படுக்கையில் சிறுநீர் கழித்து விடுதல்
படுக்கையில் சிறுநீர் கழித்து விடுதல், அல்லது பிரக்ஞையே இல்லாமல் சிறுநீர் கழித்து விடுதல், குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு நிலைமை. இதற்கு ஆங்கிலத்தில் “Nocturnal enuresis” என்று பெயர். இது சிறுநீரகக் கோளாறினால் அல்ல. அல்லது குழந்தைகளின் குறும்பு மனத்தால் வருவது அல்ல. பெரும்பாலான குழந்தைகளுக்கு இது தானாகவே நின்று விடும். எந்த சிகிச்சையும் தேவை இருக்காது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் நின்று விடும். இருந்தாலும் இது ஒரு சிறு தொல்லைதான். குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் இது ஒரு தொல்லைதான். தொடர்ந்த அசௌகரியத்தையும் மனதிற்குக் கூச்சத்தையும் இது கொடுக்கும்.
இதனால் அவதியுறும் குழந்தைகள் எத்தனை சதவீதம் பாதிக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் எப்பொழுது நிற்கிறது?
6 வயதிற்குக் குறைவாக இருக்கும் சிறுவர்களுக்கு இது அனேகமாக இருக்கத் தான் செய்கிறது. 5 வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு 15-லிருந்து 20 சதவீதம் தாக்குகிறது. வயது ஆக, ஆக, விகிதாசாரப்படி இந்தப் பழக்கம் குறைகிறது. 10 வயதில் இந்தப் பழக்கம் 5 சதவீதமாகவும், 15 வருடங்களில் 2 சதவீதமே இருப்பதாகவும் தெரிகிறது. வயதானவர்களில் 1 சதவீதமே இந்தப் பழக்கத்தால் அவதியுறுகிறார்கள்.
எவ்வகை சிறுவர்களுக்கு இது பெரும்பாலும் ஏற்படும்?
- எந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் இந்தப் பழக்கத்தினால் அவதியுற்றார்களோ அந்தக் குழந்தைகளுக்கு இது வரும்.
- எந்தக் குழந்தைகளுக்கு நரம்பியல் குறைபாடுகளால் சிறுநீர்ப் பை நிரம்புவதை அறிய முடியவில்லையோ, அந்தக் குழந்தைகளுக்கு இது ஏற்படும்.
- மிக ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஏற்படும்.
- இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது
- பிரச்சனையே மன அழுத்தத்தாலோ அல்லது உடலுக்கு ஏற்பட்ட அழுத்தத்தாலோதான் ஆரம்பிக்கும் அல்லது பெரிதாகும்.
- குழந்தைகளின் சிறு அளவு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உள்ளவர்களுக்கு மருத்துவ காரணங்களினால் இது ஏற்படும்.
- அதாவது சிறுநீர்ப் பாதையில் வரும் தொற்றுகள், நீரிழிவு நோய், சிறுநீரகங்கள் செயலிழத்தல், சினைப்புறு புற்றுக்கள், மலச்சிக்கல், சிறுநீர்ப் பை, முதுகுத் தண்டில் ஒரு அசாதாரண நிலையை அல்லது புற்றின் வால்வுகளில் குறைபாடு, அதுவும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுவது – போன்றவையே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.
இந்தக் குறைக்கு சிகிச்சைகள் எப்படிச் செய்யப் படுகின்றன? எவ்வகைச் சோதனைகள் செய்யப் படுகின்றன?
மருத்துவ பிரச்சனையோ அல்லது அமைப்புக் கோளாறுகளால் பிரச்சனை தோன்றும்போது ஒரு சில குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து சோதனைகள் செய்யப் படுகின்றன. அதுவும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடும் குழந்தைகளோ தேர்வு செய்து சோதிக்கப் படுகிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செய்யப் படும் சோதனைகளாவன – சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் குளுக்கோஸ், முதுகுத் தண்டின் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்டு சோதனைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன.
சிகிச்சை.
படுக்கையில் சிறுநீர் கழித்து விடுதல் என்பது மிக மிக தானாகவே ஏற்பட்டு விடும் நிகழ்வு. எந்தக் குழந்தையையும்
தயவுசெய்து கூச்சலிட்டு, தண்டித்து அல்லது அடித்து விடாதீர்கள். குழந்தையைத் தண்டிப்பதை விட்டு விட்டு, "கூடிய சீக்கிரம் இந்தப் பழக்கம் நின்று விடும். கவலைப் படாதே" என்று அவனுக்கு தைரியமூட்டுங்கள்.
இந்த சிகிச்சைக்கு ஆரம்பமே குழந்தைக்கு முறையான கல்வி புகட்டுதல், குறிப்பிட்ட நேரங்களில் அதற்கு மனதை மாற்றுதல், மற்றும் கூடி நீர்ப் பற்றுவதில் மாற்றங்களைக் கொண்டு வருதல் போன்றவை. இவற்றால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கவில்லை என்றால், சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் ஒரு அலாரம் ஒலி எழுப்புவது அல்லது மருத்துவம் என்று முயற்சி செய்யலாம்.
