நீண்ட நாள் தொடரும் சிறுநீரக நோய்களுக்குச் சிகிச்சை
சிகிச்சையை இதற்கு மூன்று வகைகளில் மேற்கொள்ளலாம். அவையாவன: மருந்திலேயே மேலாண்மை செய்வது, டயாலிசிஸ் மற்றும் மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவது ஆகும்.
- இத்தகைய நோயாளிகள் யாவரும் ஆரம்ப காலத்தில் வெறும் மருந்துவத்திலேயே சிகிச்சையைத் தொடருவார்கள்
- (மருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள், மற்றும் முறையாகக் கவனம் கொள்வது)
- சிறுநீரகங்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்தால், டயாலிசிஸ் மூலமாகவோ அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவது மூலமோ சரி செய்யலாம்.
மருத்துவ சிகிச்சைகள்
இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை ஏன் செய்ய வேண்டும்?
நீண்ட நாள் இருந்து தாக்கும் இந்த நோய்க்கு முழுமையாகக் குணப்படுத்த இயலாது. மிக மிக மோசமான நிலையில் டயாலிசிஸ் அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துதல் அவசியமாகும். அப்பொழுதுதான் உயிர் பிழைக்கும் என்றால் அப்படிச் செய்ய வேண்டும். விலை மிக உயர்வாக இருப்பதால், இந்தியாவில் 5-10 சதவீத நோயாளிகளுக்கே டயாலிசிஸ் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ளவர்கள் இறந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே ஆரம்ப காலத்திலேயே நோயைக் கண்டு கொண்டு சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது. அது ஒன்றுதான் வழி. செலவும் குறைவாகும். அதன் மூலம் டயாலிசிஸின் தேவையைக் குறைக்கலாம். அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவதைத் தள்ளிப் போடலாம்.
இந்த நீண்ட நாள் தாக்கும் நோய்க்கு, டயாலிசிஸ், ஏன் மருத்துவத்தின் பயனை உணர மாட்டார்கள் என்கிறார்கள்?
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் போவதுதான் ஒரு குறை. அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் எதுவுமே சௌகரியத்தைக் கொடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். மருத்துவத்தை நடுவில் நிறுத்தினால், நிலைமை படு மோசமாகி விடும். அதற்குப் பிறகு சில நாட்களுக்குள்ளேயே அவர்களுக்கு மிகுந்த செலவில் சிகிச்சையை ஆரம்பிக்க நேரிடும். அது டயாலிசிஸ் ஆகவோ அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவதாகவோ ஆகலாம்.
மருத்துவத்தில் இந்த நோயைக் கையாள்வதன் நோக்கங்கள் என்ன?
நீண்ட நாட்களுக்குத் தொடரும் இந்த நோயானது மெல்ல மெல்லத் தொடர்ந்து கொண்டே செல்லும் ஒன்றாகும். இதற்கு முழுமையாகக் குணப்படுத்த இயலாது. இதை மருத்துவத்தால் கையாளும்போது இருக்க வேண்டிய நோக்கங்கள்:
- நோயின் தொடர்ச்சியைக் குறைத்தல்
- அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு மருந்து கொடுத்தல், மற்றும் நோயை உருவாக்கிய காரணங்களை ஆராய்தல்.
- அறிகுறிகளை அகற்றச் செய்து நோயின் சிக்கல்களை அகற்றுவதற்கு மருந்து கொடுக்க வேண்டும்.
- இருதயத்தைச் சுற்றி ஓடும் இரத்தக் குழாய்களைப் பாதிக்கும் சாத்தியக்கூற்றை முதலில் அகற்ற வழி காண வேண்டும்.
- டயாலிசிஸிற்கோ அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் தேவையைத் தள்ளிப் போட வேண்டும்.
