சிறுநீரகங்கள்) என்பது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த வடிகட்டியாகும். இது உடலில் தேங்கி விட்ட உபரியான திரவத்தையும் கழிவுப் பொருட்களையும் நீக்கி விடுகிறது. டயாலிசேட் எனும் தனி குணமுடைய ஒரு திரவத்தின் உதவியால் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அந்தத் திரவத்தை அந்த இயந்திரமே தயாரிக்கிறது.
  • இரத்தம் சுத்திகரிக்கப் பட்டவுடன், இயந்திரமே அந்த இரத்தத்தை மீண்டும் உடலுக்குள் செலுத்தி விடுகிறது.
  • வழக்கமாக டயாலிசிஸை வாரத்திற்கு மூன்று தடவைகள் செய்வார்கள். ஒவ்வொரு முறையும் அது சுமார் 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

ுத்திகரிப்பதற்காக இரத்தம் எப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறது. அப்படி எடுத்துக் கொண்ட பிறகு டயாலிசிஸ் ஆனதும் எப்படி உடலுக்குத் திருப்ப அனுப்பப் படுகிறது?

இரத்தக் குழாய் வழியாக எடுப்பதை central venous catheters, native arteriovenous fistulas and synthetic grafts என்று அந்த முறைகளை விளக்குவார்கள்.

1. Central venous catheters

உடலுக்குள்ளே டயாலிசிஸை ஆரம்பிப்பதற்கு இரத்தக் குழாயை உடலுக்குள் செலுத்துவதே மிகப் பெரும்பாலும் செய்யப்படும் வழிமுறை. இது தறுணை வழியும் ஆகும்.

  • இரத்தக் குழாய் வழியாக உள்ளே செலுத்துவது குறுகிய கால உபயோகத்திற்கு ஆகும். ஒரு fistula (பிஸ்டுலா) தயாராகும் வரை இது உதவியாக இருக்கும்.
  • இரு குழாய்களிலும் ஒரு கத்திட்டை டயாலிசில்சாக்காக உள்ளே பெரிய இரத்தக் குழாய்களை செலுத்துவர். இந்த ஒரு கத்திட்டர் மூலம் 300 மி.லி. இரத்தத்திற்கு மேல் வெளியே டயாலிசில்சாக்காக எடுக்கலாம்.
  • கத்திட்டர் என்பது வளைந்து கொடுக்கும் ஒரு குழாய். உள்ளே இரத்தம் பாய வெற்று வழி இருக்கும். ஒரு கையிலிருந்து இரத்தம் வெளியே எடுக்கப் படும். எடுக்கப் பட்ட இரத்தம் இயந்திரத்தின் சுற்றுக்குள் வரும். சுத்திகரிக்கப் பட்ட பிறகு இன்னொரு ஹாமின் வழியாக உடலுக்குள்ளேயே மீண்டும் செலுத்தப் படும்.
  • இத்தைய (இரத்தக் குழாய்களை செலுத்தப்படும்) கத்திட்டர்களோ சாதாரணமாக உபயோகிக்கப் பட்டு, தாற்காலிக மான தொடர்புக்கு உபயோகப் படுத்தப் படும். அப்படி இல்லாவிட்டால், தொற்று ஏற்பட வழி உண்டு.
  • அவற்றில் இரு வகை கத்திட்டர்கள் உண்டு. அவற்றை மாதக் கணக்கில் உபயோகித்து வரலாம்.

 2. AV Fistula (எ.வி. பிஸ்டுலா)

  • இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தப் படும் இந்தப் பொருளோ மிகவும் பொதுவாக உபயோகப் படுத்தப் படும் திறன் வாய்ந்த வழியாகும். நெடு நேரத்திற்கு ஒரே இரத்தக் குழாய் மூலம் இரத்தத்தை எடுப்பதற்கு உதவும். இதில் இரத்தம் உறையாதோ அல்லது தொற்றைப் பற்றிக் கொள்வதோ இல்லை.
  • இந்த முறையில் சிறையாக இருக்கும் இரத்தக் குழாயும் சரி, தமனியாக இருக்கும் இரத்தக் குழாயும் சரி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள வைக்கப் படுகின்றன. இதை வழக்கமாக முன்கையில் மணிக்கட்டுக்கு அருகில் வைத்து தொடர்பு ஏற்படுத்தி வார்கள்.
  • ஒரு தமனியான இரத்தக் குழாயிலிருந்து வெறு பெருமளவில் இரத்தம் (உயர் இரத்த அழுத்தத்தில்) சிறைகள் செலுத்தப் படுகிறது. ஒரு சில வாரங்கள், அல்லது மாதங்களுக்குப் பிறகு, சிறை சற்றே பருமனாகி மேலும் இரத்தத்தை ஏந்திச் செல்கிறது. இந்த செயல்பாட்டுக்கு முதிர்ச்சி என்று பெயர். மேலே சொல்லப் பட்ட எ.வி. பிஸ்டுலா முதிர்ச்சி அடைவதற்குக் காலம் பிடிக்கும் அதை உருவாக்கப் பட்ட உடனேயே டயாலிசில்சாக்கு உபயோகித்துக் கொள்ள முடியாது.
  • டயாலிசில்சாக்காக இரு நீண்ட துளை கொண்ட குழாய் ஊசிகளை பிஸ்டுலாவுக்குள் நுழைக்கப் படுகின்றன. ஒன்றின் மூலமாக இரத்தம், டயாலைசருக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. இன்னொன்றின் மூலமாக சுத்திகரிக்கப் பட்ட இரத்தத்தை வெளியே எடுத்து உடலுக்குள் செலுத்த உபயோகிக்கப் படுகிறது.
  • எ.வி. பிஸ்டுலாவை முறையாகப் பேணி வந்தால், பல வருடங்களுக்கு உபயோகமாக இருக்கும். எந்தக் கையில் எ.வி. பிஸ்டுலா இருக்கிறதோ அந்தக் கையை வைத்துக் கொண்டு அன்றாட வேலைகளைக் கவனித்து வரலாம்.

எ.வி. பிஸ்டுலாவுக்கு ஏன் அவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும்?

  • நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து தாக்கத்தைக் கொண்டு வரும் சிறுநீரக நோய் உடையவருடைய வாழ்க்கை போதுமான அளவிலும் முறையாகவும் டயாலிசில் செய்துகொண்டாலே நீடிக்கும். எ.வி. பிஸ்டுலாவிலிருந்து கிடைக்கும் போதுமான அளவு இரத்தத்திலிருந்துதான் டயாலிசில் செய்ய முடியும். ஆகவே தான் அந்த பிஸ்டுலாவுக்கு உயிர் பிழைத்திருக்க வைக்கும் ஒரு வழி என்று சொல்வார். அதை முறையாகவும் சீராகவும் பாதுகாத்து வந்தாலே, இதை முறையாகப் பேணி வந்தால், நெடு நாட்களுக்கு இந்த பிஸ்டுலா உதவும்.
  • பெருமளவு இரத்தம், உயர் அழுத்தத்தோடு, இந்த பிஸ்டுலாவின் தமனியில் பாயும். ஒருவிபத்தினால் நன்றாகப் பெரிதாகப் பட்ட தமனிகள் பழுதடைந்தால், மோசமான அளவில் இரத்தம் இழக்கப் படும். பெருமளவில் மிக சீக்கிரத்தில் இரத்தம் இழக்கப் பட்டால், உயிருக்கே ஆபத்து வரும். ஆகவேதான் பிஸ்டுலாவுக்கு தனி கவனம் தேவை. சிறப்பான கவனமே தேவை.

.வி. பிஸ்டுலாவை எப்படி பாதுகாப்பது?

முறையாகவும், அடிக்கடியும் பிஸ்டுலாவை கவனித்து வந்தால், அதன் மூலம் போதுமான இரத்தம் பாய்வதை வருடக் கணக்கில் பெற்று வரலாம். முக்கியமாக அதன் மீது செலுத்தப் படவேண்டிய கவனம் கீழே விவரவாறியாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பது.

  • எப்பொழுதும் பிஸ்டுலாக்களை வெறு சுத்தமாகவே கழுவி வைத்திருங்கள். ஒவ்வொரு சிகிச்சைக்கு முன்பும் கழுவி உபயோகியுங்கள்.

.வி. பிஸ்டுலாவை எப்படி பாதுகாப்பது?

  • எங்கு இது உபயோகப் படுத்தப் படுமோ அங்கேயே டயாலிசைலை வைத்துக் கொள்ளுங்கள். அங்காரம் இல்லாத எவரும் ஊசிகள் போட வேண்டாம். இரத்தத்தை உடலிலிருந்து எடுப்பதோ அல்லது இரத்த அழுத்தத்தை அளப்பதோ எ.வி. பிஸ்டுலா மூலம் செய்யக் கூடாது.
  • இந்தக் குழாய்க்கு எந்தவித காயமும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நகைகள் அணிய வேண்டாம். இறுக்கமான உடை அணிய வேண்டாம். எந்த முனையில் இரத்தம் உறிஞ்சப் படுமோ அதில் வாட்ச் அணிய வேண்டாம். இந்த ஃபிஸ்டுலாவுக்கு ஏற்படும் எந்த விபத்தும் திடீரென இரத்தத்தை ஒழுகச் செல்ல வைக்கும். அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இரத்தம் வழிந்து செல்வதைத் தடுக்க, இரத்தம் வெளிவரும் இடத்தில் உடனடியாக அழுத்தமாகத் தடுங்கள். இதை மற்ற கையால் செய்யவும். அல்லது ஒரு இறுக்கமான பாண்டேஜால் செய்யவும். இரத்தம் வெளிவருவது தடை செய்யப்பட்டவுடன், உங்கள் டாக்டரை உடனுக்குடன் அணுகி ஆலோசனை பெறுங்கள். முதலில் வழியும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தாமல் ஆஸ்பத்திரிக்கு விரைவது முட்டாள்தனம். தவிரவும் ஆபத்தும் கூட.
  • எந்தக் கையில் குழாய்கள் பொருத்தப் பட்டிருக்கின்றனவோ அதைக் கொண்டு கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். அதில் அழுத்தங்கள் வேண்டாம். கவனத்துடன் இருங்கள். எ.வி. ஃபிஸ்டுலா இருக்கும் கை மீது தலை வைத்துப் படுக்க வேண்டாம்.

.வி. ஃபிஸ்டுலா வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

  • அதன் மூலம் இரத்தம் சீராகப் பாய்ந்து கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்து வாருங்கள். அந்த அலைவு உணர்வு இருக்கிறதா என்று பாருங்கள். (இதை சிலிப்பு உணர்ச்சி என்றும் கூறுவார்கள்.) அப்படியே ஒரு நாளைக்கு 3 தடவையாவது செய்யுங்கள். (காலை சிறுநீருக்கு முன், மதிய உணவு மற்றும் இரவு உணவு முதலிய வேளைகளில் அதைச் செய்யுங்கள்) அலைவு இல்லாமல் இருந்தால், உடனுக்குடன் உங்கள் டாக்டரை அணுகுங்கள்.
  • குறைந்த இரத்த அழுத்தம் எ.வி. ஃபிஸ்டுலாவுக்குள் செல்லமுடிக்கச் செய்யலாம். அந்த நிலையை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ுறையான தேகப் பயிற்சி

  • அவ்வப்போது எ.வி. ஃபிஸ்டுலா பயிற்சிக்கு உள்ளாக்குவது அது மேலும் மேலும் முதிர்ச்சி அடைவதை மேம்படுத்தும். ஹீமோடயாலிசை ஆரம்பித்த பிறகும், அதைப் போட்டுக் கொண்டிருக்கும் கையை உடற்பயிற்சிக்கு உள்ளாக்குவது எ.வி. ஃபிஸ்டுலாவுக்கு வலிமை ஊட்டுகிறது.
  • எ.வி. ஃபிஸ்டுலாவைப் பொருத்துவதற்கு சில நோயாளிகளுக்கு வசதியில்லாமல் இருக்கலாம். அப்போழுது arteriovenous graft முறையைப் பின்பற்றலாம். அல்லது பொருத்தப் பட்ட எ.வி. ஃபிஸ்டுலா செயல்படாமல் தோல்வி அடைந்திருக்கலாம்.
  • மேற்கொண்ட ஓட்டு முறையில் அனுவை சிகிச்சை மூலமாக ஒரு சிறை இரத்தக் குழாய், தமனியோடு ஒரு செயற்கை ரப்பர் குழாய் மூலம் இணைக்கப் படுகிறது. இது தொழுக்கு அடியில் படைக்கப் படுகிறது. டயாலிசிஸ் சிகிச்சையின் பொழுது உடம்புக்குள் ஊசிகள் செலுத்தப் படுகின்றன.
  • ஒரு எ.வி. ஃபிஸ்டுலாவை ஒப்பு நோக்கும்போழுது, ஓட்டுப் போடும் முறைகளில் இரத்தம் உறையக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. தொற்றுக்கானும் வாய்ப்பு வழக்கமாக அல்லது எ.வி. ஃபிஸ்டுலாவைப் போன்று நீண்ட நாட்கள் உழைப்பதில்லை.