1. முறையான கல்வி புகட்டுதலும் மனதை மாற்றும் முயற்சிகளும்
- குழந்தைக்கு முற்றிலுமாகத் தகுந்த கல்வியை இந்த நோக்கில் புகட்ட வேண்டும்.
- இது குழந்தைகளிடம் இருக்கும் குறையினால் வருவது அல்ல என்பதைப் புரிந்துகொண்டு ஆத்திரமோ கோபமோ படவேண்டாம். குழந்தைகளைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாம்.
- படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குடும்பமே ஒன்று சேர்ந்து குழந்தைக்கு எடுத்துச் சொல்லி தைரியப்படுத்தி ஆசுவாசப்படுத்துதல் முக்கியம். வந்திருக்கும் பிரச்சனை மிகச் சிறியது என்று உணர்த்துதல் வேண்டும். அவசியம் அதைக் குணப்படுத்த முடியும் என்று தைரியப்படுத்துதல் வேண்டும்.
- டயப்பர்களைக் காட்டிலும் டிரெய்னிங் பேண்டுகளை உபயோகிக்கவும். படுக்கை அறையில் எரியும் விளக்கு இரவில் நன்றாகக் கண் தெரியும்படியாக வெளிச்சத்தைக் காட்டி, டாய்லட்டுக்கு வழியை எளிதாகக் காட்டட்டும்.
- உபயோகமாக ஒரு ஜோடி பைஜாமாக்கள், பெட்ஷீட் மற்றும் ஒரு டவல் – இவற்றை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கவும்.
- ஒருவேளை சிறுநீர் கழித்த குழந்தை எழ நேர்ந்தால், இவற்றை மாற்றி உடையாக அணியலாம்.
- படுக்கும் படுக்கை மீது ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து, படுக்கை ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- படுக்கையில் பெட்ஷீட்டுக்குக் கீழே ஒரு பெரிய துண்டை விரித்து மேலும் சிறுநீரை உறிஞ்சிக் கொள்ள வசதியாக வைத்துக் கொள்ளலாம்
- தினந்தோறும் அவசியம் குளிப்பதை ஊக்குவித்து உடலில் சிறுநீரின் நாற்றம் இல்லாமல் செய்யவும்.
- என்றைக்காவது அவன் படுக்கையில் சிறுநீர் கழிக்க வில்லையானால் அன்றைக்கு அவனுக்கு ஒரு சிறு பரிசு ஒன்றைக் கொடுக்கவும். பரிசு சிறியதாக இருந்தாலும், குழந்தைக்கு அது பெரிதாகத் தோன்றும்.
- மலச்சிக்கலை அலட்சியம் செய்யக் கூடாது. அதை உடனுக்குடன் கவனிக்க வேண்டும்.
2. பருகப்படும் திரவங்களின் அளவு.
- பருகப்படும் எந்த திரவத்தையும் படுப்பதற்கு இரண்டு மூன்று மணி நேரம் முன்னரே பருகி விடவும். ஆனால் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ள வேண்டிய நீரின் அளவைக் குறைக்க வேண்டாம்.
- காபி, டீ, கோலா பானங்களையும் சாக்லேட்டுகளையும் மாலையில் தவிர்க்கவும். அவை சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வைத் தூண்டும்.
3. படுக்கப் போகும் முன் சிறுநீர் கழித்தல்
- படுக்கச் செல்லும் முன் இரு முறைகள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும். முதல் முறையை வழக்கமாக படுக்கை அறைக்குள் செல்லும் முன்னும் இரண்டாவது முறை தூக்கம் வருவதற்கு சற்று முன்பும் சிறுநீர் கழிக்கச் சொல்லவும்.
- நாள் முழுவதுமே டாய்லட்டுக்குப் போகும் பழக்கத்தை முறையான இடைவெளிகளில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- குழந்தை தூங்கச் சென்றபின் மூன்று மணி நேரங்கள் கழித்து அவனைத் தூக்கத்தில் எழுப்ப சிறுநீர் கழிக்கச் சொல்லவும். தேவைப்பட்டால் இதற்காக ஒரு அலாரம் ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.
4. அலாரம் மணி ஒலி
- இளைய குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விடாமல் இருக்கச் செய்யும் சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காகவே இந்த மணி ஒலி ஒலிக்கச் செய்யப் படும்.
- இந்த அலாரத்தை இயக்க குழந்தையின் உள்ளாடையோடு ஒரு "உணரும்" சாதனம் பொருத்தப் படுகிறது. படுக்கையில் குழந்தை சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன், அதன் முதல் துளி இந்த சாதனத்தால், "உணரப்" படுகிறது. அப்படி உணர்ந்தவுடன் அலாரம் மணி ஒலி எழுப்புகிறது. குழந்தை விழித்துக் கொண்டு விடும். விழித்தவுடன் உடனே அது டாய்லட்டை நோக்கி ஓடும். அதுவரை அது பொறுத்துக் கொள்ளும்.
- இந்த அலாரம் மணி ஒலியே குழந்தைக்கு ஒரு பயிற்சியைக் கொடுத்து விடும்.