சிகிச்சையின் பல்வேறு உத்திகளும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளும். கீழ்க் காணும் அட்டவணையில் அந்த உத்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
| நோயின் நிலை |
பரிந்துரைக்கப்படும் சிகிச்சை |
| எல்லா நிலைகளிலும் இதைச் செய்யவும் |
முறையாகவும் தொடர்ந்து நோயைக் கவனித்து வரவும் வாழ்க்கை நடைமுறைகளையும், பொதுவான நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வரவும். நோயாளிகளுக்கு நோயைப் பற்றிய அடிப்படைக் கல்வியைப் புகட்டி வரவும் |
| 1 |
நோய் தொடர்வதன் வேகத்தை மிதப்படுத்துவதை அறிந்து கொள்வதையும், சிகிச்சை தருவதையும் மேற்கொள்ளுங்கள் |
| 2 |
நோய் தொடர்வதைக் கூர்மையாகக் கவனித்து கணிக்கவும். உடன் சேரும் மனத்தொல்லையைக் கண்டு வரும் நிலைகளைக் கவனித்து சிகிச்சை அளிக்கவும் |
| 3 |
சிக்கல்களைக் கணித்து / சிகிச்சை செய்யவும் சிறுநீரகங்களைப் பற்றி தெரிந்த நெஃப்ராலஜிஸ்ட்டிடம் நோயாளியைக் அழைத்துச் சென்று காண்பிக்கவும் |
| 4 |
சிக்கல்களைக் கணித்து / சிகிச்சை செய்யவும் சிறுநீரகங்களைப் பற்றி தெரிந்த நெஃப்ராலஜிஸ்ட்டிடம் நோயாளியைக் அழைத்துச் சென்று காண்பிக்கவும் |
| 5 |
டயாலிசிஸ் சிகிச்சையை ஆரம்பிப்பது அல்லது செயற்கைச் சிறுநீரகத்தைப் பொருத்துவதைச் செய்யவும் |
9. மருத்துவ சிகிச்சையைப் படிப்படியாக நிறைவேற்றுவது எப்படி?
1. அடிப்படை சிகிச்சையை எப்படி மேலாண்மை செய்வது.
கீழ்க்கண்ட வழியில் நோயைக் கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிக்கவும். அது நோயின் தொடர்ச்சியைத் தாமதப்படுத்தலாம். அல்லது தடுக்கலாம் அல்லது ஏன், நோயின் போக்கை மாற்றுத் திசையில் கூட திருப்பலாம்.
- நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தமும்
- சிறுநீர்ப்பாதை அடைப்புகளும் தொற்று பரவுதலும்
- Glomerulonephritis, renovascular disease, analgesic nephropathy etc. (குளோமரூலோநெஃப்ரைட்டிஸ், ரெனோவாஸ்குலர் டிசீஸ், அனல்ஜசிக் நெஃப்ரோபதி முதலியன.)
2. நோயின் தொடர்ச்சி வேகத்தை எப்படி மிதப்படுத்துவது?
மேற்கொள்ளும் வகையில் வேகத்தை மிதப்படுத்தும் வழிகளாவன:
- வெகுத் துல்லியமான அளவிலேயே இரத்த அழுத்தத்தை இருக்கச் செய்தல்.
- உட்கொள்ளப்படும் புரோட்டீனைக் கட்டுப்படுத்தல்
- உபரித் திரவத்தைக் குறைத்தலும் இரத்தச் சோகையைச் சரிசெய்தலும்.
3. துணை ஆதரவு தரும் சிகிச்சையும் அறிகுறிகளைக் களைய முற்படுதலும்
- நீர்க்கேப்சூல்கள் (மாத்திரைகள்) விழுங்கச் சொல்லி சிறுநீரின் அளவை அதிகரிக்கச் செய்து வீக்கத்தைக் குறைத்தல்
- வாந்தி எடுத்தலைக் குறைக்க மாத்திரைகளையும் வாயு உபத்திரவத்தைக் கண்டிக்கும் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளச் சொல்லுதல்.
- கால்ஷியம், ஃபாஸ்பேட் மருந்துகள், வைட்டமின் டி மின் செயல்திறன் படைத்த வடிவம், போன்ற பல மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.