ரு ஹீமோடயாலிசில் இயந்திரத்தின் செயல்பாடுகள் யாவை?

  • ஹீமோடயாலிசில் இயந்திரத்தின் முக்கியமான வேலைகள் கீழே தரப் படுகின்றன.
  • இயந்திரம் உடலிலிருந்து இரத்தத்தை டயாலைசருக்குப் பம்ப் மூலம் வெளியேற்றுகிறது. சுத்திகரிப்பற்காக இதைச் செய்கிறது.
  • இயந்திரம் ஒரு தனி குணம் உள்ள திரவத்தை டயாலைசெட் இதற்காக தயார் செய்கிறது. இதுவே டயாலிசருக்கு அனுப்பப் படுகிறது – டயாலிசிஸ் செய்வதற்காக. இந்த மின்கடத்தும் திரவத்தின் தின்மையை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறது இந்த இயந்திரம். அதன் வெப்ப நிலையையும், கன அளவையும், அழுத்தத்தையும் நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப கண்காணிக்கிறது. டயாலிசிஸ் திரவம் வேண்டப் படாத கழிவுப் பொருட்களை நீக்குகிறது. உபயோக நீரையும் தேகத்திலிருந்து அகற்றுகிறது.
  • நோயாளியின் பாதுகாப்பற்காக இயந்திரத்தில் பல பாதுகாப்பு விளையாட்டுகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. எங்காவது இரத்தம் கசிகிறதா என்பதையும், இரத்தத்தின் சுற்றுப் பாதையில் எங்காவது காற்று புகுந்திருக்கிறதா என்பதையும் வெகு கூர்மையாகக் கவனிக்கப் படும்.
  • கம்ப்யூட்டர் பொருத்தப் பட்ட சில வெகு நவீன இயந்திரங்கள், வெவ்வேறு அளவுகளை டிஜிட்டலாகக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. ஆங்காங்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில், – பாதுகாப்பையும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் செய்கின்றன.

யாலைசரின் அமைப்புப்படிப் பட்டது? அது இரத்தத்தை எப்படி சுத்திகரிக்கிறது?

இயந்திரத்தின் அமைப்பு.

  • (படம்) டயாலிசரில் எண்ணும் செயல்பாட்டில், டயாலைசர் எனும் செயற்கை சிறுநீரகம் பொருத்தப்பட்டு அதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
  • அது சுமார் 20 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு பிளாஸ்டிக் சிலிண்டராகும். இதில் ஆயிரக்கணக்கான குழாய்கள், வெற்றிட மூன்று நாட்களாக ஒரு புறமே திரவத்தை அனுமதிக்கும் பொருட் காக்கப் பட்டிருக்கின்றன.
  • இந்தக் குழாய்கள் ஒன்றோடொன்று தொடர்பு உடைய வண்ணமாக, சிலிண்டரின் மேற்புறத்தையும் கீழ்ப் புறத்தையும் இணைக்கின்றன. அப்படி இணைந்தது, 'இரத்த அரை ஒன்றை உருவாக்குகிறது'. இதன் திறப்பு வழியாக இரத்தம் உள்ளே வருகிறது. மறு முனையில் இருக்கும் வெளியே செல்லும் வழியாக, வெளியே செல்லுகிறது.
  • டயாலிசரில் திரவம் டயாலைசரின் ஒரு முனையில் உள்ளே வந்து நாட்களின் வெளிப்புறம் பாய்ந்து பிறகு மறு முனை வழியாக வெளியே செல்கிறது.

டயாலைசரில் இரத்தம் சுத்திகரிப்பு ஆகுதல்.

  • டயாலைசரின் ஒரு முனை வழியாக உள்ளே வரக்கூடிய இரத்தம், ஆயிரம் ஆயிரம் மயிரிழைக் குழாய்களின் மூலம் பரிமாறப் பட்ட பின் – டயாலைசரின் மறு முனை வழியாக வெளியே வருகிறது. நார்க் குழாய்களின் வெளிப்புறம் வழியாக வெளியே செல்கிறது. இது 'டயாலிசெட்' அறையில் நடக்கிறது.
  • ஒவ்வொரு நிமிடமும் 300 மி.லி. இரத்தமும் 600 மி.லி. டயாலைசலாக்காக உபயோகிக்கப்படும் திரவமும் எதிர் திசையில் இயந்திரத்திற்குள் செயல்படுவதன்போழுது பாய்கிறது. நார்க்குழாய்களில் இருக்கும் ஒரு புறமே திரவத்தைச் செலுத்தும் மெல்லிய தடுப்புகள் உள்ளன. இங்குதான் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது. கழிவுப் பொருட்கள், டயாலிசரில் அறையில் விடப் படுகின்றன.
  • டயாலிசரில் இயந்திரத்தின் மறு முனையிலிருந்து சுத்திகரிக்கப் பட்ட இரத்தம் வெளி வருகிறது. விஷப் பொருட்கள் அடங்கிய டயாலிசரில் திரவம், மற்றும் உபயோக நீர்கள் எல்லாம் அந்த முனையில் அகற்றப் படுகின்றன.
  • இந்த செயல்பாட்டில் இரத்தம் சுமார் 12 மடங்கு சுத்திகரிக்கப் படுகிறது. நான்கு மணி நேரங்களுக்குப் பரவு இரத்தத்திலுள்ள யூரியாவின் அளவும் கிரியேட்டினின் அளவும் கணிசமாகக் குறைகின்றன. உடலில் இருந்த உபயோக திரவம் அகற்றப் பட்டு மின்கடத்தி திரவங்களின் சமநிலை பாதுகாக்கப் படுகிறது.

யாலிசேட் என்றால் என்ன? இந்த செயல்பாட்டில் அதன் வேலை என்ன?