5. சிறுநீர்ப் பையைச் சார்ந்த ஒரு பயிற்சி
- செல்லும் முன் கொடுக்கப் படுகிறது. இந்த மருந்து சிறுநீர்ப் பையின் தசைகளைத் தளர்த்துகிறது. அதனால் சிறுநீர்ப் பை அதிகமான சிறுநீரைத் தாங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாதது.
- ஒருநாளில் குழந்தையை நிரம்ப குடிநீர்க் குடிக்கச் சொல்லி, சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு வரும்போது, அடக்கிக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்லப் படுகிறார்கள். குழந்தைகள் அடக்கிக் கொள்ளும். இப்பழக்கமே சிறுநீர்ப் பையை வலிமைப் படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்கச் செய்யும். பயிற்சியால் நாள் செல்லச் செல்ல அந்தப் பையில் சிறுநீர் அதிகமான அளவைக் கொண்டாகி விடும்.
6. மருந்து சிகிச்சை
கடைசியாக, எதுவும் பலனளிக்காவிட்டால், மருந்துகளை உபயோகித்து படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம். 7 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்குத் தான் மருந்துகள் கொடுக்கப் படும். அவை திறன் மிக்கவையே. ஆனால் அவை சிறு நீர் கழிக்கும் உணர்வை நிறுத்தப் போவதில்லை. இது ஒரு தற்காலிக சாதனம். மருந்தை நிறுத்தியவுடன், படுக்கையில் சிறுநீர் கழிப்பது தொடர ஆரம்பிக்கும். நிரந்தர குணப்படுத்துவதற்கு அலாரம் போன்ற வசதிகளே சிறந்தவை.
A. Desmopressin Acetate (DDAVP) இந்த மாத்திரை எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது. இவற்றையே வேறு எந்த வழியும் வெற்றி தராத பொழுது உபயோகிக்கலாம். இந்த மருந்து இரவு வேளைகளில் வரும் சிறுநீரின் அளவைக் குறைக்கிறது. ஆகவே எந்தக் குழந்தைகள் வெகு அதிகமான அளவில் சிறுநீர் கழிக்கிறார்களோ அவர்களுக்கே இந்த மருந்து உதவும். இந்த மருந்தை குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது மாலை வேளைகளில் குழந்தை குடிக்கும் திரவங்களின் அளவைக் குறைக்கவும். வழக்கமாக படுக்கச் செல்லும் முன்னரே இந்த மருந்து கொடுக்கப் படுகிறது. குழந்தை ஏற்கனவே திரவங்களை அதிக அளவில் குடித்திருந்தால், இந்த மருந்தை இரவில் கொடுக்க வேண்டாம்.
இந்த மருந்து திறன் வாய்ந்தது. பக்க விளைவுகள் குறைவு. ஆனால் இதன் விலை மிக அதிகமாக இருப்பதால், பல பெற்றோர்களால் இது வாங்க முடியாத நிலை இருக்கலாம்.
B. Imipramine (tricyclic antidepressants) இந்த மருந்து சிறுநீர்ப் பையைத் தளர்த்திக் கொடுக்கும் சக்தி உடையது. அதன் மூலம் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு அதிகரிக்கும். இந்த மருந்து வழக்கமாக 3 முதல் 6 மாதங்கள் வரைக்கும் உபயோகிக்கப் படுகிறது. இதன் விளைவு விரைவாகவே செயல்படுவதால், இந்த மருந்து படுக்கப் போவதற்கு 1 மணி நேரம் முன்பாகவே எடுத்துக் கொள்ளப் படும். இந்த மருந்து மிக உயர்ந்த திறன் கொண்டது. ஆனால் இதற்கு அதிக பக்க விளைவுகள் இருப்பதால், இதைத் தேவைப்பட்டால் மட்டுமே உபயோகிப்பதுண்டு.
C. Oxybutynin: (anticholinergic drugs) என்ற இந்த மருந்தை பகல் பொழுதில் உபயோகிக்கலாம். இந்த மருந்து சிறுநீர் பை சுருங்குவதைக் குறைத்து அதன் கொள்ளளவைக் கூட்டுகிறது. பக்க விளைவுகளாக வாய் உலர்ந்து போதல், முகம் வெளிறிப் போதல் மற்றும் மலச்சிக்கல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த எப்பொழுது மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்?
- பகல் பொழுதிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால்,
- குழந்தைக்கு 7 அல்லது 8 வயதிற்கு மேலும் பழக்கம் தொடர்ந்தால்,
- இடையே பழக்கம் நின்று விட்டுக் குறைந்த பட்சம் 6 மாதம் கழித்து குழந்தைக்கு மீண்டும் அந்தப் பழக்கம் வந்தால்,
- மலம் கழிப்பதில் எந்தவித கட்டுப்பாடும் அற்றுப் போய் விட்டால்,
- காய்ச்சல், வலி, எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அசாதாரணமான அளவில் தாகம், முகம், பாதங்கள் வீங்குதல்,
- வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவு, வலியோடு சிறுநீர் கழித்தல்.