- இரும்புச் சத்துக் கொண்ட மருந்தின் உதவியால், ஹீமோக்ளோபின் குறைந்த நிலையை சரி செய்யவும். விட்டமின் மாத்திரைகள், தனிச் சிறப்புக் கொண்ட erythropoietin (எரித்ரோபோயிடின்) ஊசியையும் போட்டுக் கொள்ளலாம்.
- இருதயத்தைச் சுற்றி ஓடும் இரத்தக் குழாய்களுக்கு ஏற்படும் எந்த ஆபத்தும் வராமல் தடுத்தலும், அன்றாடம் ஆஸ்பிரினைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரவும் – அது வேண்டாம் என்று சொல்லக் கூடிய அறிவுரை இல்லாதவரை அதைத் தொடரவும்.
4. திசை திருப்பும் காரணங்களை எப்படி நீக்குவது?
திசை திருப்புவதைத் தடுக்கும் காரணங்களை முழுமையாகக் கண்டறிந்து (இவைதான் நோயை முற்றச் செய்திருக்கும்) சிகிச்சை செய்யவும். இவற்றின் மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். இவ்வகையில் பொதுவாகக் காணப்படும் காரணங்களாவன:
- சிறுநீரின் கன அளவு குறைதல்
- மருந்துகளால் சிறுநீரகங்கள் செயலிழக்கச் செய்தல் (ஸ்டெராய்டு அல்லாததும் வீக்கத்திற்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்துகள்) nsaids, contrast agents, aminoglycosides antibiotics போன்ற மருந்துகளாகும் அல்லது.
- தொற்று நோய்களும் இருதயத்திற்கு அழுத்தத்தைக் கொண்டு வந்து செயலிழக்கச் செய்யும் நோய்களாகும்.
5. இந்த நோயின் முற்றிய நிலையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு கொண்டு சிகிச்சை செய்தல்
இந்த சிக்கல்களைக் கண்டு கொண்டாலே போதும். அப்படிக் கண்டு கொண்டு உடனுக்குடன் சிகிச்சை மேற்கொண்டாலே போதும். பொதுவாக ஏற்படும் சிக்கல்கள் இவைதான். திரவங்களின் மிக அதிக சேர்க்கை. இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தல், சிறுநீரகப் பாதிப்பினால் இருதயத்திற்கு, மூளைக்கு மற்றும் நரம்புகளுக்கு வரும் மிக மோசமான கேடுகள் போன்றவை ஆகும்.
6. வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுதலும், பொதுவாக அனுசரிக்க வேண்டிய நிலைகளும்
கீழ்க்கண்ட வழிகள் அவசியம் ஒட்டு மொத்தமான அபாய சாத்தியக்கூறுகளை அகற்றுவதற்கு அனுசரித்தே ஆக வேண்டும்.
- புகை பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.
- ஆரோக்கிய நிலையிலேயே உடல் எடையை வைக்க வேண்டும். முறையாக காலம் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். என்றென்றைக்கும் உடல் உழைப்பில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும். முறையாகவும் இருக்க வேண்டும்.
- மது அருந்துவதை மிகமான எல்லைக்குள் வைக்கவும்.
- ஆரோக்கியமான உணவு முறைப் பழக்கத்தைக் கைக் கொள்ளவும். உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்வதைக் குறைக்கவும்.
- மருத்துவர் சொல்லியபடியே மருந்தை எடுத்துக் கொள்ளவும். சிறுநீரகக் கோளாறுகளைப் பொறுத்தே மருந்தின் அளவை அவ்வப்போது மாற்றிக் கொள்ளவும்.
நெஃப்ராலஜிஸ்ட் அறிவுரை தக்க வகையில் மருத்துவத்தைத் தொடர்ந்து வரவும்
7. உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடுகள்
நோயின் தீவிரத்தையும் வகையையும் பொறுத்து, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில உணவுப் பழக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
உணவுப் பழக்கங்களில் ஓர் கட்டுப்பாடு.