  • அந்தத் திரவம் ஒரு தனி குணம் வாய்ந்த ஒன்று. ஹீமோடையாலிசிஸில் அது உபயோகப் படுத்தப் பட்டு கழிவுப் பொருட் களையும், இதர உபயோக திரவங்களையும் இரத்தத்திலிருந்து அகற்றுகிறது.
  • அதன் தின்மையையும் குணத்தையும் நோயாளியின் தேவைக்கு ஏற்ப மாற்றி தயாரிக்கலாம்.
  • அந்தத் திரவத்தை டயாலிசிஸ் இயந்திரமே தயாரிக்கிறது. 30 பங்கு மிக மிக தூய்மையான நீருடன் ஒரு பங்கு டயாலிசேட் திரவத்தின் மிகத் தின்மை வாய்ந்த நிலையுள்ள அத்துடன் சேர்க்கப் படுகிறது.
  • அந்தத் திரவம் மருந்துக் கடைகளில் கிடைக்கும். வழக்கமாக ஒரு ஜாடியில் வைக்கப் பட்டு விற்கப்படும். அதில் மின் கடத்தும் திரவங்கள், தாது உப்புகள், லே கார்பனேட் போன்ற பொருட்கள் அதிக தின்மையுடன் கலந்திருக்கும்.
  • அந்தத் திரவத்தைத் தயார் செய்ய ஒரு வசீசயான வடிகட்டிகள் மூலம் உள்ளே வரும் நீர் சுத்திகரிக்கப் படுகிறது. அதில் மணல் வடிகட்டி, காரியால் நிரப்பப் பட்ட வடிகட்டி, நீரை மென்மைப் படுத்தும் பொருட்கள், சல்லூடு பரவச் செய்யும் பொருட்கள், அயனிகளை அகற்றும் பாதை, மற்றும் அல்ட்ரா வயலட் கதிர்களால் சுத்தம் செய்யப் படும் அரை போன்றவை அந்த இயந்திரத்தில் இருக்கும்.
  • மிக மிக உயர்ந்த தரமுள்ள சுத்தமான நீரின் அவசியம் பாதுகாப்பான டயாலிசேஸ் செய்யத் தேவை. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள 150 லிட்டர் நீர் தேவைப் படும்.
  • நீரை மிக அதிகம் சுத்தப் படுத்த தேவையான உபகரணங்கள் தேவை.

டயாலிசிஸ் எங்கு நடக்கிறது?

வழக்கமாக இதை ஆஸ்பத்திரியில் செய்வார்கள். அல்லது அதற்கென்று அமைக்கப் பட்ட நிலையங்களில் செய்வார்கள். ஒரு டாக்டரும் அவருடன் கூட தாதியரும் சேர்ந்து இதைக் கண்காணிப்பார்கள். ஒரு சில சமயங்களில் அவரவர் வீட்டிலேயே கூட இதைச் செய்வார்கள். இதை நிலையான ஆரோக்கியம் உடைய நோயாளிகளுக்கே இப்படி வீடுகளில் செய்வார்கள். அதற்கு உரிய பயிற்சி வேண்டும். குடும்ப ஒத்துழைப்பு வேண்டும். போதுமான இடவசதியும் நிதி உதவியும் வேண்டும்.

ஹீமோடையாலிசிஸ் செய்துகொண்டும்போழுது வலி ஏற்படுமா?

இல்லை. ஊசியை உடலுக்குள் நுழைக்கும்போழுது ஏற்படும் வலியைத் தவிர ஹீமோடையாலிசிஸ் நடக்கும்போழுது வலி இருக்காது. வழக்கமாக எந்த நோயாளிக்கும் சுமார் 4 மணி நேரங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து ஹீமோடையாலிசிஸ் செய்து கொண்டு செல்ல வேண்டி இருக்கும். அதைச் செய்யும்போழுது, தூங்கிக் கொண்டோ அல்லது படித்துக் கொண்டு அல்லது இசையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டோ அல்லது டி.வி. பார்த்துக் கொண்டோ இருக்கலாம். ஹீமோடையாலிசிஸ் எடுத்துக் கொண்டும்போழுது நோயாளிகள் கொஞ்சம் சிறு தீனி தீவிப் பண்டங்களை உண்டு கொண்டிருப்பார்கள். மற்றும் குளிர் பானமோ அல்லது கூடான பானங்களோ பருகிக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்வதில் என்ன பிரச்சனைகள் வரும்?

பொதுவாக ஹீமோடையாலிசிஸ் செய்துகொண்டும்போழுது இரத்த அழுத்தம் குறையும். அல்லது வாந்தி எடுக்கலாம், தலைப் பிடிப்பு வரலாம், உடல் நலிவாக ஆகும், மற்றும் தலைவலி வரலாம்.

ஹீமோடையாலிசிஸ் செய்துகொள்வதால் வரும் நன்மை, தீமைகள் யாவை?

நன்மைகள்.

  • நல்ல பயிற்சி பெற்ற நர்ஸ்களோ அல்லது டெக்னீசியன்களோ சேர்ந்து செய்யும் முறைதான் ஆதலால் இது மன அழுத்தத்தைக் கொண்டு வரக் கூடாது. உண்மையில் மன அமைதியையே கொண்டு வரல் வேண்டும்.
  • இது வேகமாக நடக்கும் ஒரு மருத்துவ சிகிச்சை. ஆகவே பெரிடோனியல் முறையை விட இது குறைவான நேரத்தையே எடுத்துக் கொள்ளும்.
  • அதே போல் பிரச்சனைகள் உடைய இதர நோயாளிகளை ஹீமோடையாலிசிஸ் நிலையத்தில் சந்திக்க வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. இந்த உறையாடல்கள் மன அழுத்தங்களைக் குறைக்கிறது. அத்தகைய சக நோயாளிகளின் அனுகாலைக் கிடைக்கிறது.
  • ஹீமோடையாலிசிஸ் வாரத்திற்கு மூன்றே நாட்கள்:நேக்குச் செய்து கொள்ளப் படுவதால், நிரம்ப அவகாசம் பிற வேலைகளில் ஈடுபடக் கிடைக்கிறது.
  • தொற்றுக்கள் வரும் சாத்தியங்கள் குறைவு.
  • ஹீமோடையாலிசிஸ் பெரிடோனியல் டயாலிசிஸை விட செலவு குறைவானது. பெரும்பாலான நிலையங்களில் இப்படி இருப்பதையே காண்கிறோம்.

ுறைகள்

  • ஹீமோடையாலிசிஸ் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவது சிரமமான காரியமே. நேரங்கள் செலவிடப் படுகின்றன. அதுவும் அந்த நிலையம் சுற்று தூரத்தில் இருந்தால், போய் வருவது கொஞ்சம் சிரமம்.
  • ஒரு நிலையான நிகழ்வுப் பட்டியலை இதற்காகத் தயாரித்துக் கொள்ள வேண்டும். நோயாளி நன்றாக அந்தப் பட்டியலைப் பார்த்து நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
  • ஹீமோடையாலிசிஸ் செய்து கொள்ளும் முன் உடலுக்குள் நுழைக்கப் படும் ஊசி கொஞ்சம் வலியை உண்டாக்கும்.
  • உணவுப் பழக்கங்களில் அவ்வளவு சுதந்திரத்தைக் கையாள முடியாது. ஹீமோடையாலிசிஸை செய்துகொள்ளும் நோயாளி அவசியம் சில உணவுக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். சில திரவங்கள், அவற்றின் அளவு, உப்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதில் கடும் கட்டுப்பாடு அவசியம் வேண்டும்.