சிறுநீரகங்கள் பழுதாகி இருப்பதன் வீரியத்தைப் பொறுத்து உணவுப் பழக்க வழக்கங்களில் ஒரு தீவிர கட்டுப்பாடு அவசியம் வேண்டும். (இதை வெகு விரிவாக அத்தியாயம் 27 ல் எழுதப்பட்டிருக்கிறது.)
- உப்பு. (சோடியம்.) உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பைக் கட்டுப்படுத்தினால், உயர் இரத்த அழுத்தம் கண்காணிக்கப்படும். வீக்கங்களையும் இது கட்டுப்படுத்தும். உணவில் அதிகம் சேர்க்கப்படாமல் இருப்பதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பதிலுமே இருக்கிறது. டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் அனைத்து உணவுப் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
- உட்கொள்ளப்படும் திரவங்களின் அளவு இந்த நோயுடையவர்களுக்கு குறைந்த அளவு சிறுநீர் கழித்தல் வீக்கங்களைக் கொண்டு வரும். ஒரு சில மோசமான நிலைகளில் மூச்சுத் திணறலையும் அது கொண்டு வரும். ஆகவே இந்த நோய் தாக்கம் உடைய எல்லா நோயாளிகளுக்கும் உட்கொள்ளப்படும் திரவங்களின் அளவு நிச்சயம் குறைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- பொட்டாசியம். இதன் அளவில் அதிகமாக இருப்பதும் இவ்வகை நோயாளிகளுக்கு ஒரு பிரச்சனை. அந்த அதிக அளவு இருதயத்தின் செயல்பாட்டில் தீய விளைவுகளைக் கொண்டு வரும். இதைத் தடுக்க பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப் பண்டங்களைத் தவிர்க்கவும். (உலர்ந்த பழங்கள், இனிப்பு, உருளைக்கிழங்கு, ஆரஞ்சுப் பழங்கள், வாழைப்பழங்கள், தக்காளி போன்றவற்றை தவிர்க்கவும்.) அல்லது மருத்துவரின் ஆலோசனை கேட்டு தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும்.
- புரோட்டீன். புரோட்டீன் மிகுதியாக உள்ள உணவை நிச்சயமாகத் தவிர்க்கவும். புரோட்டீன் அதிக அளவு உட்கொள்ளப்படுதல் சிறுநீரகங்கள் பாழாவதைத் துரிதப்படுத்தும்.
8. சிறுநீரகங்களை மாற்றும் வேளையில் ஒரு தயார் நிலை.
- இடது கையின் முன்புறம் இருக்கும் இரத்தக் குழாய்களை முதலில் பாதுகாக்கவும். (non-dominant side) இதை நோயைக் கண்டறிந்தவுடனேயே செய்யவும்.
- எந்த ஒரு இரத்த பரிசோதனைக்கும் மேற்சொன்ன கையுறையில் இருக்கும் இரத்த குழாய்களிலிருந்து எடுக்கக் கூடாது.
- நோயாளிகளுக்கு நோயைப் பற்றிய கல்வியைப் புகட்டவும். அவர்களுக்குக் குறைந்த பட்சம் 6 முதல் 12 மாதங்களுக்கு முன்பிருந்தே ஹீமோடையாலிசிஸுக்கு தயார்ப்படுத்தவும்.
- இந்த நோயின் ஆரம்பத்திலேயே hepatitis B ஊசியைப் போட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. டயாலிசிஸ் சிகிச்சையின்போது இது நோயின் தொற்று வராமல் தடுக்கும்; அல்லது மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்தும்போது தொற்று வராமல் தடுக்கும். (இரண்டு டோஸ்கள் அல்லது நான்கு டோஸ்கள் (0,1,2 மற்றும் 6 மாதங்கள்) என்ற முறையில் ஊசிகள் போட வேண்டும் அதை டெல்டாய்ட் பகுதியில் போட வேண்டும்.
- நோயாளிகளுக்கு போதுமான நோய்ப்பற்றிய கல்வியை ஊட்டி, டயாலிசிஸுக்கு அவர்களை தயார் செய்யவும். அதன் மூலம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு முன்பே ஏற்படும் நல் விளைவுகளைக் கவனிக்கவும். அதற்கு என்ன விளக்கம் என்றால், ஒரு மாற்று சிறுநீரத்தை உயிருள்ள ஒருவிடமிருந்து பெறுவதற்கு முன்பே அதாவது டயாலிசிஸ் செய்யப்படுவதற்கு முன்பே, வருகின்ற நன்மைகள் என்று பொருள்
9. நெஃப்ராலஜிஸ்ட்டிடம்
எப்பொழுது ஆலோசனை பெறுதல் வேண்டும்?
இவ்வகை நோயாளிகள் மிக சீக்கிரமாகவே மேற்சொன்ன மருத்துவரைக் கண்டு ஆலோசிக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசிப்பதும், டயாலிசிஸுக்கு முன் பெறும் கல்வியும் நோயாளிக்கு மனத் தொல்லையோ இறப்பையோ ஏற்படுத்தாது. விரைவாக ஆலோசனை பெறுதல் நோய் முற்றுவதைத் தடுக்கிறது. அதனுடன் முடிவு வரும் நிலைக்கு நோயை விரைவாகத் தள்ளாது. ஆகவே சிறுநீரகத்தை மாற்றும் முயற்சியை சற்று தள்ளிப் போட உதவுகிறது.
இந்த நோயைக் கண்டறிப்பதற்கும் மற்றும் நிலைக்கு அது முன்னேறுவதை எப்படி நிதானப்படுத்துவது ஆகும்?
இந்த நோய்க்கு ஏது வேண்டுமானாலும் அடிப்படைக் காரணமாக இருந்தாலும், இரத்த அழுத்தத்தை சரியாகக் கட்டுப்படுத்தி வந்தால் அதுவே மிக முக்கியமான சிகிச்சையாகிறது. கட்டுக்குள் அடங்காத நிலையில் இரத்த அழுத்தம் இருந்து கொண்டிருந்தால், இந்த நோய் மிக வேகமாக முற்றுக் கூடிய அபாயம் இருக்கிறது. இருதயப் பாதிப்பும் பக்க வாத நோய் தாக்கக் கூடிய அபாயமும் சேரும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டிப்புக்கும் மருந்துகள் யாவை?
மருத்துவரே உங்களுக்கு அந்த மருந்துகளைத் தேர்வு செய்து பரிந்துரைப்பார். மிகவும் சாதாரணமாக உபயோகிக்கப்படும் மருந்துகள் ஆவன: angiotensin converting enzyme inhibitors, angiotensin receptor blockers, calcium channel blockers, beta blockers and diuretics. (ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம், துடுப்பு மருந்துகள், ஆங்கியோ டென்சின் வாங்கிக்கொள்ளும் மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்கள், பீட்டா பிளாக்கர்கள், டையூரடிக்ஸ்).
முதல் இரண்டு மருந்துகளும் முதல் வரிசை மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோயின் தீவிரம் மிகைப்படாமல் பாதுகாக்கும். அதுவே சிறுநீரகங்களைப் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என்றால் என்ன?
நீண்ட நாட்கள் தொடரும் இந்த நோய் உயர் இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணியும் அதை அதிகரிக்கச் செய்யவும் வாய்ப்பு உண்டு. ஆகவே இரத்த அழுத்தத்தை எப்போதும் 130/80 மி.மீ.க்கு குறைவாகவே வைத்திருங்கள்.
இரத்த அழுத்தத்தை அளப்பதற்கு ஏது மிகவும் உகந்த வழியாகும்? அதே போல் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் உகந்த வழி எது?
அடிக்கடி மருத்துவரைச் சந்திக்கும்போது இரத்த அழுத்தத்தை அளந்து பார்ப்பது மேல். அதைவிட அதிகென்று விற்கப்படும் உபகரணத்தை மார்க்கெட்டில் வாங்கி தனக்குத் தானே பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. அப்படிச் செய்து வந்தால், கட்டுப்பாட்டுக்கு மருந்துகளையும் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் அளவு எடுத்துக் கொள்ளலாம். இரத்த அழுத்த அளவுகளை ஒரு வரைபடத்தில் குறித்து வாருங்கள். அந்தப் படம் மருத்துவர் பார்த்து மருந்துகள் பரிந்துரைக்க உதவும்.
diuretics மருந்துகள் இந்த நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது?