மஞ்சள் காமாலை தொற்று வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

  • முடிவான நிலைக்கு வந்து விட்ட நோயின் நிலையில், அதாவது முறையாகத் தொடர்ந்து ஹீமோடையாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகள் - வாரத்திற்கு மூன்று தடைவகள் - அந்த முறையைக் கையாண்டு முறை தவறாமல் செய்து கொள்ள வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம். முறை தவறுதல் அல்லது குறைவான தடைவகள் செய்து கொள்வதில் சில சமயங்களில் அபாயத்தை உண்டு பண்ணும் அல்லது ஏன், உயிருக்கே ஆபத்தாக முடியும்.
  • உப்புக் குறைப்பதும், உடல் எடையைக் குறைப்பதும் இரண்டு ஹீமோடையாலிசிஸ் தடைவருக்கு நடுவில் எடை கூடாமல் காக்கும். பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவையும், பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவையும் கட்டுப்படுத்த வேண்டும். புரோட்டீனைச் சுற்று அதிகமாக உள்ள பண்டங்களைச் சாப்பிட வேண்டியது அவசியம்.
  • டயாலிசிஸ் நோயாளிகளுக்குச் சுற்று சத்து மிக்க பண்டங்கள் குறைவாகத் தான் உண்ண வேண்டி வரும். அதனால் விடமின்களும் சுற்று எதிர்பார்க்க முடியாத அளவுக்குக் குறையலாம். டயாலிசிஸ் செய்து கொண்டும்போழுது, புரோட்டீன் குறைதல் சத்துள்ள உணவைக் குறைக்கிறது. ஆகவே உணவில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவையே உண்ண வேண்டும். மேம்பட்ட கலோரிகள் உள்ள உணவையே உண்ண வேண்டும். இந்த நோயாளிகளுக்கு டாக்டர்கள் தரும் பரிந்துரைப்பு இப்படித் தான் இருக்கும்.
  • ஹீமோடையாலிசிஸ் செய்துகொள்வதில் உள்ள பிரதான குறை ஒன்று - அடிக்கடி நிலையத்தை நோயாளி சென்று வரல் வேண்டும். ஒரு வாரத்திற்கு மூன்று தடைவகள் சென்று வர வேண்டும்.
  • முறையாகச் செய்துகொண்டு வரும் நோயாளிகளுக்கு நீரில் எளிதாகக் கரையக் கூடிய விட்டமின்கள் கொண்ட உணவோ அல்லது மாத்திரைகளோ சாப்பிட வேண்டும். அத்துடன் பி விட்டமினும் சி விட்டமினும் கலந்திருந்தால் நல்லது. மருந்துக் கடைகளில் கேட்டவுடன் கொடுக்கப் படும் மல்டி விட்டமின்கள் மாத்திரைகளை வாங்கி எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவற்றில் வேண்டுமானவற்கு எல்லா விட்டமின்களும் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை ஏ, பி மற்றும் கே விட்டமின்கள் அல்லது தாது உப்புகளோ அவற்றில் இருக்கலாம். இவை எல்லாம் சிறுநீரகங்கள் கெட்ட நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிப்பவை.
  • கால்சியம் மற்றும் விட்டமின் டி போன்றவற்றை நோயாளியின் உடல் நிலைக்குத் தகுந்தவாறு கொஞ்சம் கூடவே எடுத்துக் கொள்ளலாம்.
  • வாழ்க்கை வழி முறைகளின் மாற்றங்களுக்கு மரியாதை கொடுத்து மாறிக் கொள்ளுங்கள்; பொதுவாக பழக்கத்தை நிறுத்துவது, ஆரோக்கியமான நிலையிலேயே உடல் எடையை வைத்துக் கொள்வது, முறையாக தேகப் பயிற்சி செய்வது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது போன்ற வழி முறைகளில் ஈடுபடவும்.

நோயாளி உடனுக்குடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைகள் -

  • ஈ.வி. ஃபிஸ்டுலாவிலிருந்து இரத்தம் வந்தால் அல்லது கேத்தீட்டர் இருக்குமிடத்திலிருந்து இரத்தம் கசிந்தால்
  • அலவு, அதிர்வு, போன்றவற்றை ஈ.வி. ஃபிஸ்டுலாவில் கண்டால்
  • எதிர்பாராத எடை கூடுதல், குறிப்பான வகையில் வீக்கங்கள் ஏற்பட்டால், அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால்
  • மார்பில் வலி, மிக மெதுவான அல்லது மிக வேகமான இருதயத் துடிப்பு ஏற்பட்டால்
  • மிக அதிகமான அளவு இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அல்லது மிகக் குறைவான இரத்த அழுத்தம் ஏற்பட்டால்
  • நோயாளிக்கு ஒரு மனக் குழப்பமும், மயக்கம் தூக்க நிலை, மற்றும் நினைவிழத்தல் அல்லது உடலில் நடுக்கங்கள் ஏற்பட்டால்
  • காய்ச்சல், மிக மோசமாக வாந்தி எடுத்தால், அல்லது மிக மோசமாக உடல் நலிவாகி விடுதல்

பெரிடோனியல் டயாலிசிஸ்

இது டயாலிசிஸ் செய்துகொள்வதற்காக அளிக்கப் படும் ஒரு மாற்று வழி. இதை நேரம் முற்றிய நிலையில் முடிவுக்கு வரக் கூடியது என்ற நிலையில் செய்துகொள்வார்கள். இந்த உண்மை மிகப் பரவலாக ஓப்புக் கொள்ளப் பட்டு விட்டது. திறன்மிக்க வழியும் ஆகும். வீடுகளிலேயே இருந்து செய்து கொள்ளும் வழியாகும் இது.

பெரிடோனியல் டயாலிசிஸ் என்றால் என்ன?