சிறுநீரின் அளவு குறைந்தால், வீக்கம் உண்டாகும். ஏன், மூச்சுத் திணறலும் கூடவே உருவாகும். இந்த வகை மருந்துகள் சிறுநீரின் அளவை அதிகரிக்கும். வீக்கங்களைக் குறைத்து, மூச்சுத் திணறலைக் குறைக்கும். ஆனால் ஒன்று குறிப்பத்தில் வைத்துக் கொள்வது நலம். அதாவது இந்த மருந்துகள், சிறுநீரின் அளவைக் கூட்டுமே; ஒழிய, சிறுநீரகங்களின் செயல்பாட்டில் எந்தவித மேம்பாட்டையும் காண்பிக்காது.
இவ்வகை நோய் தாக்கும்போது இரத்தச் சோகை ஏன் ஏற்படுகிறது?
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, erythropoietin எனும் ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதுவே எலும்புகளின் மூலமாக சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த நோய்களின் காரணமாக, சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறன் குறையும்போது, இந்த ஹார்மோனின் உற்பத்தியும் குறைந்து இரத்தச் சோகைக்குக் காரணமாகிறது.
இரும்புச் சத்தைக் கொடுக்கும் மாத்திரைகள், சில சமயங்களில் விட்டமின்கள், நரம்பு ஊசிகளின் மூலம் அவற்றை உடலுக்குள் செலுத்துதல், போன்றவையே முதன் முதலில் இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகளாகும். மிக மோசமாக வந்து தாக்கும் இந்த இரத்தச் சோகை அல்லது இதர மருந்துகளுக்குக் கட்டுப்படாத இரத்தச் சோகை ஏற்பட்டால் உடலுக்குள் ஊசிகள் மூலம் synthetic erythropoietin என்ற மருந்தைச் செலுத்த வேண்டும். அதன் மூலம் எலும்புக்குச் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொடுக்கலாம். அப்படி ஊசி மூலம் அந்த மருந்தை உடலுக்குள் ஏற்றுவது மிகப் பாதுகாப்பானதும், திறன் மிக்க வழியுமாகும். ஆகவே மிக அதிகம் கைப்பற்றும் வழியுமாகும்; அதைத் தவிர உடலுக்குள் இரத்தத்தை ஏற்றுவதும் இன்னொரு திறன்மிக்க வழியாகும். இது அவசரகால சிகிச்சையாகும். ஆனால் பெரும்பாலியாக இதை யாரும் பரிந்துரைக்காமல் விடுவதற்குக் காரணம் தொற்றுகள் தொற்றி விடும் அபாயம் இதில் இருக்கிறது.
இந்த நோயினால் வரும் இரத்தச் சோகையை ஏன் மருத்துவத்தால் நீக்க வேண்டும்?
நுரையீரலிலிருந்து பிராணவாயுவை சிவப்பு அணுக்கள் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன. அன்றாட உடலுழைப்புக்கு வேண்டிய சக்தியை எல்லாம் அவை கொண்டு செல்கின்றன. இரத்தச் சோகை அல்லது குறைவான அளவில் உள்ள ஹீமோக்ளோபின் உடல் சோர்வுக்கும், நலிவுக்கும், உடல் உழைப்பு உச்ச அளவுக்கு செய்ய முடியாமலும் கொண்டு சென்று விடுகிறது. உடலை வருத்திக் கொண்டால் ஏற்படும் களைப்பு, இருதயம் மிக வேகமாகத் துடித்தல், மனத்தை ஒன்று குவித்து எதிலும் ஈடுபட முடியாமல் போதல், குற்றமான வகையில் சுகிப்புத் தன்மை காணப்படுதல், மார்பு வலி முதலியவை ஏற்படும். ஆகவே இந்த நோயினால் வரும் இரத்தச் சோகைக்கு சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.