  • பெரிடோனியம் என்பது மிக மிக மெலிதான ஒரு தசைத் தடுப்பு. இது அடிவயிற்று துணையையும், வயிறு, சிறு குடல் மற்றும் அடிவயிற்றில் இருக்கும் அங்கங்களையும் பாதுகாக்கக் கூடியது.
  • இது இயற்கையாக கடவுளால் கொடுக்கப் பட்ட மிக மிக நுண்ணிய மெம்பரேன் ஒரு தடுப்பும் ஒருவழியிலேயே கழிவுப் பொருட்களையும் இரத்தத்திலுள்ள விஷப் பொருட்களையும் வெளியேற்ற உதவுகிறது.
  • பெரிடோனியல் டயாலிசிஸ் என்பது இரத்தத்தை அந்த நுண்ணிய வடிகட்டி மூலம் சுத்திகரிப்பு செய்வதாகும்.

பெரிடோனியல் டயாலிசிஸ் முறைகள் எத்தனை வகைப்படும்?

  1. அடிக்கடி அவ்வப்போது செய்துகொள்வது. Intermittent Peritoneal dialysis
  2. Continuous Ambulatory Peritoneal dialysis CAPD
  3. Continuous cycling Peritoneal dialysis CCPD

1. Intermittent Peritoneal dialysis

  • திறன்மிக்கும் மிக உயர்ந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். குறுகிய காலத்திற்குள் செய்யப் பட பரிந்துரைக்கப் படும் வழிகளில் இதுவும் ஒன்று. சிறுநீரகங்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருந்தால் இந்த முறை பரவலாக அனுசரிக்கப் படும். முக்கியமாக, குழந்தைகளுக்கும், அவசர காலங்களிலும், நேரம் முற்றிய முடிவுக்கு வரும் நிலைகளிலும் இது அனுசரிக்கப் படும்.
  • இதில் ஒரு வகை சிறப்பு ப்ளாஸ்டிக் கதீட்டர் - அதில் பல துளைகள் இருக்கும் - நோயாளியின் அடி வயிற்றில் பொருத்தப் படுகிறது. அதற்காக உபயோகிக்கப் படும் சிறப்பு குணமிக்க டயாலிசேட் பயன்படுத்தப் படும். அப்படிச் செய்து டயாலிசிஸ் தொடரப் படும்.
  • மேற்சொன்ன முறை, சுமார் 24-36 மணி நேரங்களுக்குத் தொடரப் படும். 30 இருந்து 40 லிட்டர் டயாலிசேட் திரவம் உபயோகிக்கப் பட்டு செய்முறை முடிக்கப் படும்.
  • இதே 1 இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை என்று மீண்டும் தொடரப் படும். இது நோயாளியின் தேவையைப் பொருத்தது.

2. CAPD என்றால் என்ன?

இதில் டயாலிசிஸ் நிறுத்தப் படுவதே இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Ambulatory என்றால், நோயாளி எழுந்து நடமாடிக் கொண்டு முறையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

Peritoneal வடிகட்டி - மிக நுண்ணிய மெம்பரேன் உடலுள்ளது வடிகட்டியாக வேலை செய்யும்.

டயாலிசிஸ் எனும் சொல்லுக்கு உங்களுக்கு ஏற்கனவே பொருள் தெரியும்.

Continuous Ambulatory Peritoneal Dialysis எனும் முறை இதை வீடுகளிலேயே செய்து கொள்ளலாம். ஒரு இயந்திரத்தின் உதவி தேவை இல்லை. இதில் செலவும் கொஞ்சம் சுதந்திரமாகவும் இயங்க வசதி இருப்பதால், மேலே நாடுகளில் மிகவும் பரவலாக உபயோகிக்கப் படும் முறைகளில் இது ஒன்றாகும்.

மேற்சொன்ன வழி எப்படி செயல்படுகிறது?

இதற்குள்ளான கதிட்டர். மிக நுண்ணிய பல துளைகள் உள்ள மெலிதான ரப்பர் குழாய் ஒன்று இதற்காக உபயோகப் படுத்தப் படுகிறது. இது அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் அடிவயிற்றிற்குள் நுழைக்கப் படுகிறது. இதை ஒரு நிரந்தரமான வழியாக வைக்கப் பட்டு விடுகிறது. இந்த முறை துவங்குவதற்கு சுமார் 10 விருது 14 நாட்களுக்கு முன் இது நோயாளியின் வயிற்றுக்குள் நுழைத்து விடப் படுகிறது/. எப்படி டயாலிசிலில் ஏ.வி. ஃபிஸ்டுலா செயல்படுகிறதோ அப்படியே இந்த பி.டி. கதிட்டரும் இந்த CAPD நோயாளிகளுக்கு இது ஒரு "உயிர் வழி" யாகும்.

வழிமுறை எப்படி:

இந்த வழிமுறைக்கு படிப்படியான மூன்று நிலைகள் உண்டு. நிரப்புதல், சற்று நேரம் நிற்கச் செய்தல் அதற்குப் பின் வெளியே செல்ல விடுதல் என்பன அந்த மூன்று வழிகளாகும்.

உள்ளே நிரப்புதல். கதிட்டர் மூலமாக இரண்டு லிட்டர் அளவு டயாலிசிஸ் திரவம், தொற்றுக்கள் அனுகாத ஒரு ப்ளாஸ்டிக் குழாய் மூலம் உடலுக்குள்ளே செலுத்தப் படுகிறது. அந்தக் குழாய் பெரிடோனியத்தை அடையும் வரை உள்செலுத்தப் படுகிறது. எப்பொழுது உடலுக்குள் திரவம் இருக்கிறதோ, காலியான பை கதிட்டப் பட்டு நோயாளியின் உள்ளாடைக்கு அருகில் வைக்கப் பட்டு அடுத்த சிகிச்சை வரை அங்கேயே விட்டு விடப் படுகிறது.

அதிலேயே நிற்க வைத்தல். மேற்சொன்ன டயாலிசேட் திரவம், ஒரு இரவில் 6 முதல் 8 மணி நேரங்களுக்கு நிற்க வைக்கப் படுகிறது. அல்லது ஒரு நாளில் 4 முதல் 6 மணி நேரங்களுக்கு நிற்க வைக்கப் படுகிறது. இது உடலில் தங்கும் நேரத்தைத் தான் தங்கும் நேரம் என்று சொல்லப் படும். அப்பொழுதுதான் அந்த சுத்திகரிப்பு நடக்கிறது.

அங்கு நடக்கும் சுத்திகரிப்பினால் உபரி திரவங்களும், கழிவுப் பொருட்களும் நீக்கப் பட்டு விடுகின்றன. அவை இரத்தத்திலிருந்து மேற்சொன்ன திரவத்துக்குள் வந்து விடுகின்றன. இந்த சமயத்தில் நோயாளியோ இலகுவாக நடக்கலாம் (இதனால் தான் இந்த சிகிச்சைக்கே ambulatory என்ற பெயர் வந்தது.)

கழித்து விடுவது. மேற்சொன்ன அதிலேயே நிற்க வைத்ததுலுக்காக ஆகும் நேரத்திற்குப் பிறகு, ஒரு கதிட்டர் மூலம் கழிவு நீர் அகற்றப் பட்டு ஒரு பைக்குள் வந்து சேரும்படி வைக்கப் படுகிறது. அந்தப் பை எடை போட்டப் பட்டு அளக்கப் படுகிறது. அதை அடுத்து அது தாக்கி எறியப் படுகிறது. வெளியேற்றப் பட்ட அந்த திரவமானது எந்த நிறமும் இல்லாமல் முழுவதும் நிறமற்று இருத்தல் வேண்டும்.

அடி வயிற்றிலிருந்து அந்த திரவத்தை வெளியேற்றுவதும் புதிய திரவத்தை நிரப்புவதும் 30 விருது 40 நிமிடங்கள் பிடிக்கும். இந்த வழி முறைக்கு பரிமாற்றம் என்று பெயர். இந்த பரிமாற்றத்தை ஒரு நாளுக்கு 3 முதல் 5 தடவைகள் செய்யலாம். அல்லது ஒரு முறை இரவில் செய்யலாம். இரவில் தூங்கப் போவதற்கு சற்று முன் இது செய்யப் படுகிறது. இரவில் அந்த பி.டி. திரவம் அடி வயிற்றிலேயே தங்க வைக்கப் படுகிறது. CAPD சிகிச்சை வெகு நெருக்கமான கவனத்துடன் தொற்றுதல் இல்லாத ஒரு குளியே செய்யப் படுகிறது.

3. APD or Continuous cycling peritoneal dialysis (CCPD)

இது வீட்டிற்குள்ளேயே தொடர்ச்சியாக எந்தவித தடங்கலும் இல்லாமல் செய்து கொள்ளக் கூடிய சிகிச்சையாகும். இது தானாக இயங்கும் ஒரு சைக்கிளர் இயந்திரம் மூலம் அன்றாடம் செய்து கொள்ளக் கூடியது. இந்த சிகிச்சையின் பொழுது அன்றாட அலுவல்களை வீட்டிற்குள்ளேயே நடத்திக் கொள்ளும் வேலைகளை தடங்கலின்றி செய்து கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தில் உபயோகப் படுத்திக் கொள்ளப் படும் பி.டி. திரவம் என்றால் என்ன?

இந்த டயாலிசேட் திரவம் தொற்றுக்களோ புக முடியாத ஒரு திரவம். இதில் தாது உப்புக்களும் க்ளுகோசையும் சிகிச்சையின் பொழுது சேர்க்கப் படும். இந்தியாவில் மூன்று வெவ்வேறு திண்மையில் இந்த திரவம் கிடைக்கின்றன. (1.5%, 2.5% மற்றும் 4.5%) திண்மைகளில் இவை கிடைக்கின்றன. இதிலுள்ள க்ளுகோஸ் திரவமே உடலிலிருந்து கழிவு நீரை வெளியே அகற்றுகிறது. நோயாளியின் உடலிலிருந்து வெளியேற்றப் பட வேண்டிய கழிவு நீரின் கன அளவைப் பொறுத்து இந்த திரவம் தேர்ந்தெடுக்கப் படுகிறது. தற்காலங்களில் புதிய புதிய வகையான பி.டி. திரவங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றினால் வரும் நன்மை என்னவென்றால், உடலிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மிக மெதுவாகவே வெளியேற்றப் படுகிறது. இது பருமானகை உள்ளவர்களுக்கும் நீரிழிவு நோய் உடைய வர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. ஒரு நாளில் ஒரு சுழற்சிக்கு வடிவமைக்கப் படும் சிகிச்சைகளுக்கே இது உபயோகிக்கப் படுகிறது. வெவ்வேறு கன அளவுப் பைகளில் இது கிடைக்கிறது. அப்படிக் கிடைப்பது 1000 மி.லி. உம் 2500 மி.லி.உம் ஆகும்.

இந்த முறையில் ஏற்படக்கூடிய சாதாரண பிரச்சனைகள் என்ன?

அத்தகைய பிரச்சனைகள் ஆவன.

தொற்று உண்டாதல். பெரிடோனியம் தொற்றுக்கு உள்ளாவது ஒரு பிரச்சனை. மற்றும் அடி வயிற்றில் வலி, காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல் மற்றும் கலங்கி வெளி வரும் திரவம் போன்றவை பொதுவாக ஏறும் பிரச்சனைகள் ஆகும். இதற்கு கடுமையான மேற்பார்வையுடன் கூடிய தொற்றுக்கள் புகாமல் இருக்குமாறு குழுவை அமைத்து சிகிச்சையைத் தொடரவும். தேவைப் பட்டால் பல நோக்குதிறன் கொண்ட ஆண்டிபயாடிக்குகளை உபயோகிக்க வேண்டும். வெளி வரும் பி.டி. திரவத்தை கல்சர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு சிலருக்கு பி.டி. கதிட்டரை அகற்ற வேண்டிய அவசியமும் இருக்கும். திரவம் வெளியேறும் இடத்தில் ஒரு தொற்றுக் கூட வரலாம். அங்குதான் கதிட்டரை சொருகுவார்கள்.

CAPD நோயாளிகளுக்கு தொற்று வராமல் பாதுகாப்பதுதான் தலையாய கடமை

இதர பிரச்சனைகள். அடிவயிறு தொய்வைடைந்து கீழே போய்விடுவது, அடிவயிற்று தசைகள் நலிவாதல், அதன் மூலம் ஹெர்னியா உருவாகி விடுதல், உடலில் தங்கும் திரவங்கள் அதிக எடையுடன் கூடி விடுவது, மலச் சிக்கல், மற்றும் அடிவயிற்றில் உருவாகும் இம்மா, வெளியேறும் சிறு நீரின் அளவு குறைந்து விடுதல், திரவங்களின் கசிவு மற்றும் உடல் எடை கூடுதல் போன்றவையே உடலுக்கு ஏற்படும் இதர பிரச்சனைகளாகும்.

CAPD யினால் வரும் நன்மைகள்.

  • உணவுப் பற்றிய மற்றும் பருகும் பானங்களில் அவ்வளவாக கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள வேண்டியது இல்லை.
  • மேலும் கொழுப்பு கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்ளலாம். டயாலிசிஸை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். அல்லது பிரயாணங்களின்போதும் வைத்துக் கொள்ளலாம். எந்தவிதமான அலுவலகையும் சிகிச்சையினால் தடைபடாது பார்த்துக் கொள்ளலாம். அவருடன் எந்த வித இயந்திரமும் பொருந்தப் படாது இருக்கும். உடன் ஆஸ்பத்திரி ஊழியர்களும் இருக்க மாட்டார்கள். அல்லது குடும்ப அங்கத்தினர்களும் இருக்க மாட்டார்கள்.
  • சரியாக மூன்று தடவைகள் ஒரு வாரத்திற்கு அவசியம் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் பயணம் செய்வதும் மற்றும் ஊசிக் குத்தல்களினால் வரும் வேதனை - இவற்றிலிருந்து பூரண விடுதலை.
  • உயர் இரத்த அழுத்தம் மேலும் திறன் கொண்டு கண்காணிக்கப் படுகிறது. இரத்த சோகையும் வராமல் பாதுகாக்கப் படுகிறது.
  • டயாலிசில் மெதுவாகவும், மிக மெதுவாகவும் நடைபெறுகிறது. இரத்தம் தொடர்ச்சியாக இலையறாமல் சுத்திகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்.

CAPD முறையை அனுசரிப்பதால் வரும் தீமைகள்.

  • பெரிடோனியம் அருகிலும் கதிட்டர் வெளியேற்றும் இடத்திலும் தொற்றுக்கள் வரக் கூடிய அபாயம் இருக்கிறது.
  • சம்பந்தப்பட்ட பட்ட நோயாளி ஒரு நாளைக்கு மிக கவனத்துடன் 3 - விருது 5 தடவைகள் சுத்திகரிப்பைச் செய்து கொள்ள வேண்டும். இதை வருடம் முழுவதும் செய்து கொள்ள வேண்டும். ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாள் கூட நிறுத்தாமல் செய்து கொண்டு வரல் வேண்டும். மிக உயர்ந்த தரத்தில் கற்றுப் புறத் தூய்மையைக் கையாள வேண்டும். இதை மிக நுணுக்கமாக, கவனமாக மற்றும் ஒழுங்கு தவறாமல் செய்து வரல் வேண்டும்.
  • நிரந்தரமாக கதிட்டர் சொருகப்பட்டிருப்பதும் அடிவயிற்றில் விருந்து திரவத்தை வெளியேற்றும் விதமும் ஒரு சிலருக்குப்பிடிக்காமல் போகலாம். இது அவர்கள் முழுத் தோற்றத்தைக் கொஞ்சம் பாதிக்கவே செய்கிறது.
  • டயாலிசில் திரவத்தில் இருக்கும் சர்க்கரை கொஞ்சம் உடல் எடையைக் கூட்டவே செய்யலாம். அதனால் hypertriglyceridemia வை உருவாக்கும்.
  • வீட்டிலேயே எப்பொழுதும் கைவசம் நிறைய பி.டி. பைகளை ஸ்டாக்காக வைத்திருப்பது கொஞ்சம் அசௌகரியத்தைக் கொடுக்கலாம்.

மேற்கண்ட முறையின் பிரதான செனகியங்கள் : அது எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். கால நேரங்களில் நம் தேவைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம். உணவுப் பழக்க வழக்கங்களின் அவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையில்லை.

உணவுப் பழக்க முறைகளில் என்னென்ன மாற்றங்களை செய்து கொள்ள, மேற்கண்ட CAPD முறையில் சிகிச்சை பெறுவோருக்கு அறிவுறை சொல்ல வேண்டும்.

இந்த அறிவுரைகள் மிக முக்கியமானவை . சாதாரணமாக ஹீமோடயாலிசில் செய்து கொள்வோரை விட இவர்கள் சற்று வேறுபட்ட அறிவுரைகளையே அனுசரிக்கச் சொல்லப்படுவார்கள்.

  • உயர்ந்த அளவு புரோட்டீன் கொண்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். அதன் காரணமாக புரோட்டீன் குறைவினால் வரும் கேடுகளைத் தவிர்க்கலாம். பெரிடோனியல் டயாலிசில் காரணமாக புரோட்டீன் தொடர்ச்சியாக இழக்கப் படுகிறது.
  • க்ளோரிகை கணிசமாகக் குறைத்துக் கொள்வதின் மூலம், உடல் எடை கூடும் அபாயத்தைத் தவிர்க்கலாம். பி.டி. திரவத்தில் இருக்கும் சர்க்கரையும் மேலும் இவ்வகை நோயாளிகளுக்கு CAPD முறையை அனுசரிப்பதால் கூட்டி விடும்.
  • உப்பு மற்றும் இதர திரவங்களின் கலப்போடு இருக்கும் உணவு கட்டுப்பாடுகள் இந்த முறையில் சற்று குறைவே.
  • பொட்டாசியம் மற்றும் ஃபாஸ்பேட் மிக அதிகமாக உள்ள உணவுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப் படுகிறது.

இந்த முறையில் கழிவு நீரை அகற்றிக் கொள்ளும் நோயாளிகள் எப்பொழுது நர்சையோ அல்லது டாக்டரையோ அழைக்க வேண்டும்?

கீழ்க்கண்ட அவசரக் காலங்களில் டாக்டரையோ அல்லது நர்சையோ நோயாளிகள் அழைக்க வேண்டும்.

  • அடிவயிற்றில் வலி, காய்ச்சல் அல்லது உடல் சில்லிட்டுப் போதல் போன்ற சமயங்கள்.
  • வெளியேறும் திரவம், மஞ்சளாக, மேக மூட்ட நிறத்தில், அல்லது கலங்கலாக அல்லது இரத்தம் உடன் கசிந்து வந்தால்
  • வலி, சீழ், சிவப்பு நிறம், வீக்கம் அல்லது திரவம் வெளியேறும் இடத்தில் சுற்று வெப்பப்பதுபடன் உடல் காணப்படுதல்
  • வெளியேறும் திரவம் தடுக்கப் பட்டு வெளியேறுதல் அல்லது மலச் சிக்கல் ஏற்படுதல்
  • எதிர்பாராது ஏற்படும் உடல் எடை கூடுதல், குறிப்பான வகையில் வீங்குதல், மூச்சுத் திணறல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், அல்லது குறைந்த இரத்த அழுத்தம், உடல் எடை குறைதல், நெறி கட்டுதல், அல்லது மயக்கமான ஒரு நிலை.